மதிய உணவுக்கு ஏற்ற மணத்தக்காளி கீரை கடையல் இப்படி செய்து பாருங்க! அஹா இதன் சுவையே தனி தான்!

- Advertisement -

எப்பொழுதும் ஒரே மாதிரியான குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா அப்போ இந்த மாறி மணத்தக்காளி கீரை கடையல் செஞ்சி சாப்பிட்டு பாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. அதுமட்டும் அல்லாமல் இந்த கீரையில் நிறைய சத்துக்கள் அடங்கி ஊள்ளது

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : மதிய உணவுக்கு ஏற்ற அகத்திக்கீரை கூட்டு இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

அதனால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. வாரத்தில் ஒரு முறையாவதும் உணவில் கீரைகளை சேர்த்துக்கொள்ளவும். மணத்தக்காளி கீரை கடையல் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Print
3.50 from 2 votes

மணத்தக்காளி கீரை கடையல் | Mana thakkali Keerai Kadaiyal Recipe In Tamil

எப்பொழுதும் ஒரே மாதிரியான குழம்பு வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்து விட்டதா அப்போ இந்த மாறி மணத்தக்காளி கீரை கடையல் செஞ்சி சாப்பிட்டு பாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. அதுமட்டும் அல்லாமல் இந்த கீரையில் நிறைய சத்துக்கள் அடங்கி ஊள்ளது அதனால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. வாரத்தில் ஒரு முறையாவதும் உணவில் கீரைகளை சேர்த்துக்கொள்ளவும். மணத்தக்காளி கீரை கடையல் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time26 minutes
Course: Breakfast, LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: keerai kadaiyal, கீரை கடையல்
Yield: 4 people
Calories: 114kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கட் மணத்தக்காளி கீரை
  • துவரம் பருப்பு தேவையான அளவு
  • 2 தக்காளி
  • 5 பச்சை மிளகாய்
  • ½ ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 8 பல் பூண்டு தட்டியது
  • 1 ஸ்பூன் மிளகு, சீரகம் பொடியாக நறுக்கியது
  • உப்பு தேவையான அளவு

தாளிப்பதற்கு:

  • 2 டீஸ்பூன் எண்ணெய்
  • வெங்காய வடகம் தேவைப்பட்டால் கொஞ்சம்
  • 3 வர மிளகாய் கிள்ளி வைத்தது

செய்முறை

  • முதலில் மணத்தக்காளி கீரையை கழுவி ஆய்ந்து வைத்துக்கொள்ளவும்.
  • அடுத்து பருப்பை வேகவைத்துக்கொள்ளவும், பருப்பு முக்கால் பதம் வெந்ததும் நறுக்கிய தக்காளியை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பருப்பை நன்கு வேக வைக்கவும்.
  • தக்காளி நன்கு மசிய வெந்ததும் அய்ந்து வைத்த கீரைக்காய் சேர்த்துக்கொள்ளவும். கீரை நன்கு வேகவைக்கவும்.
  • கீரை நன்கு மசிய வெந்ததும் தட்டிய பூண்டு, மிளகு, சீரக பொடி சேர்த்து கலந்து அடுப்பை நிறுத்தவும்.
  • பிறகு வேக வைத்த பருப்பில் உள்ள தண்ணீரை தனியாக வடித்து வைத்துக்கொள்ளவும். வெடித்ததும் கீரையில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு மத்தால் கடைந்து கொள்ளவும்.
  • கடைந்த்தும் வடித்து வைத்துள்ள தண்ணீரை கீரையில் ஊற்றவும்.
  • பிறகு தாளிக்க ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காய வடகம் சேர்த்து அத்துடன் கிள்ளி வைத்துள்ள வர மிளகையும் சேர்த்து தாளித்து கீரையில் சேர்க்கவும்.
  • இப்பொழுது சுவையான மணத்தக்காளி கீரை கடையல் தயார்.

Nutrition

Serving: 600G | Calories: 114kcal | Carbohydrates: 24g | Protein: 13g | Fat: 0.4g | Saturated Fat: 0.3g | Cholesterol: 0.1mg | Sodium: 30mg | Potassium: 286mg | Sugar: 0.2g | Iron: 7.5mg