Advertisement
ஸ்நாக்ஸ்

வீட்டில் கொஞ்சம் ராகி மாவு இருந்தால் போதும் ராகி சாக்லேட் கேக் இப்படி செஞ்சி பாருங்கள்!

Advertisement

கேக் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பைனாப்பில், சாக்லேட், ரெட் வெல்வெட், தேங்காய், கேரட் போன்ற பல்வேறு வகையான கேக் வகைகள் உள்ளன. வீட்டில் இருக்கும் குழந்தைகள் எப்போது கேக் வேண்டும் என அடம்பிடிப்பார்கள் என்றே தெரியாது. இனிமேல் குழந்தைகள் அப்படி அடம்பிடித்தால் நீங்கள் பேக்கரிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. வீட்டிட்லேயே ராகி சாக்லேட் கேக் செய்து அசத்துங்கள். பொதுவாக வீடுகளில் இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாலை நேரத்திற்கு சுவையான டீயுடன் ஸ்நாக்ஸ் வகைகள் எடுத்து கொள்வார்கள். அந்த வகையில் இது போன்ற நேரங்களில் வீட்டிலிருக்கும் அனைவருக்கும் ஆரோக்கியம் தரும் வகையில் வீட்டிலுள்ள தானியங்களை வைத்து ஸ்நாக்ஸ் செய்யலாம்.

சிறுதானிய கேக்குகளில் ஒன்றான ராகி சாக்லேட் கேக் செய்து கொடுத்தால் குழந்தைகளின் வளர்ச்சி அதிகரிக்கும். அத்துடன் சர்க்கரை நோயாளர்கள் இதனை காலை உணவாக கூட எடுத்து கொள்ளலாம். ஊட்டச்சத்து மிகுந்த தானியங்களில் ஒன்றாக ராகி என்று அழைக்கப்படும் கேழ்வரகு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டதாக உள்ளது. இவை நீரழிவு பாதிப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலை கொண்டுள்ளது. சிறுதானியங்களைக் கொண்டு கிரீம் கேக்குகள் மட்டுமில்லாமல், பிரவுனி மற்றும் பிளைன் கேக்குகளையும் செய்யலாம். உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்கள், கலோரிகள் குறைவாக உள்ள சிறுதானிய கேக்குகளை சாப்பிடலாம். இந்த கேக் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் ஏற்றவை. இந்த கேக்கினை பிறந்தநாள், திருமணம், திருமணம் நாள், நிச்சயதார்த்தம், ஆண்டுவிழா போன்ற தினங்களுக்கும், சில வகையான பண்டிகை நாட்கள் அதாவது கிருத்துமஸ், ஆங்கில புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களுக்கும் வெட்டி மகிழலாம்.

Advertisement

ராகி சாக்லேட் கேக் | Finger Millet Chocolate Cake Recipe In Tamil

Print Recipe
கேக் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பைனாப்பில், சாக்லேட், ரெட் வெல்வெட், தேங்காய், கேரட் போன்ற பல்வேறு வகையான கேக் வகைகள் உள்ளன. வீட்டில் இருக்கும் குழந்தைகள் எப்போது கேக் வேண்டும் என அடம்பிடிப்பார்கள் என்றே தெரியாது. இனிமேல் குழந்தைகள் அப்படி அடம்பிடித்தால் நீங்கள் பேக்கரிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. வீட்டிட்லேயே ராகி சாக்லேட் கேக் செய்து அசத்துங்கள்.
Advertisement
பொதுவாக வீடுகளில் இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாலை நேரத்திற்கு சுவையான டீயுடன் ஸ்நாக்ஸ் வகைகள் எடுத்து கொள்வார்கள். அந்த வகையில் இது போன்ற நேரங்களில் வீட்டிலிருக்கும் அனைவருக்கும் ஆரோக்கியம் தரும் வகையில் வீட்டிலுள்ள தானியங்களை வைத்து ஸ்நாக்ஸ் செய்யலாம்.
Course evening, snacks
Cuisine Indian
Keyword Finger Millet Chocolate Cake
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 236
Advertisement

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 ஓவன்

Ingredients

  • 1 கப் ராகி மாவு
  • 1/2 கப் மைதா மாவு
  • 1 கப் பொடித்த சர்க்கரை
  • 1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  • 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  • 1/4 கப் எண்ணெய்
  • 1/2 கப் பால்
  • 1 டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
  • 1 டீஸ்பூன் வினிகர்
  • 100 கி டார்க் சாக்லெட்
  • 1 முட்டை

Instructions

  • முதலில் சாக்லேட்டை பொடித்து வைத்துக் கொள்ளவும். பின் அதனை ஒரு‌ கடாயில் சேர்த்து உருக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் ராகி மாவு, மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா எல்லாம் சேர்த்து சலித்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பௌலில் சர்க்கரை, எண்ணெய் சேர்த்து நன்கு பீட் செய்யவும். அத்துடன் வெண்ணிலா எசன்ஸ், எண்ணெய், முட்டை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின்னர் தயாராக வைத்துள்ள ராகி, மைதா மாவு கலவையை பால் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும். கடைசியாக வினிகர் மற்றும் உருக்கி வைத்துள்ள சாக்லேட் கலவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  • பின்னர் ஒரு பாத்திரத்தில் பட்டர் பேப்பர் வைத்து ராகி கேக் மாவு கலவையை ஊற்றி மைக்ரோ வேவ் ஓவனில் 190 டிகிரியில் 20 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
  • கேக் நன்கு ஆறியவுடன் விருப்பப்படி துண்டுகள் போட்டு பரிமாறவும். அவ்வளவுதான் மிகவும் சத்தான, மிருதுவான, சுவையான ராகி சாக்லேட் கேக் தயார்.

Nutrition

Serving: 500 g | Calories: 236kcal | Carbohydrates: 7.6g | Protein: 7.7g | Fat: 3.1g | Sodium: 186mg | Potassium: 130mg | Fiber: 8g | Sugar: 3g | Vitamin A: 48IU | Vitamin C: 60.4mg | Calcium: 35mg | Iron: 9.3mg

இதனையும் படியுங்கள் : சுவையான ராகி லட்டு இப்படி வீட்டிலயே செய்து பாருங்க! குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்!

Advertisement
Prem Kumar

Recent Posts

ஆரோக்கியமான சுவை மிகுந்த ராகி வெஜ் நூடுல்ஸ்! இப்படி செஞ்சி பாருங்க!!!

குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். நாகரிகம் என்ற பெயரில் தற்போது பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பாஸ்தா உள்ளிட்ட உணவுகளை…

50 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 15 மே 2024!

மேஷம் இன்று உங்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தாயிடம் இருந்து மகிழ்ச்சியை பெறுவீர்கள். இன்று உங்களின் தனிப்பட்ட…

4 மணி நேரங்கள் ago

கோடை வெயில் தரும் வாட்டத்தை குறைக்க கேசர் பிஸ்தா குல்பி ஐஸ் இப்படி செய்து பாருங்க!

என்ன தான் இப்போ ஐஸ் கிரீம் கடைகளில் வித விதமா கிடைச்சாலும்.இந்த குல்பி ஐஸ்கு இருக்கற மவுசு தனி தாங்க.…

13 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு வெஜிடபிள் பாசிப் பயறு இட்லி அடுத்தமுறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

பயறு வகைகளில் பொதுவாக புரோட்டீன் சத்து நிறைந்து காணப்படுவதால் எந்த அளவிற்கு நீங்கள் முழு தானிய உணவு வகைகளை அடிக்கடி…

13 மணி நேரங்கள் ago

ஜவ்வாது பற்றி நமக்கு தெரியாத சில பலன்கள்

இப்பொழுதெல்லாம் தினமும் நாம் என்ன உடை உடுத்தினாலும் அது செயற்கை வாசனை திரவியங்களின் வாசனை மட்டுமே இருக்கும் ஆனால் அந்த…

14 மணி நேரங்கள் ago

சூப்பரான ஹெல்தியான தேங்காய் உருண்டை இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

90ஸ் கிட்ஸ்க்கு தேங்காய் மிட்டாய் அப்படின்னு சொன்னாலே ரொம்ப ரொம்ப பிடிக்கும் கடைகளில கிடைக்கிற தேங்காய் மிட்டாய் வாங்கி நம்ம…

15 மணி நேரங்கள் ago