Advertisement
சைவம்

உடலுக்கு ஆரோக்கியம் தரும் முளைக் கீரை சப்பாத்தி மிருதுவாக இப்படி செய்து பாருங்களேன்!

Advertisement

உடலுக்கு ஆரோக்கியம் தரும் ரெசிபியை மிக மிக சுலபமான முறையில் செய்து கொடுக்க வேண்டும். அதே சமயம் அந்த ரெசிபி சுவையானதாகவும் இருக்க வேண்டும். குழந்தைகள் விருப்பமாக சாப்பிடும் பொருளாகவும் இருக்க வேண்டும். அப்படி ஒரு சூப்பரான ரெசிபியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம்.

ஆரோக்கியம் தரக்கூடிய முளைக் கீரையை கடைந்து கொடுத்தால், குழம்பு வைத்துக் கொடுத்தால் குழந்தைகள் நிச்சயம் சாப்பிட மாட்டார்கள். இப்படி சப்பாத்தியாக செய்து லஞ்சுக்கு பாக்ஸில் போட்டு கொடுத்தால், விரும்பி சாப்பிடுவார்கள். முளைக்கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிர சத்து, ரத்தத்தை சுத்தம் செய்வதோடு, அதில் உள்ள மணிச்சத்து மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.

Advertisement

பொதுவாக எல்லோர் வீட்டிலும் எப்போதுமே அடிக்கடி சப்பாத்தி செய்வார்கள். சப்பாத்தியில் பல வகைகள் உண்டு. இந்த சமையல் குறிப்பு பதிவில் இப்படி இந்த முளைக் கீரை சப்பாத்தி மிகவும் எளிமையாகவும் அதே நேரத்தில் கீரை சேர்த்து குழந்தைகளுக்கு ஆரோக்கியமாகவும் இப்படி செய்து கொடுப்பது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

முளைக் கீரை சப்பாத்தி | Mulai Keerai Chappathi In Tamil

Print Recipe
ஆரோக்கியம் தரக்கூடிய முளைக் கீரையை கடைந்துகொடுத்தால், குழம்பு வைத்துக் கொடுத்தால் குழந்தைகள் நிச்சயம் சாப்பிட மாட்டார்கள்.இப்படி சப்பாத்தியாக செய்து லஞ்சுக்கு பாக்ஸில் போட்டு
Advertisement
கொடுத்தால், விரும்பி சாப்பிடுவார்கள்.முளைக்கீரையில் அடங்கியுள்ள இரும்பு மற்றும் தாமிர சத்து, ரத்தத்தை சுத்தம் செய்வதோடு,அதில் உள்ள மணிச்சத்து மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.
Course Breakfast, dinner
Cuisine tamil nadu
Keyword Mulai Keerai Chappathi
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 207

Equipment

  • 1 கடாய்
    Advertisement

Ingredients

  • 1 கப் முளைக்கீரை
  • 1 கப் கோதுமை மாவு
  • 1 கப் காரட்
  • 1 சிட்டிகை மஞ்சள் தூள்
  • 1 மேசைக்கரண்டி மிளகாய் தூள்
  • 1 மேசைக்கரண்டி சீரகத் தூள்
  • உப்பு தேவைக்கு ஏற்ப
  • எண்ணெய் தேவைக்கு ஏற்ப

Instructions

  • தேவையான அனைத்தையும் எடுத்து வைத்துக் கொள்ளவும். காரட்டை துருவி வைத்துக் கொள்ளவும்
  • கீரையை கழுவி நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கீரையை வதக்கவும்.
  • பின்பு வதக்கிய கீரை, காரட் துருவல், கோதுமை மாவு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத் தூள், உப்பு, எண்ணெய், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து ஒரு மணி நேரம் வைக்கவும்.
  • சிறிதளவு மாவை எடுத்து சப்பாத்தி போல் இட்டு அதன் மேல் சிறிது எண்ணெய் தடவவும்
  • பின் முக்கோணமாக மடித்து மீண்டும் சப்பாத்தி போல் இட்டு சுட்டு எடுக்கவும். இப்படி செய்வதால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.
  • இதற்கு தொட்டுக் கொள்ள பனீர் பட்டர் மசாலா, சன்னா மசாலா, சிக்கன் கிரேவி ரைத்தா வைத்து சாப்பிடலாம்.

Nutrition

Serving: 100g | Calories: 207kcal | Carbohydrates: 37.7g | Protein: 37.7g | Fat: 4g | Fiber: 4.1g | Calcium: 115mg | Iron: 2.4mg
Advertisement
Prem Kumar

Recent Posts

சுவையான பன்னீர் நாண் இனி ஹோட்டல் சென்று சாப்பிடாமல் வீட்டிலேயே எளிய‌ முறையில் உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள்!!

நாண் என்பது வேறு ஒன்றும் இல்லை. இதுவும் ஒரு வகையான சப்பாத்தி அல்லது ரொட்டி எனலாம். ஆனால் நாணின் சிறப்பு…

15 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 09 மே 2024!

மேஷம் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். செலவுகளை கட்டுப்படுத்துங்கள். இன்று கடந்த சில நாட்களை விட என்று மிகவும்…

3 மணி நேரங்கள் ago

பன்னீர் கேப்ஸிகம் மசாலா

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அதற்கு ஒரு சிம்பிளான அதே சமயம் வீட்டில் உள்ளோர் அனைவரும்…

12 மணி நேரங்கள் ago

மட்டன் மிளகு பிரட்டல் இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க ரெண்டு தட்டு சோறு சாப்பிடுவாங்க!

மட்டன் எடுத்தா என்ன மட்டன் குழம்பு மட்டன் பிரியாணி மட்டன் கிரேவி மட்டன் சுக்கா அப்படின்னு நிறைய செஞ்சு சாப்பிட்டு…

16 மணி நேரங்கள் ago

ஒவ்வொரு சூழலிலும் ஒரு தெய்வத்தை எத்தனை முறை வளம் வந்து வழிபட்டால் முழு பலன் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்

நாம் பொதுவாக ஒரு கோவிலுக்கு சென்றால் அந்த கோவிலில் உள்ள தெய்வத்தை வழிபட்டு விட்டு தெய்வத்துடைய நாமத்தையோ அல்லது ஏதாவது…

16 மணி நேரங்கள் ago

வெறும் மூணு பொருள் மட்டும் வச்சி சுவையான வெள்ளரிப்பழ ஜூஸ் எப்படி செஞ்சு குடிச்சு பாருங்க!

பொதுவாவே வெள்ளரிக்காய் நம்ம உடம்புக்கு ரொம்ப நல்லது. உடம்புல இருக்க சூட்ட தனிச்சு உடம்புக்கு குளிர்ச்சியை கொடுக்கக் கூடியது தான்…

17 மணி நேரங்கள் ago