ருசியான மேகி உருளைகிழங்கு பால்ஸ் இப்படி செய்து பாருங்க! சூப்பரான ஸ்நாக்ஸ் ரெசபி மிஸ் பண்ணாதீங்க!

- Advertisement -

மேகி அப்டின்னு சொன்னாலே எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். இப்படி குழந்தைகள் மைண்ட்ல மேகி அப்படிங்கிற ஒரு விஷயத்தை ஈஸியாக புகுத்திட்டாங்க. சீன உணவுகளான நூடுல்ஸ்ல சில மாற்றங்களை கொண்டுவந்து இந்தியர்களுக்கு படிக்கிற மாதிரி மேகி அப்படிங்கிற ஒரு உணவை கொண்டு வந்து கொடுத்துட்டாங்க.

-விளம்பரம்-

ஆனால் நாம் நூடுல்ஸ் சொல்லாமல் கம்பெனி பெயர் தான் மேகி அப்படினு சொல்லுவோம். இங்க இருக்கிற நிறைய பொருட்களுக்கு நம்ம அதோட கம்பெனி பெயர்களை மட்டும் தான் பயன்படுத்துகிறோமே தவிர அந்த ப்ராடக்டோட ஒரிஜினல் பேரை சொல்றது கிடையாது. அப்படிதான் இந்த நூடுல்ஸ் மேகியா மாறி போச்சு. சரி அந்த மேகிய வச்சு நம்ம இப்போ ஒரு சுவையான உருளைக்கிழங்கு மேகி பால்ஸ் பண்ண போறோம்.

- Advertisement -

இந்த உருளைக்கிழங்கு மேகி பால்ஸ் ரொம்பவே நல்லா இருக்கும்.இது மாலை நேர சிற்றுண்டியா குழந்தைகளுக்கு கொடுத்தால் ரொம்பவே பிடிக்கும். இந்த உருளைக்கிழங்கு மேகி பால்ஸ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க. இது ரொம்ப சுலபமான ஒரு மாலை நேர சிற்றுண்டி ரொம்பவே சீக்கிரமா இத நம்ம செய்து கொடுத்து விடலாம். எல்லாருக்குமே ரொம்ப சுலபமான உருளைக்கிழங்கு மேகி பால் எப்படி செய்வது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Print
No ratings yet

மேகி உருளைகிழங்கு பால்ஸ் | Maggi Potato Balls In Tamil

மேகியவச்சு நம்ம இப்போ ஒரு சுவையான உருளைக்கிழங்கு மேகி பால்ஸ் பண்ண போறோம். இந்த உருளைக்கிழங்கு மேகி பால்ஸ் ரொம்பவே நல்லா இருக்கும்.இது மாலை நேர சிற்றுண்டியா குழந்தைகளுக்கு கொடுத்தால் ரொம்பவே பிடிக்கும். இந்த உருளைக்கிழங்கு மேகி பால்ஸ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவாங்க. இது ரொம்ப சுலபமான ஒரு மாலை நேர சிற்றுண்டி ரொம்பவே சீக்கிரமா இத நம்ம செய்துகொடுத்து விடலாம். எல்லாருக்குமே ரொம்ப சுலபமான உருளைக்கிழங்கு மேகி பால் எப்படி செய்வது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: Maggi Potato Balls
Yield: 4
Calories: 95kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 4 உருளைக்கிழங்கு
  • 1 பாக்கெட் மேகி
  • 1 வெங்காயம்
  • 12 கப் கேரட்
  • 12 கப் பீன்ஸ்
  • 1 கப் பிரட் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை

  •  முதலில் உருளைக்கிழங்கை கழுவி விட்டு வேகவைத்து தோலுரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு தோலுரித்த உருளைக்கிழங்குகளை மத்தால் மசித்து கொள்ளவும். மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுக்கக் கூடாது. மசித்த உருளைக்கிழங்குகளை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் , கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக பொன்னிறமாக வதங்கிய பிறகு அதில் கேரட் , பீன்ஸ் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  •  பிறகு அதில் காய்கறிகள் வேகுவதற்கு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாக கொதித்து வரும் பொழுது மேகி பாக்கெட்டில் உள்ள மேகி மசாலாவை சேர்த்து நன்றாக கலந்து விடவும். காய்கறிகள் வெந்த பிறகு அதில் மேகியை சேர்த்து நன்றாக கலந்து மூடி போட்டு வேக வைக்கவும்.

Nutrition

Serving: 100g | Calories: 95kcal | Carbohydrates: 25g | Fat: 12g | Saturated Fat: 1.8g | Trans Fat: 0.2g | Cholesterol: 94mg | Sodium: 316mg | Potassium: 292mg | Fiber: 0.9g

இதையும் படியுங்கள் :அட்டகாசமான நெல்லை ஸ்பெஷல் உருளைப் பொரியல் ரெசிபி உங்களுக்காக இதோ!