பொதுவாக நாம் வெயில் காலங்களில் மிகவும் அதிகப்படியாக வெப்பம் நிலவும் காரணமாக கடைகளில் விற்கும் அதிகபடியான கேஸ் அடைத்த குளிர்பானங்கள் மற்றும் கார்பனேடு குளிர்பானங்களை தான் பெரும்பாலான நபர்கள் வாங்கி குடிக்கிறார்கள். இதை விட கொடுமை குழந்தைகள் இதை அதிக விரும்பி கேட்கிறார்கள் என அதையும் பெற்றோர்கள் வாங்கி கொடுப்பது தான் மோசமானவை. நீங்கள் இது போன்று குளிர் பானங்களை உங்கள் குழந்தைகளுக்கு வெயில் காலங்களில் குடிக்க கொடுப்பதற்கு பதிலாக.
இதையும் படியுங்கள் : சுவையான ஆப்பிள் மில்க் ஷேக் செய்வது எப்படி ?
நாம் தமிழ்நாட்டில் பாரம்பரியமாக நம் உணவு சங்கிலிகளில் வரும் மோரை செய்து கொடுக்கலாம். சாதாரணமாக மோரை தயார் கொடுத்தால் யாரும் விரும்பி குடிக்க மாட்டார்கள். அதற்கு பதிலாக இந்த மசாலா நீர் மோர் செய்து பார்க்க போகிறோம். இது உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பருகுவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். அதனால் இன்று சுவையான மசாலா நீர் மோர் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
மசாலா நீர் மோர் | Masala Neer Mor Recipe in Tamil
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 400 tbsp தயிர்
- 2 துண்டு இஞ்சி
- 4 கொத்து கருவேப்பிலை
- 4 பச்சை மிளகாய்
- கருவேப்பிலை சிறிது
- உப்பு தேவையான அளவு
- ¼ tbsp பெருங்காய தூள்
செய்முறை
- முதலில் நாம் எடுத்துக் கொண்ட 400 கிராம் அளவிலான தயிரை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அதனுடன் நான்கு பச்சை மிளகாய், இரண்டு துண்டு இஞ்சி, மூன்று கொத்து கருவேப்பிலை மற்றும் சிறிது கொத்தமல்லி சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.
- அதன் பின்பு மையாக அரைத்த தயிருடன் ஒரு லிட்டர் அளவிற்கான தண்ணீரை ஊற்றி ஒரு முறை நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு மிக்ஸியில் அரைத்து மோரை வடிகட்டியை வைத்து வடிக்கட்டி ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள்.
- பின்பு அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் கால் டீஸ்பூன் அளவு பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலக்கி விட்டு கொள்ளுங்கள். பின் கடாயை அடுப்பில் வைத்து அதனுடன் இரண்டு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
- எண்ணெய் காய்ந்ததும் அதனுடன் அரை டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு, ஒரு கொத்து கருவேப்பிலை மற்றும் ஒரு வரமிளகாய் சேர்த்து நன்றாக தாளித்துக் கொள்ளுங்கள். பின் இந்த தாளிப்பை மோருடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் சுவையான மசாலா நீர் மோர் தயாராகிவிட்டது.