கொசுக்களை விரட்டி அடிக்க மாம்பூ ஒன்று போதும், கொசு தொல்லை இருக்காது!

- Advertisement -

மலர்கள்… அதாவது பூக்கள் மகரந்தச் சேர்க்கைக்குப் பிறகு மொட்டாகி, பிஞ்சாகி, காயாகி, பழமாகி இனவிருத்தி செய்துகொள்ளும் என்று மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் ஒவ்வொரு பூக்களுக்கும் ஒவ்வொருவிதமான மருத்துவ குணங்கள் இருப்பது நம்மில் பலருக்குத் தெரியவில்லை. நாம் இங்கே உதாரணமாக மாம்பூ… அதாவது மாமரத்தின் பூக்களை எடுத்துக்கொள்வோம். சீஷன் நேரங்களில் மா மரங்களில் பூத்துக்குலுங்கும் அந்தப்பூக்கள் கண்கொள்ளா காட்சியாக இருக்கும். அடுத்த சில நாட்களில் அவை காயாகி, பழமாகும். அவற்றில் சில பூக்கள் உதிர்ந்து விழுந்துவிடும். எனவே அவற்றை சேகரித்து காய வைத்து எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். மாமரத்தில் எல்லா காலத்திலும் பூக்கள் பூப்பதில்லை.

-விளம்பரம்-

சர்க்கரை நோய்க்கு மருந்து

மாம்பூக்களைக்கொண்டு சர்க்கரை நோய்க்கு நல்ல மருந்து தயாரிக்கலாம். மாம்பூக்களை சுத்தம் பார்த்து எடுத்து 100 கிராம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதே அளவு மாந்தளிர் மற்றும் நாவல்பழக்கொட்டை. மாம்பூ, மாந்தளிர் மற்றும் நாவல்கொட்டை போன்றவை தலா 100 கிராம் எடுத்து நன்றாக வெயிலில் காய வைத்து எடுத்து பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். நம் எல்லோருக்கும் காலை வேளையில் காபி, டீ அருந்தும் பழக்கம் உண்டு. சர்க்கரை நோயாளிகளும் அதில் விதிவிலக்கல்ல. எனவே அவர்கள் காபி, டீ அருந்துவதற்குப் பதில் இந்த மாம்பூ, மாந்தளிர், நாவல்கொட்டை சேர்ந்த பொடியில் ஒரு டீஸ்பூன் எடுத்து வெந்நீரில் கலந்து குடிக்கலாம். இல்லையென்றால் ஒரு கொதிவிட்டு வடிகட்டியும் குடிக்கலாம்.

- Advertisement -

தேநீராக அருந்தலாம்

இந்த மாம்பூ தேநீரை ஒரு மண்டலம் குடித்து வந்தால் சர்க்கரை நோய் பாதிப்பை வெகுவாகக் குறைக்கலாம். சிலர் இதை அருந்தி சர்க்கரை பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபட்டிருக்கின்றனர். ஒரு மண்டலம்… அதாவது 48 நாள் குடிப்பதுடன் நிறுத்திவிடாமல் அவ்வப்போது குடித்து வந்தாலும் தவறில்லை. கண்ணுக்குத்தெரியாத இடத்தில் வளரக்கூடிய தேயிலை மற்றும் கிரீன் டீ போன்றவற்றை விரும்பி அருந்தும் நாம் நமது உடல்நலனுக்காக நாமே தயாரித்த இந்த மூலிகை டீயை அவ்வப்போது அருந்தி நலம் பெறலாம்.

கொசுக்களை விரட்டலாம்

மாம்பூக்களின் மருத்துவ குணம் இத்தோடு நின்றுவிடப்போவதில்லை. கொசுக்களை விரட்டுவதில் இந்த மாம்பூ சிறப்பாக பணியாற்றுகிறது. சீஷன் நேரங்களில் மரங்களின் கீழே உதிர்ந்துகிடக்கும் மாம்பூக்களை சேகரித்து வெயிலில் காய வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதை பொடியாக்கத் தேவையில்லை, அப்படியே காயவைத்து எடுத்துக்கொள்ளலாம். இதை மாலை நேரங்களில் சாம்பிராணி புகை காட்டுவதுபோல வீடுகளின் உள்ளேயும், வெளிப்புறங்களிலும் காட்டி வந்தால் கொசுக்கள் அங்கிருந்து விலகிச் சென்றுவிடும்.

பக்கவிளைவு இல்லாதது

இன்றைக்கு கொசுக்களை விரட்ட என்னென்னவோ வழிமுறைகளை பின்பற்றிக்கொண்டிருக்கிறோம். அந்த வழிமுறைகளால் நமக்கு பல வழிகளில் கேடுகள் நிகழ்ந்துகொண்டிருப்பது நம் கண்களுக்குத் தெரியவில்லை. எனவே, பக்கவிளைவு ஏற்படுத்தாத வகையில் இந்த மாம்பூக்களைப் பயன்படுத்தி பலன்பெறுவோம். இனிவரும் காலங்களில் கீழே உதிர்ந்துகிடக்கும் மாம்பூக்களைச் சேகரித்து காய வைத்து அவற்றை கொசுக்களை விரட்ட பயன்படுத்துவோம்.

-விளம்பரம்-

சீதபேதியை நிறுத்தும்

மாம்பூவுக்கு இன்னும் சில மருத்துவ குணம் உள்ளது. பசுமையான மாம்பூ அல்லது உலர்ந்த மாம்பூவை சுத்தம் செய்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதில் மூன்று விரல் அளவு எடுத்துக்கொண்டு அதே அளவு மாந்தளிர் மற்றும் மாதுளைப்பூ சேர்த்து அரைத்து பாலில் கலந்து காலை, மாலை என மூன்று நாட்கள் சாப்பிட்டால் சீதபேதி சரியாகும். அதாவது பெருங்குடலில் ஏற்படும் பாதிப்பால் சிலருக்கு சளியும், ரத்தமும் சேர்ந்து மலம் போகும் பிரச்சினைக்கு இது நல்ல மருந்து. இதுபோன்று பல பிரச்சினைகளை சரிசெய்யக்கூடிது மாம்பூ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here