Recipes
முகப்பு
அழகு

அழகு

  • சரும பராமரிப்பு
  • கூந்தல் பராமரிப்பு
  • அழகு குறிப்புகள்
ஆன்மிகம்

ஆன்மிகம்

  • ஆன்மிக கதைகள்
  • ஜோதிடம்
  • ராசி பலன்
உடல்நலம்

உடல்நலம்

  • வீட்டு வைத்தியம்
  • ஊட்டச்சத்து
  • மகளிர் நலம்
  • உடற்பயிற்சி & எடை குறைப்பு
  • குழந்தை நலம்
சமையல்

சமையல்

  • அசைவம்
  • சைவம்
Behind Talkies Recipes
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Behind Talkies Recipes. All rights reserved.
Ragi Cake
கேக் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பைனாப்பில், சாக்லேட், ரெட் வெல்வெட், தேங்காய், கேரட் போன்ற பல்வேறு வகையான கேக் வகைகள் உள்ளன. வீட்டில் இருக்கும் குழந்தைகள் எப்போது கேக் வேண்டும் என அடம்பிடிப்பார்கள் என்றே தெரியாது. இனிமேல் குழந்தைகள் அப்படி அடம்பிடித்தால் நீங்கள் ப Photo: Recipes
முகப்பு/இனிப்பு பொருள்2024.03.16பதிப்பு · TA
இனிப்பு பொருள்வாசிப்பு நேரம் · 1 நிமிடம்

வீட்டில் கொஞ்சம் ராகி மாவு இருந்தால் போதும் ராகி சாக்லேட் கேக் இப்படி செஞ்சி பாருங்கள்!

கேக் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பைனாப்பில், சாக்லேட், ரெட் வெல்வெட், தேங்காய், கேரட் போன்ற பல்வேறு வகையான கேக் வகைகள் உள்ளன. வீட்டில் இருக்கும் குழந்தைகள் எப்போது கேக் வேண்டும் என அடம்பிடிப்பார்கள் என்றே தெரியாது. இனிமேல் குழந்தைகள் அப்படி அடம்பிடித்தால் நீங்கள் ப

PK
எழுதியவர்Prem Kumar16 மார்ச், 2024 அன்று 08:44 PM
1 நிமிட வாசிப்பு
பகிர்
தயாரிப்பு
10 நிமிடம்
சமையல்
20 நிமிடம்
மொத்தம்
30 நிமிடம்
பேருக்கு
4
சமையல் முறை
Indian
உணவு வகை
evening, snacks

கேக் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பைனாப்பில், சாக்லேட், ரெட் வெல்வெட், தேங்காய், கேரட் போன்ற பல்வேறு வகையான கேக் வகைகள் உள்ளன. வீட்டில் இருக்கும் குழந்தைகள் எப்போது கேக் வேண்டும் என அடம்பிடிப்பார்கள் என்றே தெரியாது. இனிமேல் குழந்தைகள் அப்படி அடம்பிடித்தால் நீங்கள் பேக்கரிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. வீட்டிட்லேயே ராகி சாக்லேட் கேக் செய்து அசத்துங்கள். பொதுவாக வீடுகளில் இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாலை நேரத்திற்கு சுவையான டீயுடன் ஸ்நாக்ஸ் வகைகள் எடுத்து கொள்வார்கள். அந்த வகையில் இது போன்ற நேரங்களில் வீட்டிலிருக்கும் அனைவருக்கும் ஆரோக்கியம் தரும் வகையில் வீட்டிலுள்ள தானியங்களை வைத்து ஸ்நாக்ஸ் செய்யலாம்.

சிறுதானிய கேக்குகளில் ஒன்றான ராகி சாக்லேட் கேக் செய்து கொடுத்தால் குழந்தைகளின் வளர்ச்சி அதிகரிக்கும். அத்துடன் சர்க்கரை நோயாளர்கள் இதனை காலை உணவாக கூட எடுத்து கொள்ளலாம். ஊட்டச்சத்து மிகுந்த தானியங்களில் ஒன்றாக ராகி என்று அழைக்கப்படும் கேழ்வரகு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டதாக உள்ளது. இவை நீரழிவு பாதிப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலை கொண்டுள்ளது. சிறுதானியங்களைக் கொண்டு கிரீம் கேக்குகள் மட்டுமில்லாமல், பிரவுனி மற்றும் பிளைன் கேக்குகளையும் செய்யலாம். உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்கள், கலோரிகள் குறைவாக உள்ள சிறுதானிய கேக்குகளை சாப்பிடலாம். இந்த கேக் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் ஏற்றவை. இந்த கேக்கினை பிறந்தநாள், திருமணம், திருமணம் நாள், நிச்சயதார்த்தம், ஆண்டுவிழா போன்ற தினங்களுக்கும், சில வகையான பண்டிகை நாட்கள் அதாவது கிருத்துமஸ், ஆங்கில புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களுக்கும் வெட்டி மகிழலாம்.

இதனையும் படியுங்கள் : சுவையான ராகி லட்டு இப்படி வீட்டிலயே செய்து பாருங்க! குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்!

4 பேருக்கு

தேவையான பொருட்கள்

செய்முறை

  1. 1

    முதலில் சாக்லேட்டை பொடித்து வைத்துக் கொள்ளவும். பின் அதனை ஒரு‌ கடாயில் சேர்த்து உருக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    பின் ராகி மாவு, மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா எல்லாம் சேர்த்து சலித்து வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    ஒரு பௌலில் சர்க்கரை, எண்ணெய் சேர்த்து நன்கு பீட் செய்யவும். அத்துடன் வெண்ணிலா எசன்ஸ், எண்ணெய், முட்டை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  4. 4

    பின்னர் தயாராக வைத்துள்ள ராகி, மைதா மாவு கலவையை பால் சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும். கடைசியாக வினிகர் மற்றும் உருக்கி வைத்துள்ள சாக்லேட் கலவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

  5. 5

    பின்னர் ஒரு பாத்திரத்தில் பட்டர் பேப்பர் வைத்து ராகி கேக் மாவு கலவையை ஊற்றி மைக்ரோ வேவ் ஓவனில் 190 டிகிரியில் 20 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.

  6. 6

    கேக் நன்கு ஆறியவுடன் விருப்பப்படி துண்டுகள் போட்டு பரிமாறவும். அவ்வளவுதான் மிகவும் சத்தான, மிருதுவான, சுவையான ராகி சாக்லேட் கேக் தயார்.

ஊட்டச்சத்து (ஒரு பேருக்கு)

  • 236 கலோரி
  • கொழுப்பு · 3.1g
  • புரதம் · 7.7g
  • கார்போஹைட்ரேட் · 7.6g
தலைப்புகள்
#ராகி அல்வா#ராகி சாக்லேட் கேக்#ராகி உருண்டை#ராகி கொழுக்கட்டை
எழுதியவர் குறிப்பு
PK
Prem Kumar
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!

தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கேக் கருப்பு கவுனி அரிசி வைத்து ஆரோக்கியமான முறையில் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கேக் கருப்பு கவுனி அரிசி வைத்து ஆரோக்கியமான முறையில் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

ரவை வைத்து அசத்தல் சுவையில் மகந்தி அல்வா இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

ரவை வைத்து அசத்தல் சுவையில் மகந்தி அல்வா இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

இன்றைய ராசிபலன் – 09 நவம்பர் 2026!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!

அதிகம் படித்தவை

  1. 01கொங்கு நாட்டு ஸ்டைலில் வெள்ளை பிரியாணி இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!
  2. 02ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் ரசம் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்!!
  3. 03வாழைக்காய் வைத்து மிகவும் ருசியான இந்த வாழைக்காய் மிளகு வறுவல் செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!
  4. 04தித்திக்கும் ரசமலாயை எளிமையான முறையில் இப்படி ஒரு முறை வீட்டிலேயே செய்து பாருங்கள்!!
  5. 05வார இறுதியில் மீன் வாங்கினால் காரசாரமான இந்த ஆந்திரா ஸ்டைல் மீன் கறி செய்து பாருங்கள்!!
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement