Advertisement
சட்னி

கொத்துமல்லி  தக்காளி தொக்கை ரொம்ப வித்தியாசமான சுவையில் இப்படி செஞ்சு பாருங்க சுவை அட்டகாசமா இருக்கும்!

Advertisement

தக்காளியுடன் கொத்தமல்லி சேரும் போது உணவின் சுவையும் மணமும் அருமையாக இருக்கும். இட்லி தோசைக்கு கொத்துமல்லி – தக்காளி தொக்கு ஒரு பெஸ்ட் காம்பினேஷன் தான். இந்த கொத்துமல்லி – தக்காளி தொக்கு இருக்கும் போது இரண்டு இட்லியாவது கூடுதலாக தான் சாப்பிடுவோம்.​கொத்தமல்லி இலைகளில் ஊட்டச்சத்து அதிகம் உள்ளது,நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ,​குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

இட்லி தோசை போன்ற டிபன் வகைகளுக்கு என்ன தான் சட்னி சாம்பார் போன்றவை செய்தாலும் இந்த கொத்துமல்லி – தக்காளி சட்னி ஒரு தனி சுவையை கொடுக்கும். இரண்டு இட்லி சாப்பிடுவர்கள் கூட கொத்துமல்லி – தக்காளி தொக்கு இருந்தால் கூட ஒன்று சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு இதன் காம்பினேஷன் நன்றாகவே இருக்கும். இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் அதை கொத்துமல்லி – தக்காளி தொக்கை கொஞ்சம் வித்தியாசமான சுவையில் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Advertisement

கொத்துமல்லி – தக்காளி தொக்கு | Coriander Tomato Thokku

Print Recipe
இட்லி தோசை போன்ற டிபன் வகைகளுக்கு என்ன தான்சட்னி சாம்பார் போன்றவை செய்தாலும் இந்த கொத்துமல்லி – தக்காளி சட்னி
Advertisement
ஒரு தனி சுவையைகொடுக்கும். இரண்டு இட்லி சாப்பிடுவர்கள் கூட கொத்துமல்லி – தக்காளி தொக்கு இருந்தால்கூட ஒன்று சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு இதன் காம்பினேஷன் நன்றாகவே இருக்கும். இப்போதுஇந்த சமையல் குறிப்பு பதிவில் அதை கொத்துமல்லி – தக்காளி தொக்கை கொஞ்சம் வித்தியாசமானசுவையில் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
Advertisement
Course chutney
Cuisine tamil nadu
Keyword Coriander Tomato Thokku
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 122

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 5 தக்காளி
  • 1/2 கட்டு மல்லித்தழை
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • புளி நெல்லிக்காய் அளவு
  • 2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 6 பூண்டு
  • பெருங்காயம் சிறிது
  • கறிவேப்பிலை சிறிது
  • உப்பு தேவையான அளவு
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • 1/4 டீஸ்பூன் சீரகப் பொடி
  • 1/4 கப் எண்ணெய்

Instructions

  • தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள், பூண்டை நசுக்கி கொள்ளுங்கள்.
  • எண்ணெயைக் காய வைத்து கடுகு, சீரகம், தாளித்து பூண்டை சேர்த்து, நன்கு சிவந்து பொன்னிறமாக பொரிந்ததும்,தக்காளியைச் சேருங்கள். அதனுடன் உப்பு, மிளகாய்தூள் சேருங்கள்.
     
  • அரை கப் கொதிநீரில் புளியைக் கரைத்து வடி கட்டுங்கள்.
  • இதனுடன் தக்காளி சேர்த்து கொதித்து, சேர்ந்து வரும்போது கறிவேப்பிலை, பொடி யாக நறுக்கிய மல்லித்தழையைப்போட்டு, வெந்தயத்தூள், பெருங் காயத்தூளை சேர்த்து சுருண்டு வரும்வரை கிளறி இறக்குங்கள்.

Nutrition

Serving: 300g | Calories: 122kcal | Protein: 16g | Fat: 6.6g | Saturated Fat: 1.2g | Cholesterol: 3.8mg | Sodium: 9.5mg | Potassium: 287mg | Fiber: 4.79g | Sugar: 2g
Advertisement
Prem Kumar

Recent Posts

பன்னீர் கேப்ஸிகம் மசாலா

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அதற்கு ஒரு சிம்பிளான அதே சமயம் வீட்டில் உள்ளோர் அனைவரும்…

8 மணி நேரங்கள் ago

மட்டன் மிளகு பிரட்டல் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க ரெண்டு தட்டு சோறு சாப்பிடுவாங்க!

மட்டன் எடுத்தா என்ன மட்டன் குழம்பு மட்டன் பிரியாணி மட்டன் கிரேவி மட்டன் சுக்கா அப்படின்னு நிறைய செஞ்சு சாப்பிட்டு…

12 மணி நேரங்கள் ago

ஒவ்வொரு சூழலிலும் ஒரு தெய்வத்தை எத்தனை முறை வளம் வந்து வழிபட்டால் முழு பலன் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்

நாம் பொதுவாக ஒரு கோவிலுக்கு சென்றால் அந்த கோவிலில் உள்ள தெய்வத்தை வழிபட்டு விட்டு தெய்வத்துடைய நாமத்தையோ அல்லது ஏதாவது…

12 மணி நேரங்கள் ago

வெறும் மூணு பொருள் மட்டும் வச்சி சுவையான வெள்ளரிப்பழ ஜூஸ் எப்படி செஞ்சு குடிச்சு பாருங்க!

பொதுவாவே வெள்ளரிக்காய் நம்ம உடம்புக்கு ரொம்ப நல்லது. உடம்புல இருக்க சூட்ட தனிச்சு உடம்புக்கு குளிர்ச்சியை கொடுக்கக் கூடியது தான்…

12 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு ருசியான புதினா பூரி இப்படி ஒரு தரம் செய்து பாருங்கள்! 2 பூரி அதிகமாவே சாப்பிடுவாங்க!

பூரி இந்தியாவின் புகழ்பெற்ற மற்றும் சுவையான காலை உணவு அல்லது சிற்றுண்டி. பூரி தென்னிந்தியாவில் உருளைக்கிழங்கு மசாலாவுடன் மற்றும் வட…

20 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 08 மே 2024!

மேஷம் நிதி நிலைமை நிச்சயமாக உயரும்- ஆனால் அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். மற்றவர்கள் பற்றியும் அவர்களுடைய நோக்கங்கள் பற்றியும்…

23 மணி நேரங்கள் ago