Advertisement
அசைவம்

அடுத்தமுறை நாட்டு கோழி வாங்கி மதுரை ஸ்டைல் மிளகு வறுவல் இப்படி செய்யுங்கள்!

Advertisement

பிராய்லர் கோழியை விட நாட்டுக்கோழி தான் உடலுக்கு நல்லது எனவே முடிந்தவரை பிராய்லர் வாங்கி சமைப்பதைத் தவிர்க்கவும். நாட்டுக்கோழியை வாங்கி சமைத்து சுவையுங்கள் அதிலும் நாட்டுக்கோழியை மதுரை ஸ்டைலில் வறுவல் செய்து சுவைக்க அட்டகாசமாக இருக்கும். இந்த வார கடைசில் நீங்களும் இந்த ரெசிபியை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள் அனைவரும்

விரும்பி சாப்பிடுவார்கள். அடுத்தமுறையும் உங்களை இது போல் செய்ய சொல்லி கேட்ப்பார்கள். அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். அதனால் இந்த மதுரை ஸடைல் நாட்டுக்கோழி மிளகு வறுவல் எப்படி செய்வது, தேயைான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் காணலாம் வாருங்கள்.

Advertisement

நாட்டுக்கோழி வறுவல் | Nattu Kozhi Pepper Fry Recipe In Tamil

Print Recipe
பிராய்லர் கோழியை விட நாட்டுக்கோழி தான் உடலுக்கு நல்லது எனவே முடிந்தவரை பிராய்லர் வாங்கி சமைப்பதைத் தவிர்க்கவும். நாட்டுக்கோழியை வாங்கி சமைத்து சுவையுங்கள் அதிலும் நாட்டுக்கோழியை மதுரை ஸ்டைலில் வறுவல் செய்து சுவைக்க அட்டகாசமாக இருக்கும். இந்த வார கடைசில் நீங்களும் இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword chicken fry, நாட்டுக்கோழி வறுவல்
Prep Time 15 minutes
Cook Time
Advertisement
25 minutes
Total Time 40 minutes
Servings 4 people

Equipment

  • 1 குக்கர்
  • 1 கடாய்

Ingredients

  • ½ கிலோ நாட்டுக்கோழி
  • 150 கிராம் சின்ன வெங்காயம் நறுக்கியது
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • ¼ டீஸ்பூன் சோம்பு
  • 1 ஸ்பூன் மிளகு தூள்
  • ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 ஸ்பூன் தனியா தூள்
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
    Advertisement
  • 2 கிராம்பு
  • 2 பட்டை
  • மல்லி இலை சிறிதளவு
  • நல்லெண்ணெய்

Instructions

  • முதலில் நாட்டுக்கோழியை நன்கு சுத்தம் செய்துகொள்ளவும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், உப்பு, 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் போட்டு 3 விசில் வேகவிட்டு இறக்கவும்.
  • அதன் பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், பட்டை, கிராம்பு, சோம்பு, சேர்த்து தாளித்து அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும், அதனுடன் வேக வைத்துள்ள சிக்கனை சேர்த்து, அணைத்து மசாலா தூள்களையும் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
  • தண்ணீர் நன்கு வற்றியதும், மல்லி இலைகளை தூவி இறக்கவும்.
  • இப்பொழுது சுவையான மதுரை நாட்டுக்கோழி மிளகு வறுவல் ரெடி.

Nutrition

Carbohydrates: 2.5g | Protein: 19g | Fat: 59.4g | Cholesterol: 53mg | Sodium: 184mg | Vitamin A: 3IU | Vitamin C: 3mg | Calcium: 1mg

இதையும் படியுங்கள் : காரசாரமான சுவையில் மட்டன் மிளகு வறுவல் செய்வது எப்படி ?

Advertisement
Ramya

Recent Posts

நம் வீட்டில் பண வரவு அதிகரிக்க உங்களிடம் இந்த 3 பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்!

பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் தன தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். தனம் என்றால் பணம் என்றும் தானியங்கள் என்றால்…

2 மணி நேரங்கள் ago

சப்பாத்திக்கு கிரேவி செய்ய உருளைக்கிழங்கு இல்லைனா இந்த மாதிரி பாம்பே சட்னி செஞ்சு பாருங்க

நம்ம வீட்ல எந்த காய்கறிகளும் இல்லாத சமயத்துல கடலை மாவு மட்டும் இருந்தாலே போதும் சூப்பரா சப்பாத்தி பூரி இட்லி…

2 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் குண்டூர் ஸ்டைல் கார இட்லி ஒரு தரம் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க!

பொடி இட்லி சாப்பிடணும் அப்படின்னு நீங்க ஆசைப்பட்டீங்கன்னா இந்த மாதிரி குண்டூர் ஸ்டைலில் சூப்பரான ஒரு காரப்பொடி ரெடி பண்ணி…

2 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு வாழைக்காய் கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக…

3 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு பலாக்கொட்டை கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு.…

3 மணி நேரங்கள் ago

கையில் கயிறை எத்தனை நாட்கள் வரை கட்ட வேண்டும்

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே…

7 மணி நேரங்கள் ago