- Prep
- 15 min
- Cook
- 25 min
- Total
- 40 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, LUNCH
பிராய்லர் கோழியை விட நாட்டுக்கோழி தான் உடலுக்கு நல்லது எனவே முடிந்தவரை பிராய்லர் வாங்கி சமைப்பதைத் தவிர்க்கவும். நாட்டுக்கோழியை வாங்கி சமைத்து சுவையுங்கள் அதிலும் நாட்டுக்கோழியை மதுரை ஸ்டைலில் வறுவல் செய்து சுவைக்க அட்டகாசமாக இருக்கும். இந்த வார கடைசில் நீங்களும் இந்த ரெசிபியை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள் அனைவரும்
விரும்பி சாப்பிடுவார்கள். அடுத்தமுறையும் உங்களை இது போல் செய்ய சொல்லி கேட்ப்பார்கள். அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். அதனால் இந்த மதுரை ஸடைல் நாட்டுக்கோழி மிளகு வறுவல் எப்படி செய்வது, தேயைான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் காணலாம் வாருங்கள்.
இதையும் படியுங்கள் : காரசாரமான சுவையில் மட்டன் மிளகு வறுவல் செய்வது எப்படி ?
Ingredients
Method
முதலில் நாட்டுக்கோழியை நன்கு சுத்தம் செய்துகொள்ளவும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், உப்பு, 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கரில் போட்டு 3 விசில் வேகவிட்டு இறக்கவும்.
அதன் பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், பட்டை, கிராம்பு, சோம்பு, சேர்த்து தாளித்து அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும், அதனுடன் வேக வைத்துள்ள சிக்கனை சேர்த்து, அணைத்து மசாலா தூள்களையும் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
தண்ணீர் நன்கு வற்றியதும், மல்லி இலைகளை தூவி இறக்கவும்.
இப்பொழுது சுவையான மதுரை நாட்டுக்கோழி மிளகு வறுவல் ரெடி.






