குழந்தைகள் ஆரோக்கியமாக சாப்பிட நினைத்தால் தினை லட்டு இப்படி வீட்டிலயே செஞ்சு கொடுங்க!

- Advertisement -

பல நூற்றாண்டுகளாக நமது பாரம்பரிய சமையலில் தினை அரிசி பயன்படுத்தும் முறை இருந்து வருகிறது. தினைகளில் நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. தினையில் அரிசி, ராகியை விட அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது.அதிகளவு புரதச்சத்து நிறைந்துள்ளது. கார்போஹைட்ரேட் மிக குறைவான அளவே இருக்கிறது. இந்த தினையை நம் உணவோடு சேர்த்து வந்தால், நம்முடைய கண் பார்வை நன்றாக தெரியும். கூடவே நம்முடைய முடி வளர்ச்சியும் அதிகரிக்கும். உங்கள் நாளை ஒரு இனிப்புடன் தொடங்க வேண்டும் என்று நினைத்தால் தினை லட்டு செய்யுங்கள். இது ஒரு ஆரோக்கியமான உணவும் கூட. சிறுதானிய உணவுகளை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த தினை லட்டு உடலில் சேரக்கூடிய சர்க்கரை அளவை தடுத்து நல்ல ஆரோக்கியமான உடல் எடையையும் பராமரிக்கச் செய்கிறது.

-விளம்பரம்-

சிறுதானியங்களை குழந்தைகள் சாப்பிடுவதை தவிர்ப்பர். சுவையாக இருக்காது என்பர். ஆனால் அவற்றை அவர்களுக்கு பிடித்த விதத்தில் செய்து கொடுத்தால் சாப்பிடுவர். சிறுதானியங்களில் பல்வேறு வகையான ருசியான ரெசிபிகள் செய்யலாம். அந்தவவையில் சிறுதானியங்களில் ஒன்றான தினை அரிசியில் லட்டு எப்படி செய்வது என்பது குறித்து பார்ப்போம். இந்த தினை லட்டு சுகர் பேஷண்ட்ஸ் மற்றும் உடல் எடை குறைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இந்த லட்டுவை செய்வது மிகவும் சுலபம். குறிப்பாக மாலை நேரங்களில் குழந்தைகள் பள்ளி விட்டு வரும் போது இதை உணவாக செய்து கொடுக்க ஏற்றதாக இருக்கும்.

- Advertisement -
Print
4 from 1 vote

தினை லட்டு | Foxtail Millet Laddu Recipe In Tamil

பல நூற்றாண்டுகளாக நமது பாரம்பரிய சமையலில் தினை அரிசி பயன்படுத்தும் முறை இருந்து வருகிறது. தினைகளில் நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. தினையில் அரிசி, ராகியை விட அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. அதிகளவு புரதச்சத்து நிறைந்துள்ளது. கார்போஹைட்ரேட் மிக குறைவான அளவே இருக்கிறது. இந்த தினையை நம் உணவோடு சேர்த்து வந்தால், நம்முடைய கண் பார்வை நன்றாக தெரியும். கூடவே நம்முடைய முடி வளர்ச்சியும் அதிகரிக்கும். உங்கள் நாளை ஒரு இனிப்புடன் தொடங்க வேண்டும் என்று நினைத்தால் தினை லட்டு செய்யுங்கள். இது ஒரு ஆரோக்கியமான உணவும் கூட. சிறுதானிய உணவுகளை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த தினை லட்டு சுகர் பேஷண்ட்ஸ் மற்றும் உடல் எடை குறைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இந்த லட்டுவை செய்வது மிகவும் சுலபம். குறிப்பாக மாலை நேரங்களில் குழந்தைகள் பள்ளி விட்டு வரும் போது இதை உணவாக செய்து கொடுக்க ஏற்றதாக இருக்கும்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: evening, snacks
Cuisine: Indian
Keyword: Foxtail Millet Laddu
Yield: 4 People
Calories: 358kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 வாணலி

தேவையான பொருட்கள்

  • 2 கப் தினை
  • 1 கப் பொடித்த வெல்லம்
  • 1/4 கப் பாதாம்
  • 1/4 கப் வால் நட்
  • 1/4 கப் முந்திரி
  • 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 1/2 டீஸ்பூன் சுக்குபொடி
  • நெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் தினையை சுத்தம் செய்து சிறிதளவு தண்ணீர் விட்டு ஊற வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து திணை அரிசியை தண்ணீர் வடித்து சேர்த்து வாசம் வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் முந்திரி, பாதாம், வால் நட்ஸ் சேர்த்து வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு மிக்ஸி ஜாரில் திணை அரிசிய சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். அதனுடன் முந்திரி, பாதாம், வால் நட்ஸ் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • பின்‌ ஒரு பவுளில் அரைத்த மாவு மற்றும் பொடித்த வெல்லத்தை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின் ஏலக்காய் தூள், சுக்குப்பொடி சேர்த்து நன்கு கலந்து அதனுடன் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து நன்கு கலந்து உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
  • இந்த திணை லட்டுகளை எடுத்து ஒரு தட்டில் வைத்து அதன்மேல் நட்ஸ் வைத்து அலங்கரித்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான தினை லட்டு தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 358kcal | Carbohydrates: 6.3g | Protein: 12g | Fat: 4g | Sodium: 3.9mg | Potassium: 256mg | Fiber: 5.7g | Sugar: 6.2g | Calcium: 14mg | Iron: 4.8mg

இதனையும் படியுங்கள் : ருசியான தினை தோசை இப்படி செய்து பாருங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!