சாதம் மீதம் ஆயிடுச்சு அப்படின்னா இந்த சீசனில் கிடைக்க கூடிய மாங்காய் வைத்து ருசியான மாங்காய் சாதம் இப்படி செஞ்சு பாருங்க!

- Advertisement -

பொதுவா ஒரு சிலருக்கு குழம்பு சாதத்தை விட வெரைட்டி சாதங்களான தேங்காய் சாதம் புளி சாதம் லெமன் சாதம் தயிர் சாதம் தக்காளி சாதம் இதுதான் ரொம்ப பிடிக்கும் அந்த வகையில கோடை காலத்துக்கு ராஜாவான நிறைய கிடைக்கக்கூடிய இந்த மாங்காய் வச்சு இன்னிக்கி சூப்பரான டேஸ்டான மாங்காய் சாதம் தான் பார்க்க போறோம். இந்த மாங்காய் சாதத்துக்கு கூட அப்பளமோ இல்ல பூண்டு ஊறுகாயோ சேர்த்து வச்சு சாப்பிட்டா டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்.

-விளம்பரம்-

இந்த கோடை காலத்துக்கு நமக்கு மாங்காய் நிறைய நிறைய கிடைக்கும். இந்த மாங்காய் வச்சு நம்ம என்னென்ன ரெசிபீஸ் எல்லாம் பிடிக்குமோ அதெல்லாம் இந்த கோடை காலத்தில் முடிஞ்ச அளவுல செஞ்சு முடிச்சிடனும். மத்த நேரங்கள்ல நமக்கு மாங்காய் அதிகமாகவும் கிடைக்காது. இந்த மாங்காய் வச்சு செய்யக்கூடிய மாங்காய் பச்சடி இனிப்பு மாங்காய் மாங்காய் ஊறுகாய் மாங்காய் சாதம் எல்லாமே செம்ம அட்டகாசமா சூப்பரான டேஸ்ட்ல சாப்பிடுறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும்.

- Advertisement -

அந்த வகையில் இன்னைக்கு நம்ம பாக்க போற இந்த மாங்காய் சாதம் நிறைய பேருக்கு பேவரட்டா கூட இருக்கும். ஆனா நீங்க எல்லாரும் டிஃபரண்டா செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இப்ப நம்ம செய்ய போற மாதிரி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் நீங்க இந்த டேஸ்டுக்கு அடிமையாகிடுவீங்க அப்புறம் நீங்க எப்போ மாங்காய் சாதம் செஞ்சாலும் இது தான் செய்வீங்க. வேலைக்கு போறவங்களுக்கு மதியம் லஞ்சுக்கு நீங்க இந்த மாங்காய் சாதம் செஞ்சு கொடுத்தா அவங்க கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. புளிப்பா காரமா சாப்பிடுறதுக்கே ரொம்ப அட்டகாசமா இருக்கும். இப்ப வாங்க இந்த டேஸ்டான மாங்காய் சாதம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
No ratings yet

மாங்காய் சாதம் | Mango Rice Recipe In Tamil

இந்த கோடை காலத்துக்கு நமக்கு மாங்காய் நிறைய நிறைய கிடைக்கும். இந்த மாங்காய் வச்சு நம்ம என்னென்ன ரெசிபீஸ் எல்லாம் பிடிக்குமோ அதெல்லாம் இந்த கோடை காலத்தில் முடிஞ்ச அளவுல செஞ்சு முடிச்சிடனும். மத்த நேரங்கள்ல நமக்கு மாங்காய் அதிகமாகவும் கிடைக்காது. இந்த மாங்காய் வச்சு செய்யக்கூடிய மாங்காய் பச்சடி இனிப்பு மாங்காய் மாங்காய் ஊறுகாய் மாங்காய் சாதம் எல்லாமே செம்ம அட்டகாசமா சூப்பரான டேஸ்ட்ல சாப்பிடுறதுக்கு அவ்வளவு ருசியா இருக்கும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: mango rice
Yield: 3
Calories: 60kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 மாங்காய்
  • 2 கப் சாதம்
  • 1 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை
  • 1 டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பு
  • 1 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  • 1 டீஸ்பூன் துருவிய இஞ்சி
  • 1 பெரிய வெங்காயம்
  • 3 பச்சை மிளகாய்
  • 2 காய்ந்த மிளகாய்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • எண்ணெய் தேவையானஅளவு
  • உப்பு தேவையானஅளவு

செய்முறை

  • முதலில் மாங்காயின் தோலை சீவி நன்றாக துருவி வைத்துக் கொள்ளவும்
  • பிறகு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்
  • பச்சை மிளகாய் வேர்க்கடலை கடலைப்பருப்பு காய்ந்த மிளகாய் துருவிய இஞ்சி அனைத்தும் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுக்கவும்
     
  • வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் திரும்பிய மாங்காயை சேர்த்து நன்றாக ஒரு ஐந்து நிமிடத்திற்கு வதக்கவும்
  • தேவையான அளவு உப்பு சேர்த்து வடித்து வைத்துள்ள சாதத்தையும் சேர்த்து நன்றாக கிளறி எடுத்தால் சுவையான மாங்காய் சாதம் தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 60kcal | Carbohydrates: 17g | Protein: 10g | Sodium: 209mg | Potassium: 362mg

இதையும் படியுங்கள் : சூப்பரான மாங்காய் இனிப்பு தொக்கு இப்படி வீட்டிலயே செஞ்சு பாருங்க! மாம்பழ சீசன் வேறு வந்துவிட்டது..!