Advertisement
அசைவம்

காரசாரமான கன்னியாகுமரி நண்டு மசாலா குழம்பு செய்வது எப்படி ?

Advertisement

சாப்பாடு என்றாலே அனைவர்க்கும் பிடித்த ஒன்று தான். அதிலும் அசைவ சாப்பாடு சொல்லவே வேண்டாம் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அசைவத்தில் பலவித டிஷ்கள் உள்ளது, கோழி, மீன், இறால், நண்டு, என்று அடுக்கி கொண்டே போகலாம். ஆனால் அசைவ உணவுகள் சாப்பிடுவதில் பெரும்பாலும் கடல் உணவு பிரியர்கள் தான் அதிகமாக இருப்பார்கள். இருந்தாலும் கடல் உணவுகளை சமைப்பதில் வேலைபாடுகள் அதிகம் இருப்பதால் யாரும் வீடுகளில் அதிகமாக சமைப்பது கிடையாது.

இதையும் படியுங்கள் : சுவையான விரால் மீன் குழம்பு செய்வது எப்படி ?

Advertisement

அதையும் தாண்டி கடல் உணவுகள் சாப்பிட நினைப்பவர்கள் ஹோட்டல் சென்றால் பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டு கொள்வார்கள். ஆனால் இனி இதை செய்யாதீர்கள் கடல் உணவுகளில் சுவையான உணவு என்று எடுத்துக் கொண்டால் அதில் நண்டுவும் ஒன்று தான். அதனால் இன்று நண்டு குழம்பு பற்றி தான் பார்க்க இருக்கிறோம் அதிலும் கன்னியாகுமரி நண்டு மசாலா குழம்பு மிகவும் பிரபலமானது. ஆகையால் என்று கன்னியாகுமரி நண்டு மசாலா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

கன்னியாகுமரி நண்டு மசாலா | Nandu Masala Recipe In Tamil

Print Recipe
அசைவத்தில் பலவித டிஷ்கள் உள்ளது, கோழி, மீன், இறால், நண்டு, என்று அடுக்கி கொண்டே போகலாம். ஆனால் அசைவ உணவுகள் சாப்பிடுவதில் பெரும்பாலும் கடல் உணவு பிரியர்கள் தான் அதிகமாக இருப்பார்கள். இருந்தாலும் கடல் உணவுகளை சமைப்பதில் வேலைபாடுகள் அதிகம் இருப்பதால் யாரும் வீடுகளில் அதிகமாக சமைப்பது கிடையாது. அதையும் தாண்டி கடல் உணவுகள் சாப்பிட நினைப்பவர்கள் ஹோட்டல் சென்றால் பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டு கொள்வார்கள். ஆனால் இனி இதை செய்யாதீர்கள் கடல் உணவுகளில் சுவையான உணவு என்று எடுத்துக் கொண்டால் அதில் நண்டுவும் ஒன்று தான். அதனால் இன்று நண்டு குழம்பு பற்றி தான் பார்க்க இருக்கிறோம் அதிலும் கன்னியாகுமரி நண்டு மசாலா குழம்பு மிகவும் பிரபலமானது.
Course LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Nandu, நண்டு
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 4 people
Calories 97

Ingredients

  • ½ கிலோ நண்டு
  • 2 வெங்காயம் நறுக்கியது
  • 2 தக்காளி நறுக்கியது
  • கறிவேப்பிலை சிறிது
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு போஸ்ட்
  • 1 பிரியாணி இலை
  • 1 பட்டை
  • 4 ஏலக்காய்
  • 2 டேபிள் ஸ்பூன் சோம்பு
  • ½ டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் மல்லி தூள்
  • ¼ டேபிள் ஸ்பூன் மிளகு தூள்
  • 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • உப்பு தேவையான அளவு
    Advertisement

அரைப்பதற்கு:

  • ½ கப் துருவிய தேங்காய்
  • 2 டேபிள் ஸ்பூன் சோம்பு
  • கருவேப்பிலை சிறிதளவு
  • 4 பச்சை மிளகாய்

Instructions

  • முதலில் நாம் வாங்கி வைத்திருக்கும் நண்டை நன்கு சுத்தம் செய்து தண்ணீரல் இரண்டு முறை நன்கு அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள். இல்லை என்றால் கடையிலே சுத்தம் செய்தே வாங்கி தண்ணீரில் அலசி மட்டும் கொள்ளவும்.
  • பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், சோம்பு, சேர்த்து தாளித்து கருவேப்பிலை சேர்த்து கிளறிய பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
  • பின்பு அதில் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி, பின் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும்.
  • பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகுதூள், மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறிய பின் மூடி வைத்து, எண்ணெய் தனியாக பிரியும் வரை வதக்கி விட வேண்டும்.
  • அடுத்து அதில் நண்டு சேர்த்து நன்கு மசாலா நண்டில் சேரும் வரை பிரட்டிவிடவேண்டும். பின் அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மூடி வைத்து நண்டை வேக வைக்க வேண்டும்.
  • அதற்குள் மிக்சியில் அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும்.
  • நண்டின் நிறம் ஆரஞ்சு நிறத்தில் மாற ஆரமித்தால், நண்டு வெந்து விட்டது என்று அர்த்தம். பின் அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி கிளறி 5 நிமிடம் மிதமான தீயில் மூடி வைத்து பச்சைவாசனை போக கொதிக்க விட்டு இறக்கினால், கன்னியாகுமரி நண்டு மசாலா ரெடி.

Nutrition

Serving: 500gram | Calories: 97kcal | Protein: 19g | Fat: 1.5g | Saturated Fat: 0.1g | Cholesterol: 53mg | Sodium: 1072mg | Potassium: 262mg
Advertisement
swetha

Recent Posts

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

2 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

3 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

7 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

17 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

17 மணி நேரங்கள் ago