Home ஸ்நாக்ஸ் தித்திக்கும் சுவைல முந்திரி கொத்து செஞ்சு ரசிச்சு ருசிச்சு பாருங்க!

தித்திக்கும் சுவைல முந்திரி கொத்து செஞ்சு ரசிச்சு ருசிச்சு பாருங்க!

நம்ம வீட்ல ஒரு விசேஷ த்துக்கு பண்டிகைக்கும் கண்டிப்பா ஸ்வீட் செஞ்சு சாப்பிடுவோம். அதிரசம் முறுக்கு சீடை ஜிலேபி லட்டு ரவா லட்டு குலோப்ஜாமூன் நம்ம வீட்ல விசேஷத்திற்கு செல்வோம் அந்த வகையில் இந்துக்கள் பண்டிகையா இருந்தாலும் சரி கிறிஸ்தவர்கள் பண்டிகையாக இருந்தாலும் சரி முந்திரிக்கொத்து எல்லார் வீட்டிலும் கண்டிப்பா செய்வாங்க. இந்த முந்திரி கொத்து சாப்பிடுவதற்கு நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு சூப்பர் டேஸ்ட்ல இருக்கும்.

-விளம்பரம்-

பாரம்பரியமான முறையில் இந்த முந்திரி கொத்து செய்து சாப்பிட்டால் அந்த டேஸ்டுக்கு அடிமையாகி விடுவோம் அந்த அளவுக்கு ஒரு சூப்பரான ரெசிபி தான் இந்த முந்திரி கொத்து. இந்த முந்திரி கொத்து செஞ்சு வெச்சா சட்டென்று எல்லாமே காலியாகிடும் அந்த அளவுக்கு குழந்தைகள்ள இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே இதை விரும்பி சாப்பிடுவாங்க. உங்களுக்கு ஒரு வேளை முந்திரி கொத்து செய்ய தெரியல அப்படின்னா இப்ப சொல்ற இதே அளவுல முந்திரி கொத்து செஞ்சு பாருங்க உங்களுக்கு பர்ஃபெக்ட்டான பாரம்பரியமான முந்திரிக்கொத்து டேஸ்டான முறையில் கிடைக்கும்.

இனிமேல் எப்பவும் உங்க வீட்டில ஒரே மாதிரியான இனிப்புகள் செய்யாம இந்த மாதிரி முந்திரிக்கொத்தும் செஞ்சு பாருங்க. இப்ப வாங்க இந்த சூப்பரான சுவையான அருமையான முந்திரி கொத்து எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
No ratings yet

முந்திரி கொத்து | Munthiri Kothu Recipe In Tamil

பாரம்பரியமான முறையில் இந்த முந்திரி கொத்து செய்து சாப்பிட்டால் அந்த டேஸ்டுக்கு அடிமையாகி விடுவோம்அந்த அளவுக்கு ஒரு சூப்பரான ரெசிபி தான் இந்த முந்திரி கொத்து. இந்த முந்திரி கொத்துசெஞ்சு வெச்சா சட்டென்று எல்லாமே காலியாகிடும் அந்த அளவுக்கு குழந்தைகள்ள இருந்து பெரியவங்கவரைக்கும் எல்லாருமே இதை விரும்பி சாப்பிடுவாங்க. உங்களுக்கு ஒரு வேளை முந்திரி கொத்துசெய்ய தெரியல அப்படின்னா இப்ப சொல்ற இதே அளவுல முந்திரி கொத்து செஞ்சு பாருங்க உங்களுக்குபர்ஃபெக்ட்டான பாரம்பரியமான முந்திரிக்கொத்து டேஸ்டான முறையில் கிடைக்கும்.
Course: Dessert, snacks
Cuisine: tamil nadu
Keyword: Munthiri Kothu
Calories: 94kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் பாசிப்பயறு
  • 1 கப் தேங்காய் துருவல்
  • 1 கப் கருப்பட்டி
  • 1 கப் அரிசி மாவு
  • 1/4 கப் மைதா மாவு
  • 1 டீஸ்பூன் நெய்
  • 1/4 டீஸ்பூன் உப்பு
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் கருப்பு எள்
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • ஒரு கடாயில் பாசி பயறு சேர்த்து பொன் நிறமாக வறுத்து எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
  • கடாயில் நெய் சேர்த்து தேங்காய் துருவலை போட்டு வறுத்து எடுக்கவும் பிறகு அதில் கருப்பு எள்சேர்த்து அதனையும் வறுத்து எடுத்து மிக்ஸி ஜாரில் பாசிப்பயறு மாவுடன் சேர்த்து அனைத்தையும்ஒன்றாக அரைத்துக் கொள்ளவும்
  • ஒரு பாத்திரத்தில் கருப்பட்டி சேர்த்து கரைத்து கொதிக்க வைத்து வடிகட்டி பாசிப்பயிறு மாவுடன் சேர்த்துகிளறவும்
  • அதனை ஆற வைத்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
  • பிறகு ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு மைதா மாவு மஞ்சள் தூள் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து காய் வைத்துவிட்டு உருட்டி வைத்துள்ள உருண்டைகளை கலந்து வைத்துள்ளஅரிசி மாவில் முக்கி எடுத்த எண்ணெயில் போட்டு மிதமான தீயில் பொரித்து எடுத்தால் சுவையான முந்திரி கொத்து தயார்

Nutrition

Serving: 100g | Calories: 94kcal | Carbohydrates: 29g | Protein: 7.6g | Sodium: 84mg | Potassium: 198mg | Fiber: 4g | Iron: 1mg

இதையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் முந்திரி கேக் ஒருமுறை இப்படி மட்டும் வீட்டில் செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்! கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவார்கள்!