சுவையான தேங்காய் போளி இப்படி வீட்டிலேயே சுலபமாக செய்திட எளிதான செய்முறை!
கர்நாடக மாநிலத்தில் புகழ்பெற்ற இனிப்பு வகைகளில் பருப்பு போளி, தேங்காய் போளி முக்கிய பங்கு வகிக்கிறது. தசரா காலங்களில் அனைவரது வீட்டிலும் கட்டாய பலகாரமாக போளி இருக்கும். பண்டிகை காலங்களில் சர்க்கரை போலி அதாவது கடலைப்பருப்பும் வெல்லமும் சேர்த்து செய்த சர்க்கரை போலி அதிக அளவில் உண்ண
கர்நாடக மாநிலத்தில் புகழ்பெற்ற இனிப்பு வகைகளில் பருப்பு போளி, தேங்காய் போளி முக்கிய பங்கு வகிக்கிறது. தசரா காலங்களில் அனைவரது வீட்டிலும் கட்டாய பலகாரமாக போளி இருக்கும். பண்டிகை காலங்களில் சர்க்கரை போலி அதாவது கடலைப்பருப்பும் வெல்லமும் சேர்த்து செய்த சர்க்கரை போலி அதிக அளவில் உண்ணப்படும்.
அதே போல் இப்பொழுது நாம் தேங்காய் போலி எப்படி செய்வது என்பதை பார்க்கப் போகிறோம். இந்திய இனிப்பு வகைகளில் போளி மிகவும் பிடித்த உணவாக மாறிக்கொண்டிருக்கிறது அதிலும் பருப்பு போளியும் ,தேங்காய் போளியும் அனைவரின் மனதிலும் தனி இடத்தை பிடித்துள்ளது.
தீபாவளி பண்டிகை காலங்களிலும் தசரா பண்டிகை காலங்களிலும் பலகாரங்கள் செய்வதில் பருப்பு போளிக்கும் ஒரு தனி இடம் இருக்கிறது.இந்த போளிகள் சுவைப்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கின்றன . கடலைப்பருப்பு போளியை விட மிக எளிதாக அதி சீக்கிரமாக செய்யக்கூடிய போளி தேங்காய் போளி.
தேங்காயில் நெய் சேர்த்து உண்ணும் பொழுது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். நாவில் வைத்ததும் கரைய கூடிய போளிகள் நாவையும், மனதையும், வயிற்றையும் திருப்திபடுத்துகின்றன.அப்படி கடைகளில் வாங்கி ருசித்த போளியை இனி வீட்டிலும் சுலபமாக செய்து உண்ணலாம். குடும்த்தினரையும் ஆச்சரியபட செய்யலாம். நீங்கள் செய்யும் போளியை சுவைத்து பாராட்டு மழையில் நனைய போகிறீர்கள்.வாருங்கள் சுவையான தேங்காய் போளி எப்படி செய்வது என்று பார்ப்போம்.