பிள்ளைகளின் பிறந்தநாள், பெற்றோர்களின் திருமண நாள் மற்றும் சுபமான அனைத்து தினங்களிலும் இனிப்பு சாப்பிட்டு கொண்டாடுவது தான் தமிழர் மரபாக உள்ளது. எந்த ஒரு சுப காரியமாக இருந்தாலும் அந்த நிகழ்ச்சியில் இனிப்பு வழங்குவதைப் பலரும் வழக்கமாகக் வைத்துள்ளனர். இவ்வாறு இனிப்பு என்பது மக்களின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக அமைந்துள்ளது.
இந்த இனிப்பை கடைகளில் வாங்கி கொடுப்பதை தவிர்த்து, வீட்டிலேயே செய்து கொடுத்தால் மிகவும் மகிழ்ச்சியாக சாப்பிடுவார்கள். அவ்வாறு அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சுவையான பால் கேசரி பற்றி தான் இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். உங்கள் குழந்தை மாலையில் இனிப்பாக சாப்பிட ஏதேனும் கேட்டால், அவர்களுக்கு உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையில் ஓர் இனிப்பு பலகாரத்தை செய்து கொடுங்கள். அதிலும் உங்கள் உங்களுக்கு கேசரி பிடிக்குமானால், பால் மற்றும் ரவையைக் கொண்டு செய்யப்படும் கேசரி செய்து கொடுங்கள். வெறும் 3 அல்லது 4 பொருட்களை கொண்டே வெகு சுலபமாக இதை செய்து விடலாம்.
அதனாலேயே உண்பவர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் இல்லத்தரசிகள் மத்தியிலும் இவை பிரபலம். அதுமட்டுமல்ல, வீட்டுக்கு திடீரென விருந்தினர் வந்துவிட்டால் வீட்டில் ரவை, சர்க்கரை, முந்திரி, சிறிது நெய் இருந்துவிட்டால் போதும் சீக்கிரமாக கேசரி செய்துவிடலாம். ஏலக்காய் பொடி, முந்திரி பருப்பு மற்றும் நெய் போன்றவற்றை சேர்ப்பதால் கமகம என்று மணமாக இருக்கக் கூடிய இந்த பால் ரவை கேசரியை எப்படி செய்யலாம் என்பதனை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
பால் ரவை கேசரி | Milk Rava Kesari Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் ரவை
- 4 கப் பால்
- 2 கப் சர்க்கரை
- 2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
- 1/4 கப் நெய்
- 1/4 டீஸ்பூன் உப்பு
- பாதாம், திராட்சை, முந்திரி தேவையான அளவு
செய்முறை
- முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு நெய் விட்டு காய்ந்ததும் ரவை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின் அதே கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சையை சேர்த்து வறுத்து எடுத்தது வைத்துக் கொள்ளவும்.
- அதன்பிறகு அதே கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி காய்ந்ததும் பாலை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். இதனுடன் ஏலக்காய் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- பின் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதித்ததும் ரவையை சேர்த்து கட்டிகள் இல்லாமல் நன்கு கிளறி விடவும். ரவை நன்கு வெந்ததும் சக்கரை கொஞ்சம் நெய் ஊற்றி நன்கு கிளறவும்.
- கேசரி சட்டியில் ஒட்டாமல் வந்ததும் முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் மிகவும் சுவையான மற்றும் அருமையான பால் ரவை கேசரி தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : இந்த வெயிலுக்கு ஏற்ற பால் சர்பத் இப்படி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!