Advertisement
ஆன்மிக கதைகள்

மகாபாரத கதையில் சகுனி நல்லவனா ? கெட்டவனா ? முழு விளக்கம் இதோ!

Advertisement

மகாபாரதத்தில் சகுனியின் கதையோட்டத்தையும் அவன் பக்கம் இருக்கும் நியாத்தை பற்றியும் நாம் தொடர்ந்து பேசி வருகிறோம். சென்ற பாகத்தில் சகுனி கண்முன்னே அவர் தந்தை இறந்ததையும் சகுனியின் தந்தை சகுனிக்கு செய்த செயலையும் நாம் பார்த்தோம் அடுத்து என்ன நடந்தது என்று பார்க்கலாம்!

சகுனி பாகம் – 2

இப்படி சகுனியும் மற்ற சகோதரர்களும் தன் தந்தையும் சிறைச்சாலையில் நெடுநாள் அடைக்கப்பட்டு மடிந்து போன செய்தி காந்தாரி செவிக்கு எட்டியது. தன் தந்தை மற்றும் சகோதரர்கள் இறந்த செய்தியை அறிந்த காந்தாரி கடும் கோபம் கொண்டு சிறையில் உயிருடன் மிஞ்சி இருக்கும் தன் சகோதரன் சகுனியை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டாள் அதனால் சகுனியும் சிறையில் இருந்து விடுவிக்கபடுகிறான். சகுனி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதோடு காந்தாரிக்கு திருதிராஷ்டிரருக்க திருமணம் ஏற்பாடுகள் நடந்தது, அந்த திருமணத்திற்கு வரும் வரை காந்தாரிக்கு தெரியாது திருதிராஷ்ட்ரார் பார்வையற்றவர் என்பது தெரியாது. இந்த உண்மை முதலில் காந்தாரிக்கு தெரிந்ததும் அவள் மிகவும் வருத்தப்படுகிறார் இருந்தாலும் அந்த திருமணம் நடக்கும் இடத்தில் காந்தாரி செய்த செயல் அனைவரையும் வியக்க வைத்தது ஆம் காந்தாரி ஒரு துணியை எடுத்து தன் கண்ணையும் கட்டிக்கொண்டு இனி வாழ்நாள் முழுவதும் நான் இப்படித்தான் வாழப் போகிறேன் என்று கூறினாள். சகுனி ஏன் இவ்வாறு செய்கிறாய் என்று கேட்ட பொழுது என் கணவர் பார்க்காத உலகத்தை இனி நானும் பார்க்க போவதில்லை என்று கந்தாரி கூறினால். திருமணமும் முடிந்ததும் அவர்கள் வாழ்க்கையும் மெல்ல நகர தொடங்கியது இந்த இடத்தில் தான் சகுனி முதல் சூழ்ச்சி அரங்கேறுகிறது இதை சூழ்ச்சி என்று சொல்வதை விட தன் சகோதரியின் மேல் இருக்கும் பாசம் என்றும் கூட சொல்லலாம் திருமணம் முடிக்கும் வெகு நாட்களாக சகுனி தன் கூடவே இருப்பதை உணர்ந்த காந்தாரி சகுனியிடம் ஏன் இன்னும் இங்கயே இருக்கிறாய் என்று கேட்கிறார். அதற்கு சகுனி உன் கனவர்க்கு பார்வையும் கிடையாது இப்பொழுது அவருக்கு அரசர் என்ற பட்டமும் கிடையாது என்றால் எப்படி. அதனால் உன் கனவனை அஸ்தினாபுரத்திற்கு அரசராக்கி விட்டுதான் இங்கிருந்து செல்வேன் என்று தன்னுடைய முதல் சாபத்தை போடுகிறான் சபதம் போட்ட கையுடன் திருதிராஷ்டரை

Advertisement
தன் கைக்குள் போட நினைக்கிறேன் அதன்படி எப்பொழுதும் அவர் கூடவே இருக்கிறார் அவரிடம் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் சகுனி அடுத்த அரசராகப் போவது நீங்கள் தான் என்பதையும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார். அப்படி இருக்கையில் ஒருமுறை திருதிராஷ்டர் பார்வையற்ற நான் எப்படி அரசனாக முடியும் என்ற கேள்வி எழுப்புகிறார்.
Advertisement

அதற்கு சகுனியம் இப்போது நீங்கள் அரசனாகவில்லை என்றால் உங்களது சகோதரர் பாண்டு அரசனாக்கி விடுவார். அதன் பிறகு அரசராக கூடிய பாக்கியம் பாண்டுவின் புத்திரர்களுக்கு மட்டுமே கிடைக்கும். உங்கள் புத்திரர்களுக்கு இனி அரசாலும் தகுதி இருக்கப் போவதில்லை எனக் கூறி திருதிராஷ்டரரின் மனதில் அரசர் ஆக வேண்டும் என்ற ஆசையை தூண்டிவிடுகிறாரன். அதன் பின்பு திருதிராஷ்டிரனின் சகோதரன் பாண்டு முதலில் குந்தி திருமணம் செய்து கொள்கிறார் அதன் பின்பு மாத்ரி என்ற பெண்ணையும் திருமணம் செய்து கொண்டு இன்பமான ஒரு வாழ்க்கையை தான் அவர் வாழ்ந்து வருகிறார் ஆனால் அவருக்கு கிடைத்த ஒரு சாபத்தினால் அவர் இறந்து போகிறார். இந்த நேரத்தை கையில் பயன்படுத்திக் கொண்ட சகுனி தனது சூழ்ச்சியில் சூழ்ச்சியால் மிகவும் கஷ்டப்பட்டு பார்வையற்ற திருதிராஷ்டரை அஸ்தினாபுரத்திற்கு அரசன் ஆக்கி விடுகிறார். இப்படித்தான் சகுனி தான் முதல் சபதத்தை நிறைவேற்றினார் அதோடு மட்டுமில்லாமல் அரசனான திருதாராஷ்டரை தன் கைக்குள் வைத்துக் கொண்டார். அதன் பின் திருதிராஷ்டரர்க்கும் கந்தாரிக்கும் 100 குழந்தைகள் பிறாந்தவர்கள் அதில் முதன்மையானவர்கள் என்று பார்த்தால் துரியோதனன் துச்சாதனன். பாண்டுக்கும் ஐந்து புத்திரர்கள் தர்மன் அர்ஜுனன் பீஷ்மன் இவர்கள் மூவரும் குந்திக்கு பிறந்தவர்கள். மாத்ரிக்கு நகுலன் மற்றும் சகாதேவன். நான் அடைவில் இவர்களால் தன் சகோதரியின் புத்திரன் துரியோதனன் அரசன் ஆவதற்கு இடையூறு வரலாம் என்று நினைத்த சகுனி சிறுவயதிலிருந்தே துரியோதனிடம் நீ தான் அடுத்த அரசனாக வேண்டும் அதற்கு இவர்களெல்லாம் தடையூறாக இருப்பார்கள் அதனால் ஜாக்கிரதியாக இருக்க வேண்டும் என்று சொல்லி சொல்லியே வளர்கிறார் இப்படியாக துரியோதனனும் தன் மாமா சகுனியின் நிழலிலேயே சிறுவயதில் இருந்து வளர்ந்து வருகிறான்.

Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 20 மே 2024!

மேஷம் துணைவரின் ஆரோக்கியத்தில் முறையாக அக்கறையும் கவனமும் காட்ட வேண்டும். இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். நிலம், சொத்து…

44 seconds ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

9 மணி நேரங்கள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

17 மணி நேரங்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

21 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

1 நாள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

2 நாட்கள் ago