இனிமேல் பீனட் பட்டர் கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம்!

- Advertisement -

பீனட் பட்டர் ஒரு சிலருக்கு ரொம்ப ரொம்ப ஃபேவரட்டா இருக்கும். குழந்தைகள் பிரட் சாப்பிடும்போது எப்படி ஜாம் வச்சு சாப்பிட ஆசைப்படுவாங்களோ அதே மாதிரி இந்த பீனட் பட்டர் வச்சு சாப்பிடவும் ஆசைப்படுவாங்க. இந்த பீனட் பட்டர் கடைகளில் மட்டும்தான் வாங்கி சாப்பிடணும் அப்படின்ற அவசியம் கிடையாது இனி மேல் உங்களுக்கு பினட் பட்டர் சாப்பிடணும் அப்படின்னு தோணுச்சுன்னா வீட்லயே இந்த மாதிரி சிம்பிளா செஞ்சு பாருங்க. வெறும் நான்கு பொருள் இருந்தால் போதும் சூப்பரான பீனட் பட்டர் வீட்லையே செய்யலாம். இது ஆரோக்கியமானதாவும் இருக்கும்.

-விளம்பரம்-

கடைகளில் வாங்குறது எப்படி இருக்கும் அப்படின்னு நமக்கு தெரியாது எப்படி செய்வாங்க அப்படின்னு நமக்கு தெரியாது அதனால இனிமேல் நம்ம குழந்தைகளுக்கு வீட்டிலேயே பீனட் பட்டர் செஞ்சு அதை பிரட்ல தடவி சாப்பிட கொடுக்கலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த பீனட் பட்டர் செஞ்சு அதை ஒரு மாசத்துக்கு நீங்க பிரிட்ஜில் வைத்து சாப்பிடலாம் கெட்டுப் போகாது. தேவைப்பட்டால் மறுபடியும் செஞ்சுக்கலாம். பிரிட்ஜுக்குள்ள வச்சு சாப்பிட உங்களுக்கு பிடிக்காது அப்படின்னா உங்களுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு செஞ்சு அன்னைக்கே காலி பண்ணிடலாம். அது இன்னும் ஆரோக்கியமான முறையா இருக்கும்.

- Advertisement -

ஆனா அடிக்கடி செய்ய முடியாது அப்படின்னு நினைக்கிறவங்க அத ஃப்ரிட்ஜுக்குள்ள வச்சுக்கோங்க. சாப்பிடணும்னு தோணும்போது ஒரு அரை மணி நேரத்துக்கு முன்னாடியே அந்த பீனட் பட்டரை வெளியில் எடுத்து வச்சிருங்க. அப்பதான் நீங்க சாப்பிடும்போது கரெக்டான பதத்தில் இருக்கும். இந்த மாதிரி வீட்லயே பீனட் பட்டர் செஞ்சு கொடுத்துட்டீங்கன்னா குழந்தைகளுக்கு அதுவே பெரிய குஷி ஆகிடும். ஜாம் வச்சு சாப்பிடுவதற்கு பதிலா இந்த பீனட் பட்டர் வச்சு சாப்பிடுறது ரொம்ப ரொம்ப நல்லது. இத உங்க குழந்தைகளோட ஸ்னாக்ஸ் பாக்ஸுக்கும் இல்லனா பிரேக்ஃபாஸ்ட்க்கும் பிரட்ல தடவி இப்ப வாங்க இந்த சுவையான பீனட் பட்டர் வீட்டிலேயே சீக்கிரமா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
5 from 1 vote

பீனட் பட்டர் | Peanut Butter Recipe In Tamil

பீனட் பட்டர் ஒரு சிலருக்கு ரொம்ப ரொம்ப ஃபேவரட்டா இருக்கும். குழந்தைகள் பிரட் சாப்பிடும்போது எப்படி ஜாம் வச்சு சாப்பிட ஆசைப்படுவாங்களோ அதே மாதிரி இந்த பீனட் பட்டர் வச்சு சாப்பிடவும் ஆசைப்படுவாங்க. இந்த பீனட் பட்டர் கடைகளில் மட்டும்தான் வாங்கி சாப்பிடணும் அப்படின்ற அவசியம் கிடையாது இனி மேல் உங்களுக்கு பினட் பட்டர் சாப்பிடணும் அப்படின்னு தோணுச்சுன்னா வீட்லயே இந்த மாதிரி சிம்பிளா செஞ்சு பாருங்க. வெறும் நான்கு பொருள் இருந்தால் போதும் சூப்பரான பீனட் பட்டர் வீட்லையே செய்யலாம். இது ஆரோக்கியமானதாவும் இருக்கும். கடைகளில் வாங்குறது எப்படி இருக்கும் அப்படின்னு நமக்கு தெரியாது எப்படி செய்வாங்க அப்படின்னு நமக்கு தெரியாது அதனால இனிமேல் நம்ம குழந்தைகளுக்கு வீட்டிலேயே பீனட் பட்டர் செஞ்சு அதை பிரட்ல தடவி சாப்பிட கொடுக்கலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவாங்க.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: sweets
Cuisine: Indian
Keyword: Peanut Butter
Yield: 4 People
Calories: 161kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1 கப் வேர்க்கடலை
  • 1 டேபிள் ஸ்பூன் நாட்டு சர்க்கரை
  • 1 டீஸ்பூன் தேன்
  • 2 பேரிச்சம் பழம்

செய்முறை

  • ஒரு கடாயில் வேர்க்கடலை சேர்த்து வறுத்து தோல் நீக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்.
  • அதனுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து பொடியாக்கிக் கொள்ளவும். பிறகு தேன், பேரிச்சம் பழம் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
  • பத்து நிமிடத்திற்கு அழைத்துக் கொண்டே இருந்தால் வேர்க்கடலையில் இருந்து எண்ணெய் பிரிந்து சுவையான பீனட் பட்டர் தயாராகிவிடும்.

Nutrition

Serving: 400g | Calories: 161kcal | Carbohydrates: 4.6g | Protein: 17.3g | Fat: 3.64g | Potassium: 105mg | Fiber: 4.2g | Vitamin A: 146IU | Vitamin C: 58mg | Calcium: 29mg | Iron: 14mg

இதனையும் படியுங்கள் : ரெம்ப எளிமையாக வீட்டிலயே தித்திக்கும் சுவையில் ஆப்பிள் ஜாம் செய்து பாருங்கள்!