வாயில் வைத்தவுடனே கரையக்கூடிய ஸ்வீட்டான பால் கேக் இப்படி செஞ்சு பாருங்க!

- Advertisement -

பால் கேக்நம்ம குழந்தைங்க ஏதாவது ஸ்னாக்ஸ் கேட்டாங்க அப்படின்னா நம்ம பெரும்பாலும் கடைகள்ல தான் வாங்கி கொடுப்போம். ஏதாவது ஈஸியான ஸ்நாக்ஸ் கேட்டாங்க அப்படின்னா நம்ம வீட்லயே செஞ்சு கொடுப்போம் ஆனால் கேக் அந்த மாதிரி கேட்டாங்கன்னா நம்ம கண்டிப்பா பேக்கரியில் தான் போய் வாங்கி கொடுப்போம். ஆனா நம்ம வீட்டிலேயே பேக்கரி ஸ்டைலில் செய்யக்கூடிய நிறைய கேக் வகைகள் செய்யலாம். அப்படி பெரிய கேக் வகைகள் செய்ய முடியலைன்னாலும் சின்ன சின்ன ஈஸியான கேக் வகைகள் செஞ்சா உங்களுக்கு கொடுத்த அவங்கள ஹேப்பியாக்கலாம்.

-விளம்பரம்-

அந்த வகையில ஒரு சிம்பிளான பால் கேக் சூப்பரான டேஸ்ட்ல எப்படி செய்றதுன்னு பார்க்கலாம். இந்த பால் கேக் குட்டிக்குட்டியா நம்ம செஞ்சு சர்க்கரைல ஊற வச்சு கொடுத்தா குழந்தைங்க ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. இந்த பால்கி கூட சுவை ரொம்பவே ரிச்சா வாயில வச்சு உடனே கரைந்து போய்விடும். அந்த அளவுக்கு ரொம்பவே சாப்ட்டா சாப்பிடுறதுக்கு ரொம்ப ஜூஸியா அட்டகாசமான டேஸ்ட்ல இருக்கும்.

- Advertisement -

உங்க வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வரப் போறாங்க அப்படின்னாலும் அவங்களுக்கு ஒரு ஈவினிங் ஸ்னாக்ஸா இந்த பால் கேக் செஞ்சு கொடுக்கலாம் கண்டிப்பா இது எப்படி செஞ்சீங்க அப்படின்னு உங்ககிட்ட ரெசிபி கேட்டுட்டு பாராட்டிட்டு தான் போவாங்க. அந்த அளவுக்கு ஒரு சூப்பரான பால் கேக்குதா இது இதை செய்வது ஒன்னும் அவ்ளோ பெரிய கஷ்டம் கிடையாது ரொம்ப ஈஸியா செய்யக்கூடியது பால் பவுடரும் மைதா மாவு உங்க வீட்ல இருந்தா போதும் சீக்கிரமாவே இத செஞ்சு முடிச்சிடலாம். இப்ப வாங்க இந்த டீஸ்டான ரிச்சான சாப்டான பால் கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

பால் கேக் | Milk Cake Recipe In Tamil

வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வரப் போறாங்க அப்படின்னாலும் அவங்களுக்கு ஒரு ஈவினிங் ஸ்னாக்ஸா இந்த பால் கேக் செஞ்சு கொடுக்கலாம் கண்டிப்பா இது எப்படி செஞ்சீங்க அப்படின்னு உங்ககிட்ட ரெசிபி கேட்டுட்டு பாராட்டிட்டு தான் போவாங்க. அந்த அளவுக்கு ஒரு சூப்பரான பால் கேக்குதா இது இதை செய்வது ஒன்னும் அவ்ளோ பெரிய கஷ்டம் கிடையாது ரொம்ப ஈஸியா செய்யக்கூடியது பால் பவுடரும் மைதா மாவு உங்க வீட்ல இருந்தா போதும் சீக்கிரமாவே இத செஞ்சு முடிச்சிடலாம்.இப்ப வாங்க இந்த டீஸ்டான ரிச்சான சாப்டான பால் கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: deserts
Cuisine: tamil nadu
Keyword: Milk Cake
Yield: 4
Calories: 28kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் பால் பவுடர்
  • 3/4 கப் மைதா மாவு
  • 1/2 டீஸ்பூன் ஏலக்காய்தூள்
  • 1/2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  • 1 கப் பால்
  • 1 கப் சர்க்கரை
  • 2 ஏலக்காய்
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 சிட்டிகை உப்பு

செய்முறை

  • ஒருபாத்திரத்தில் மைதா மாவு பால் பவுடர் ஏலக்காய் தூள் ஒரு சிட்டிகை உப்பு பேக்கிங் பவுடர் அனைத்தும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • பாலை நன்கு காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும்.
  • ஆற வைத்த பாலை கலந்து வைத்துள்ள மாவில் சிறிது சிறிதாக ஊற்றி நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு கொஞ்சம் லேசாக செய்து வைத்துக் கொள்ளவும்
  • பத்து நிமிடங்கள் ஊறவைத்த பிறகு அதனை உங்களுக்கு தேவையான வடிவத்தில் வெட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்
  • ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து கொதிக்க வைத்து கொள்ளவும். அதனுடன் ஏலக்காயையும் தட்டி போட்டு கொதிக்க வைக்கவும்.
  • பிறகு பொரித்து வைத்துள்ள துண்டுகளை இந்த சக்கரை கரைசலில் போட்டு இரண்டு மணி நேரம் ஊற வைத்து எடுத்தால்சுவையான பால் கேக் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 28kcal | Carbohydrates: 3.3g | Protein: 3.1g | Sodium: 35mg | Potassium: 213mg | Fiber: 1g

இதையும் படியுங்கள் : தேங்காய்ப்பால் மட்டன் ஸ்டூவ் இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! அப்புறம் நீங்களே அடிக்கடி செய்வீங்க!