Advertisement
சைவம்

கிராமத்து ஸ்டைல் அருமையான மொச்சை முருங்கை புளிக்குழம்பு ஒரு முறை இப்படி செய்து சுவைத்து பாருங்கள்!

Advertisement

மொச்சைக் கொட்டையையும் முருங்கைக்காயையும் வைத்து ஒரு புளிக் குழம்பு ரெசிபியை தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சுடச்சுட சாதத்தில் இந்தக் குழம்பை போட்டு பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாக இருக்கும். தொட்டுக்கொள்ள ஒரு வத்தல் இருந்தால் போதும். பச்சை மொச்சை அல்லது காய்ந்த மொச்சை எதில் வேண்டுமென்றாலும் சேர்த்து கொள்ளலாம்.

என்ன தான் பீட்சா, பர்கர் என்ற நாகரீக உணவு முறைக்கு மாறிவிட்டாலும் அனைத்து விதமான வயதினரும் ஒன்று கூடி பேசும் பொழுது எங்களது ஊரில்  செய்த இந்த சாப்பாடு, எனது பாட்டி செய்த இந்த குழம்பு அவ்வளவு சுவை என்று பேசிக் கொண்டிருப்பதை ஒரு முறையாவது கவனித்திருக்கலாம்.

Advertisement
Advertisement

அவ்வாறு கிராமத்து உணவுகளுக்கு என்று தனிப்பட்ட சுவை இருக்கிறது. ஒருமுறை அந்த சுவையை ருசித்து விட்டால் என்றென்றும் அது நமது நாவை விட்டு மறையாது. அவ்வாறு அவர்கள் செய்யும் பக்குவமே தனி விதமாகத்தான் இருக்கும். அவர்கள் கை மனமும், அவர்கள் செய்யும் விதமும் ஒரு தனிப்பட்ட சுவையை அந்த உணவிற்கு கொடுத்துவிடும். இவ்வாறு இந்த மொச்சை முருங்கை புளிக்குழம்பு எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

மொச்சை முருங்கை குழம்பு | Mochai Murungai Kulambu

Print Recipe
இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.சுடச்சுட சாதத்தில் இந்தக் குழம்பை போட்டு பிசைந்து சாப்பிட்டால் அவ்வளவு அருமையாகஇருக்கும். தொட்டுக்கொள்ள ஒரு வத்தல் இருந்தால் போதும். பச்சை மொச்சை அல்லது காய்ந்தமொச்சை எதில் வேண்டுமென்றாலும் சேர்த்து கொள்ளலாம். அவ்வாறு கிராமத்து உணவுகளுக்கு என்று தனிப்பட்டசுவை இருக்கிறது. ஒருமுறை அந்த சுவையை ருசித்து விட்டால் என்றென்றும் அது நமது நாவைவிட்டு மறையாது.
Advertisement
அவ்வாறு அவர்கள் செய்யும் பக்குவமே தனி விதமாகத்தான் இருக்கும். அவர்கள்கை மனமும், அவர்கள் செய்யும் விதமும் ஒரு தனிப்பட்ட சுவையை அந்த உணவிற்கு கொடுத்துவிடும்.இவ்வாறு இந்த மொச்சை முருங்கை புளிக்குழம்பு எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி தான்இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
Course Kulambu
Cuisine tamil nadu
Keyword Mochai Murungai Kulambu
Prep Time 2 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 649

Equipment

  • 1 கடாய்

Ingredients

  •  காய்ந்த மொச்சைக்கொட்டை
  • முருங்கைக்காய்
  • சின்ன வெங்காயம்
  • பொடியாக அரிந்த வெங்காயம்
  • பொடியாக அரிந்த தக்காளி
  • புளி
  • கலந்த மிளகாய்த் தூள்
  • மஞ்சள் தூள்
  • வெந்தயப் பொடி
  • கறிவேப்பிலை
  • கொத்தமல்லித் தழை
  • நல்லெண்ணெய்
  • உப்பு

Instructions

  • மொச்சைக் கொட்டையை முந்தைய நாள் இரவே தண்ணீர் ஊற்றி ஊற வைத்துவிடவும், முருங்கைக்காயைத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும், சின்ன வெங்காயத்தின் தோலை உரித்து வைக்கவும். மற்ற தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
  • ஊறிய மொச்சைக்கொட்டையைக் குக்கரில் போட்டு 4 விசில் வரும் வரை வேக வைத்து, ஆறியதும் தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்.
  • புளியில் தண்ணீர் ஊற்றி ஊற வைத்து, பிறகுகரைத்து வடிகட்டி வைக்கவும்,
  • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி, சின்ன வெங்காயம் மற்றும் பொடியாக அரிந்த வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பிறகு கறிவேப்பிலை, தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு குழையும் வரை வதக்கவும், வதங்கியதும் வெந்தயப் பொடி சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கிய பிறகு புளிக் கரைசலை ஊற்றவும்.
  • அத்துடன் முருங்கைக்காய், கலந்த மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும்.
     
  • முருங்கைக்காய் வெந்ததும் மொச்சைக்கொட்டையைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
  • நன்றாகக் கொதித்ததும் 2 நேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி இறக்கி கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்,
     

Nutrition

Serving: 450g | Calories: 649kcal | Carbohydrates: 26g | Sodium: 345mg | Potassium: 367mg | Calcium: 367mg
Advertisement
Prem Kumar

Recent Posts

அபார திறமையினால் வாழ்க்கையில் உச்சம் தொடும் இந்த சில ராசிகளில் பிறந்த பெண்கள்!!

பொதுவாக அனைவரும் வெற்றிபெறத்தான் ஆசைப்படுவார்கள். ஆனால் இது அனைவருக்கும் இலகுவாக நடந்துவிடுவது கிடையாது. பன்னிரெண்டு ராசிகளில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு…

2 மணி நேரங்கள் ago

10 நிமிடத்தில் சுவையான மற்றும் ஆரோக்கியமான துளசி பிரைட் ரைஸை வீட்டிலேயே செய்து பாருங்கள் ருசி மிகவும் அபாரமாக இருக்கும்!!

பிரைட் ரைஸ் பிரியர்கள் பிரியாணி பிரியர்களை விட அதிக அளவில் நம் நாட்டில் இருக்கின்றனர். பிரியாணிக்கு இணையான ஒரு டிஷ்…

3 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு இதமா மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா இப்படி செய்து பாருங்க!

வெயில் காலங்களில் நாம் தாகத்தை அடக்குவதற்காக பல குளிர்பானங்கள் குடிப்போம் அந்த வகையில் நாம் குடிக்கும் பானங்களில் ஜிகர்தண்டாவும் ஒன்றுதான்.…

4 மணி நேரங்கள் ago

ஒரு முறை இறாலுடன் கத்தரிக்காய் சேர்த்து மணக்க மணக்க இப்படி குழம்பு வைத்து பாருங்கள் அவ்வளவு ருசியாக இருக்கும்!!

அசைவ சாப்பாடு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. எல்லோருக்கும் பிடித்தது மீன், கோழி, நண்டு, இறால் போன்றவை தான். அதிலும் இறால்…

6 மணி நேரங்கள் ago

சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் ஏற்பட போகும் சில ராசிகள்!

பொதுவாக ஒவ்வொரு கிரகங்களின் பெயர்சியாலும் அனைத்து ராசிக்காரர்களும் பலன்களை கேட்பார்கள் அந்த வகையில் ஜோதிடத்தின்படி மே 12ஆம் தேதி என்று…

7 மணி நேரங்கள் ago

இட்லி தோசைக்கு இந்த உளுந்து சட்னி செஞ்சு சாப்பிட்டு பாருங்க

பொதுவா நம்ம வீட்டுல தினமும் இட்லி தோசை தான் இருக்கும் அந்த மாதிரி இட்லி தோசை செஞ்சால் அதுக்கு டிஃபரண்டா…

8 மணி நேரங்கள் ago