Advertisement
சட்னி

நெல்லூர் ஸ்பெஷல் நூல்கோல் சட்னி இப்படி ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இட்லி, தோசைக்கு ஏற்ற பக்காவான சட்னி!

Advertisement

என்னென்ன காய்கறிகளில் சட்னி அரைக்கலாம் அப்படின்னு பார்த்தோன சில காய்கறிகளோட தோல்களை பயன்படுத்தி சுவையான சட்னிகள் துவையல்கள் அரைப்பார்கள். அப்படியே நம்ம இன்னைக்கு புதுசா ஒரு காய்கறி வச்சு சட்னி அரைக்க போறோம். இந்த நூல்கோல் காய்கறியை என்ன செய்வது அப்படின்னு தெரியாம இருக்கீங்களா? நீங்க இந்த நூல்கோல் எப்போதும் சாம்பார்ல மட்டும் சேர்த்து செய்றீங்களா? இல்ல பொரியல் கூட பண்ணாம வச்சிருக்கீங்களா?

அப்படின்னா நீங்க இந்த நூல்கோள பயன்படுத்தி சுவையான ஒரு சட்னியை செய்து இதை சாதத்துக்கும் பயன்படுத்திக்கலாம் இல்லனா இட்லி தோசைக்கு நல்லாவே பயன்படுத்திக்கலாம். அப்படி சுவையான இந்த நூல் கோல் சட்னியை நெல்லூர் ஸ்டைல்ல எப்படி செய்றது அப்படின்னு பார்க்க இருக்கிறோம். இந்த நூல்கோல் உடலுக்கு ரொம்ப ஆரோக்கியம் கொடுக்கிறது. இது அதிக அளவு அதிகளவில் விட்டமின் ஏ, சி மற்றும் பீட்டாகரோட்டின் எல்லாமே உடல் உள்ள எலும்பை வலிமைப்படுத்துது.

Advertisement

இந்த நூல்கோல உணவுல அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்ல ஆரோக்கியமாகவும் இருக்கும். ஆகையினால் உங்களுக்கு கிடைச்சுச்சுனா கண்டிப்பா இந்த நூல் கோலை நீங்க உணவுல சேர்த்துகிறது ரொம்பவே நல்லது . இந்த நூல் கோலை பயன்படுத்தி சுவையான ஆரோக்கியமிக்க இந்த சட்னியை எப்படி செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

நெல்லூர் நூல்கோல் சட்னி | Nellore Nookal Chutney In Tamil

Print Recipe
நம்ம இன்னைக்கு புதுசா ஒரு காய்கறி வச்சு சட்னி அரைக்க போறோம். இந்த நூல்கோல் காய்கறியை என்ன செய்வது அப்படின்னு தெரியாம இருக்கீங்களா? நீங்க இந்த நூல்கோல் எப்போதும் சாம்பார்ல மட்டும் சேர்த்து செய்றீங்களா? இல்ல பொரியல் கூட பண்ணாம வச்சிருக்கீங்களா? அப்படின்னா நீங்க இந்த நூல்கோள பயன்படுத்தி சுவையான ஒரு சட்னியை செய்து இதை சாதத்துக்கும் பயன்படுத்திக்கலாம் இல்லனா இட்லி தோசைக்கு
Advertisement
நல்லாவே பயன்படுத்திக்கலாம்.இந்த நூல் கோலை பயன்படுத்தி சுவையான ஆரோக்கிய மிக்க இந்த சட்னியை எப்படி செய்யறது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
Course chutney
Cuisine andhra
Keyword Nellore Nookal Chutney
Prep Time 5 minutes
Cook Time 5 minutes
Servings 4
Calories 83

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 1 நூல்கோல்
  • 1 ஸ்பூன் உளுந்து
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 4 பல் பூண்டு
  • 5 காய்ந்த மிளகாய்
  • 1 வெங்காயம்
  • நெல்லிக்காய் புளி அளவு
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  •  
    முதலில் நூல் கோலை கழுவி விட்டு தோலை செதுக்கிவிட்டு பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.  பிறகுஅடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் பொடியாக நறுக்கி வைத்துள்ள நூல் கோலை சேர்த்து நன்றாக நிறம் மாறும் வரை வதக்கி கொள்ளவும்.
  • நூல் கோல் நிறம் மாறிய பிறகு வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி விடவும்.பிறகு அதே கடாயில் எண்ணெய் சேர்த்து உளுந்து, சீரகம் , பூண்டை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
  •  பிறகு காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும். பிறகு வெங்காயத்தை பொடியாக நறுக்கி அதையும் சேர்த்து நன்றாக நிறம் மாறும் வரை உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயம்நன்றாக வதங்கிய பிறகு அடுப்பை நிறுத்திவிட்டு அதே சூட்டில் புளியை சேர்த்து லேசாக வதக்கி ஆற வைத்துக் கொள்ளவும்.வதக்கி ஆற வைத்த பொருள்கள் ஆறிய பிறகு அவைகளை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளவும்.
  • பின்புஅதில் நூல் கோலையும் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் சேர்த்து கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் கலந்து கொண்டால் சுவையான ஆரோக்கியமிக்க நூல் கோல் சட்னி தயார்.

Notes

இந்த சட்னியை கெட்டியாக அரைத்துக் கொண்டால் இதை சாதத்திற்கு நல்லெண்ணெயுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது சுவையாக இருக்கும் .சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்தால் இட்லி , தோசை தொட்டுக் கொள்வதற்கு ருசியாக இருக்கும்.
 

Nutrition

Serving: 100g | Calories: 83kcal | Carbohydrates: 14.2g | Protein: 3.6g | Fiber: 3.6g
Advertisement
Prem Kumar

Recent Posts

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

3 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

3 மணி நேரங்கள் ago

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

8 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

17 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

17 மணி நேரங்கள் ago