Home ஸ்நாக்ஸ் இனிமேல் மசால் கடலை கடையில் வாங்காமல் வீட்டிலேயே ஆரோக்கியமா வேர்கடலை ஸ்நாக்ஸ் செஞ்சு சாப்பிடுங்க!

இனிமேல் மசால் கடலை கடையில் வாங்காமல் வீட்டிலேயே ஆரோக்கியமா வேர்கடலை ஸ்நாக்ஸ் செஞ்சு சாப்பிடுங்க!

வேர்கடலை சாப்பிடுவது நம் உடம்பிற்கு ரொம்பவே ஆரோக்கியமானது தினமும் கூட நம்ம ஒரு கையளவு வேர்கடலை சாப்பிடலாம் அது நம்ம உடம்புக்கு நிறைய நன்மைகளை தரக்கூடியது. அந்த வகையில் ஒரு சிலருக்கு அப்படியே பச்சை வேர்கடலையை இல்ல வேக வைத்த வேர்கடலையை சாப்பிடுவதற்கு பிடிக்காது அவங்களுக்காக தான் இந்த சூப்பரான மசால் கல்லை எப்படி செய்றதுன்னு பார்க்க போறோம். நாம இதுவரைக்கும் தான் வாங்கி சாப்பிடுவோம் ஆனா இப்ப எல்லாம் உணவுல நிறைய கலப்படம் நடக்குது அதனால கடைகளை வாங்குவதற்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்.

-விளம்பரம்-

அந்த மாதிரி சமயத்துல வீட்டிலேயே இந்த சூப்பரான ஸ்னாக்ஸ் ரெசிபி செஞ்சு சாப்பிடுங்க குழந்தைகளுக்கும் கொடுங்க கண்டிப்பா அவங்களும் நல்லா சாப்பிடுவாங்க. குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸா அது இதுன்னு கொடுக்கிறது விட்டுட்டு இந்த மாதிரி சத்தான ஆரோக்கியமான பொருளை அவங்களுக்கு புடிச்ச மாதிரி நல்லா கிரிஸ்பியா மொறு மொறுன்னு செஞ்சு கொடுத்தீங்க அப்படின்னா அவங்க இதெல்லாம் சாப்பிட்டு பழகி அப்புறம் ஆரோக்கியமானதா சாப்பிட ஆரம்பிச்சுடுவாங்க.

இந்த மசால் கடலை பருப்பு தயிர் சாதத்துக்கு வைத்து சாப்பிட்டோம் அப்படின்னா டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். எங்க வீட்ல ஒரு காலத்துல எல்லாம் சாப்பிடுவதற்கு சைடு டிஷ் இல்லனா இந்த மசால் கல்லபருப்பு தான் வாங்கி சைடுஷா வச்சு சாப்பிடுவாங்க. டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் மணமாகவும் ருசியாகவும் இருக்கும். இனிமேல் மசால் கடலை பருப்பு சாப்பிடணும்னு ஆசையா இருந்தா கடையில் போய் வாங்காதீங்க வீட்டிலேயே சட்டுனு ஆரோக்கியமான முறையில் செஞ்சு கொடுத்துடுங்க. இப்ப வாங்க இந்த சுவையான மசால் கல்லை எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
No ratings yet

மசால் கடலை | Masala Kadalai Recipe In Tamil

வேர்கடலை சாப்பிடுவது நம் உடம்பிற்கு ரொம்பவே ஆரோக்கியமானது தினமும் கூட நம்ம ஒரு கையளவு வேர்கடலை சாப்பிடலாம் அது நம்ம உடம்புக்கு நிறைய நன்மைகளை தரக்கூடியது. அந்த வகையில் ஒரு சிலருக்கு அப்படியே பச்சை வேர்கடலையை இல்ல வேக வைத்த வேர்கடலையை சாப்பிடுவதற்கு பிடிக்காது அவங்களுக்காக தான் இந்த சூப்பரான மசால் கல்லை எப்படி செய்றதுன்னு பார்க்க போறோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: snacks
Cuisine: tamilnadu
Keyword: Masala Kadalai
Yield: 4
Calories: 245kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 கப் பச்சை வேர்கடலை
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1 கப் கடலை மாவு
  • 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா
  • 3 பல் பூண்டு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் வேர்க்கடலை போட்டு அதனுடன் கடலை மாவு அரிசி மாவு மிளகாய் தூள் பெருங்காயத்தூள் மஞ்சள் தூள் கரம் மசாலா தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்
  • அதனுடன் இரண்டு பல் பூண்டை நன்றாக இடித்து சேர்த்துக் கொள்ளவும் அதனுடனே கருவேப்பிலையையும் சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்
  • இப்பொழுது அனைத்தையும் ஒன்றாக கலந்து விட்டு அதில் ஒரு டேபிள் ஸ்பூன் சூடான எண்ணெயை சேர்த்து கிளறவும்
     
  • பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக கிளறி வைத்துக் கொள்ளவும்
  • அதனை ஒரு கடாயில் எண்ணெய் வைத்து சூடாக்கி போட்டு பொரித்து எடுத்தால் சுவையான மசால் கல்லை தயார்
  • இறுதியாக சிறதளவு கருவேப்பிலையையும் போட்டு பொரித்து அதனுடன் சேர்த்துக் கொண்டால் மணம் சூப்பராக இருக்கும்.

Nutrition

Serving: 200g | Calories: 245kcal | Carbohydrates: 32g | Protein: 14g | Sodium: 232mg | Potassium: 224mg | Vitamin A: 13IU | Calcium: 13.34mg

இதையும் படியுங்கள் : வெறும் ரெண்டே பொருள் இருந்தால் வீட்டிலேயே ஈஸியா கடலை மிட்டாய் செஞ்சிடலாம்!