லட்டு அப்படினாலே சின்ன குழந்தை கள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். லட்டுலியே ரொம்ப ஃபேமஸ் அது பூந்தி லட்டு தான். பூண்டிலாட்டிலேயே மஞ்சள் கலர் ஆரஞ்சு கலர் அப்படின்னு நிறைய கலர் லட்டு நம்ம சாப்பிட்டிருப்போம். இப்போ ரீசன்ட் டைம் சில எல்லாருக்கும் புடிச்ச லட்டுனா அது முடிச்சூர் லட்டு தான்.
அது தவிர டிரை ஃப்ரூட்ஸ் லட்டு ரவா லட்டு அப்படின்னு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு லட்டு ஃபேவரட்டா இருக்கும். என்ன நான் இவ்ளோ லட்டு வகைகள் இருந்தாலும் நம்ம வீட்லயே செய்யக்கூடிய ஒரு சிம்பிளான மில்க் பவுடர் லட்டு இப்போ பாக்க போறோம்.
பால் பவுடரும் பாலும் நம்ம வீட்ல எப்பவுமே இருக்கும் இது ரெண்டும் வெச்சு செய்யக்கூடிய ஒரு சூப்பரான லட்டு நம்ம இதுவரைக்கும் சாப்பிட்டு இருக்க மாட்டோம். சட்டுனு பூந்தி பொறிக்காமல் செய்யக்கூடிய சூப்பரான மில்க் பவுடர் லட்டு எப்படி செய்றதுன்னு வாங்க பார்க்கலாம்.
மில்க் பவுடர் லட்டு | Milk Powder Laddu Recipe In Tamil
Equipment
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- 2 கப் பால் பவுடர்
- 1/4 கப் பால்
- 1/4 கப் சர்க்கரை
- 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
- 10 முந்திரி
- 1/4 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
- 2 டீஸ்பூன் நெய்
செய்முறை
- முதலில் ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரிப்பருப்பை நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- அதே கடாயில் பால் சேர்த்து நன்கு காய்ந்தது பால் பவுடர் மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறவும்.
- சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து கட்டி சேராமல் இருக்க கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கவும்.
- இடையிடையே சிறிதளவு நெய் சேர்த்து கடாயில் ஒட்டாத அளவிற்கு திரண்டு வரும் வரை நன்றாக கிளறவும்.
- இறுதியாக பொன்னிறமாக வறுத்த முந்திரி பருப்பு சேர்த்து கிளறி சூடு ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக பிடித்தால் சுவையான மில்க் பவுடர் லட்டு தயார்.
Nutrition
இதையும் படியுங்கள் : தின்ன தின்ன திகட்டாத சுவையில் ரவா லட்டு ஒரு தடவை இப்படி ஈஸியாக வீட்டிலயே செஞ்சி பாருங்க!