- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian
- Course
- sweets
பொதுவாக இனிப்பு என்றாலே நம் எல்லோருக்கும் பிடிக்கும். அதிலும் அல்வா என்றால் சொல்லவா வேண்டும். அல்வா தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் மிகவும் புகழ்பெற்றது. இது சர்க்கரை, நெய் ஆகியவற்றை பயன்படுத்தி செய்யப்படுகிறது. அதன் நாக்கில் வைத்ததும் கரைகின்ற சுவையை நிச்சயம் எல்லோருமே விரும்புவோம். நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே அல்வா என்றால் விரும்பி சாப்பிடுவதுண்டு. அல்வாவில் ஏராளமான வகை உள்ளன. கேரட் அல்வா, பீட்ரூட் அல்வா, பிரட் அல்வா, திருநெல்வேலி அல்வா, கோதுமை அல்வா என பல வகைகள் உள்ளன. இவைகளை நாம் சுவைத்தும் இருப்போம்.
அல்வா என்று வரும் போது பலரும் கோதுமை அல்வா, அசோகா அல்வா போன்றவற்றை தான் அதிகமாக சாப்பிட்டு இருப்போம். ஆனால், நீங்கள் ரவை வைத்து செய்யப்படும் மகந்தி அல்வா செய்து சுவைத்தது உண்டா? ஒரு முறை செய்து பாருங்கள் சுவை அட்டகாசமாக இருக்கும். இந்த ரெசிபியை வீட்டிலுள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை நீங்கள் ஒரு முறை செய்து ருசித்தால் போதும் மீண்டும், மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். அத்தனை சுவையானதாக இருக்கும். இப்போது சுவையான மகந்தி அல்வா எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : கேரளா நேந்திர வாழைப்பழ அல்வா
Ingredients
Method
முதலில் ஒரு பவுளில் ரவை மற்றும் காய்ச்சிய பால் சேர்த்து 20 நிமிடங்கள் மூடி வைத்து விடவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் முந்திரி, பாதாம், பிஸ்தா சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விடவும். சர்க்கரை கரைந்து வந்ததும் ஊற வைத்த ரவை கலவையை சேர்த்து கைவிடாமல் கலந்து விடவும்.
பின் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து இந்த கலவை சட்டியில் ஒட்டாமல் வந்ததும் வறுத்த முந்திரி, பாதாம், பிஸ்தா சேர்த்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான மகந்தி அல்வா தயார்.






