இந்த விஷயங்கள் நடந்தால் உங்களுக்கு மூன்றாவது கண் இருக்கிறது என்று அர்த்தம்!

- Advertisement -

இந்த உலகில் ஒருவர் பிறப்பிலிருந்து இறப்பு வரையில் சிவபெருமான் உடன் இருப்பதாக வேதங்களிலும் புராணங்களிலும் சொல்லப்படுகிறது. எனவே உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் சிவபெருமானின் குணங்களும் இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் சிவபெருமானுக்கு இருக்கும் மூன்றாவது கண்ணான ஞான கண்ணும் அனைவருக்கும் இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

-விளம்பரம்-

சிவபெருமானின் வலது கண் சூரியன் என்றும் இடது கண் சந்திரன் என்றும் நெற்றிக்கண்ணானது ஞானக்கண் என்றும் அழைக்கப்படுகிறதுமூன்றாவது கண் நெற்றிக்கண் ஞானக்கண் என்பதையெல்லாம் நாம் நினைக்கும் பொழுது நமக்கு சிவபெருமான் தான் நினைவிற்கு வருவார். பார்வதி தேவி ஒருமுறை சிவபெருமானின் கண்களை விளையாட்டாக முடிவிட இந்த உலகமே நின்று போய்விட்டதாக புராணங்கள் சொல்கிறது. அப்பொழுது சிவபெருமான் அவருடைய ஞானத்தை எல்லாம் ஒன்று திரட்டி மூன்றாவது கண்ணான நெற்றிக்கண்ணை இயங்கச் செய்து உலகத்திற்கு ஒளி தந்ததாக நம்பப்படுகிறது. எனவே மனிதர்கள் ஆகிய நமக்குள்ளும் ஞானக்கண் இருக்கிறதுஆன்மீக வளர்த்தால் இந்த ஞானக்கண் விழிப்பும் அடைகிறது என்று சொல்லப்படுகிறது. மூன்றாவது கண்ணான இந்த யானை கண் நமக்குள் இருப்பதை நாம் எப்படி தெரிந்து கொள்வது என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

ஞானக்கண் நமக்கு இருப்பதை உணர்த்தும் சில அறிகுறிகள்

எதிர்காலத்தில் நடக்கப்போகும் சில விஷயங்களை முன்கூட்டியே உங்களுடைய உள்ளுணர்வு உங்களுக்கு சொல்கிறது என்றால் அது உங்களுடைய அன்றாட வாழ்க்கையை நடத்த மிகவும் உதவியாக இருக்கும் அப்படி இருந்தால் உங்களுக்கு ஞானக்கண் இருக்கிறது என்று அர்த்தம்.

உங்களுக்கு இரவில் வரக்கூடிய கனவுகள் அனைத்தும் தெளிவாகவும் ஏதோ ஒன்றை உங்களுக்கு உணர்த்துவதாகவும் ஆன்மீகம் சார்ந்ததாகவும் கனவுகள் வந்தால் அது மூன்றாவது கண்ணிற்கான அறிகுறி.

உங்களைச் சுற்றி நடக்கும் சில விஷயங்களை உங்களின் உணர் திறன் மூலம் நீங்கள் அறிந்து கொண்டாலும் உங்களின் நெற்றி பகுதிகள் நுணுக்கமான உணர்வுகள் அழுத்தம் போன்றவைகள் ஏற்பட்டாலும் அதுவும் ஒரு அறிகுறி தான்.

-விளம்பரம்-

யாருமே கவனிக்காத சில விஷயங்களை நீங்கள் மட்டும் உற்று கவனிப்பீர்கள்

உங்களுடைய எண்ணங்கள் எப்பொழுதும் ஆன்மீகத்தை பற்றியதாகவே இருக்கும். இந்த உலகத்தில் இருந்து உங்களுக்கு வரக்கூடிய சில செய்திகள் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்ல வருவதாகவும் உணர்த்துவதாகவும் இருக்கும்.

இந்த உலகத்தில் உள்ள சிக்கல்கள் இந்த பிரபஞ்சத்தின் அழகு அனைத்து உயிர்களையும் ஒன்றாக நினைக்கும் தன்மை எதார்த்தத்தை பற்றிய உங்களுடைய விரிவான சிந்தனைகள் என இவை அனைத்துமே அறிகுறிகள் தான்.

இதனையும் படியுங்கள் : கனவில் சிவபெருமான் வந்தால் அதற்கான காரணம் தெரியுமா ? அதனால் நமக்கு கிடைக்கப் போகும் பலன்கள் என்னென்ன?

-விளம்பரம்-