இந்த வார்தைகள் பேசுபவரிடம் பணம் தங்கவே தங்காது! அது என்னென்ன வார்த்தைகள் தெரியுமா ?

- Advertisement -

நமக்கு சிறுவயதில் கற்பிக்கும் போது இந்த உலகில் உணவு இல்லாமல் ஒரு வாரம் உயிர் வாழலாம், நீரில்லாமல் மூன்று நாட்கள் உயிர் வாழலாம், காற்று இல்லாமல் ஒரு நொடி கூட உயிர் நாள் வாழ முடியாது என்று தான் சொன்னார்கள். ஆனால் தற்போது உலகில் நிலவும் சூழ்நிலையை பார்த்தால் இன்னும் சிறிது நாட்களில் பணம் இல்லாமல் ஒருவன் வாழவே முடியாது என்ற அளவிற்கு வந்துவிடும். அந்த அளவிற்கு பணம் இந்த உலகை ஆட்டி படைக்கின்றது. இந்த பணத்தை நாம் சம்பாதிப்பதற்கு எவ்வளவு கஷ்டப்படுகிறோம் என்று நமக்குத் தான் தெரியும். இருந்தாலும் 100 ரூபாய் சம்பாதித்தாலும் 200 ரூபாய் செலவாகிறது. இதில் எப்படி நம் கையில் பணம் தங்கும். அதனால் ஆன்மீக ரீதியாக நம் கையில் பணம் அதிகரிப்பதற்காக சொல்லப்பட்ட சில வழிமுறைகளை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

பணம் கொடுத்தல்

முதலில் பணம் நம்மிடம் தங்க வேண்டுமென்றால் பணத்தை நாம் முறையாக கையாள தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது நீங்கள் ஒருவருக்கு இப்போது பணத்தை கொடுக்கும் போது அதை மடித்து தான் கொடுக்க வேண்டும் அப்படி மடித்துக் கொடுக்கும் போது மூடி இருக்கும் பகுதி பணம் கொடுப்பவர்களிடமும் திறந்திருக்கும் பகுதி உங்களிடமும் இருக்குமாறு கொடுக்க வேண்டும். மேலும் நீங்கள் உங்கள் வீட்டில் வைத்து யாருக்காவது பணம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தால் பணம் கொடுக்க வேண்டிய நபரை வீட்டிற்கு அழைத்து சென்று வாசல் படியை கடந்த உடன் நிப்பாட்டி கொடுங்கள். எக்காரணம் கொண்டு வெளியே வைத்து பணம் கொடுக்கக் கூடாது.

- Advertisement -

இன்பமாக செலவு செய்யுங்கள்

நீங்கள் செலவு செய்யும் போது பணம் கொடுப்பதாக இருந்தாலும் இல்ல வேற நபருக்கு பணம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்தாலும் பணத்தை எப்போதும் கஷ்டப்பட்டு கொடுக்க கூடாது அதற்கு பதிலாக மனமகிழ்ச்சியுடன் பணத்தை வாழ்த்தி கொடுக்க வேண்டும். அதாவது இந்த பணத்தை வாங்குகின்ற நபரின் தேவைகள் அனைத்தையும் இந்த பணம் பூர்த்தி செய்துவிட்டு பல மடங்காக பெருகி மீண்டும் என்னிடம் திரும்ப வர வேண்டும் என இந்த பிரபஞ்சத்திடம் மனதார வேண்டிக் கொண்டு அதன் பின்பு தான் கொடுக்க வேண்டும். அது பத்து ரூபாயாக இருந்தாலும் சரி பத்தாயிரம் ரூபாயாக இருந்தாலும் சரி.

நேர்மறையான வார்த்தைகள்

பணத்தை நம் கையாளும்போது அதை மரியாதையாக கையாள வேண்டும் அது நாணயமாக இருந்தாலும் சரி ரூபாய் தாளாக இருந்தாலும் சரிு தூக்கி எறிய கூடாது. ஏன் பிச்சை போடும்போது கூட அந்த பணத்தை மரியாதையாக பிச்சை போடுபவர்கள் கரங்களில் கொடுக்க வேண்டும். மேலும் உங்களிடம் பணக்கஷ்டம் வருகிறது பணம் இல்லாத சூழ்நிலை உருவாகிறது என்றாலும் உங்களிடம் பணம் இல்லை, பணம் தீர்ந்து விட்டது இது போன்று எதிர்மறையான வார்த்தைகளை உபயோகப்படுத்தக் கூடாது. அதற்கு பதிலாக பணம் சற்று குறைவாக உள்ளது, இன்னும் பணம் வர வேண்டி உள்ளது என இது போன்ற வார்த்தைகளை சொல்லி பழகுங்கள். இது போன்ற நேர்மையான வார்த்தைகளை சொல்லும்போது உங்கள் கையில் பண வரவு என்பது அதிகரிக்கும்.

மகாலட்சுமி

நீங்கள் சொந்தமாக தொழில் நடத்துகிறீர்கள் அல்லது கடை வைத்து வியாபாரம் செய்பவராக இருந்தாலும் உங்களுக்கு எந்த அளவு பிரச்சனைகள், சிக்கல்கள் உருவாகினாலும். நீங்கள் வியாபாரம் செய்யும் கடையில் இருக்கும் போது தொழில் நடத்தும் இடத்தில் இருக்கும் போது எப்போதும் இன்பமாக இருப்பதற்கு சற்று பழகிக் கொள்ளுங்கள். ஏனென்றால் இன்முகத்துடன் இருப்பவரிடம் தான் மகாலட்சுமி இருப்பாள். அதற்கு மாறாக நீங்கள் இருக்கும் இடத்தில் கடுகடுவன கோபமாகவும் அனைவரிடமும் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசுபவராக இருந்தால் மூதேவி தான் உங்களிடம் இருப்பாள் என சாஸ்திரங்கள் நமக்கு தெளிவாக கூறுகின்றன.

-விளம்பரம்-

பண வரவு அதிகரிக்க

அதுபோல உங்கள் வீட்டுக்கு பண வரவு வேண்டும், பணம் புழக்கம் அதிகரிக்க வேண்டும் என விரும்பும் பெண்கள் வார தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பஞ்சமுக குத்துவிளக்கில் நெய் அல்லது இலுப்பை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வழிபாடு செய்வதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். லட்சுமி தேவியின் பரிபூரண அருள் இருப்பவர்களிடம் தான் வைரம், தங்கம், வெள்ளி என சகல ஐஸ்வரியங்களும் சேரும்.

விற்க, அடகு வைக்க கூடாது

அப்படி நீங்கள் வைத்திருக்கும் தங்கம், வைரம் வெள்ளி என சகல ஐஸ்வரியங்களை வைத்திருக்கிறீர்கள் என்றால் எக்காரணம் கொண்டும் அதை விற்கவோ, அடகு வைக்க கூடாது. அதுபோக உங்கள் வாரிசுகளுக்கு வாழும் போதே நீங்கள் அன்பளிப்பாக வழங்குவதும் கூடாது. உங்கள் காலகட்டம் முடிந்த பிறகு அது நேரடியாக உங்கள் வாரிசுகளிடம் போய் சேருமாறு செய்து விடுங்கள். இதையெல்லாம் நினைவில் கொண்டு நீங்கள் நடந்து கொண்டால் கண்டிப்பாக பண வரவு உங்களிடம் அதிகரிக்கும். நம்பிக்கையுடன் இதையெல்லாம் செய்து பாருங்கள் நல்ல பலனை கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here