பொதுவாக நெஞ்சு சளி இருப்பது சாதாரணமாக தெரிந்து விடாது மூச்சு குழாய் அலர்ஜி அல்லது கபவாதம் போன்ற நோய்கள் தாக்கம் அதிகமாக இருக்கும் சமயத்தில் அதிகபடியான இருமல் வரும் போது தான் நெஞ்சு சளி இருப்பதை நமக்கு தெரிய வரும். அதுவரையிலும் நெஞ்சு சளி இருப்பது நமக்கு தெரிய வராது ஆனால் நமக்கு மழைக்காலங்களிலும் பருவநிலை மாற்றங்கள் மற்றும் சுகாதாரமற்ற தண்ணீர் குடிப்பதன் மூலமாகவும் சாதாரணமாக இருமலுடன் சளி வந்தால் வேகமாக சரியாகிவிடும். ஆனால் நெஞ்சு சளி அப்படி இல்லை நெஞ்சு சளியின் நிறத்தை வைத்து
சளி ஆரம்ப கட்டத்தில் இருக்கிறதா இல்ல நெஞ்சு சளி நோய் முற்றிவிட்டதா என எளிமையாக கண்டுபிடித்து விடலாம். நெஞ்சு சளி வந்தால் கூட நம் சாதாரண சளி பிடிக்கும் போது ஏற்படும் இருமல், முக்கடைப்பு, உடல் சோர்வு என அனைத்தும் இருக்கும். இப்போது இந்த நெஞ்சு சளியை நம் இயற்கை மருத்துவத்தின் மூலம் எப்படி சரி செய்வது என்று இந்த உடல்நல தொகுப்பில் நாம் பார்க்கலாம்.
தேங்காய் எண்ணெய், கற்பூரம்
நெஞ்சு சளி இருப்பது தெரிய வந்தவுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு நன்றாக காய வையுங்கள். எணாணெய் காய்ந்த பின் அதில் சிறிதளவு கற்பூரத்தை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் இந்த கலவையை தயார் செய்தவுடன் ஒரு நாளைக்கு மூன்று வேளை என உங்கள் நெஞ்சு பகுதியில் தொடர்ந்து தடவி வந்தால் மூன்று அல்லது நான்கு நாட்களிலே நெஞ்சு சளி குணமாகிவிடும்.
மிளகு, பால், மஞ்சள் தூள், நாட்டு சக்கரை
இந்த முறையிலும் நெஞ்சு சளியை குணப்படுத்தலாம் ஆனால் இந்த முறை நெஞ்சு சளி ஆரம்பகட்டத்தில் இருக்கும் நபர்களுக்கு மட்டுமே மருந்தாக பயன்படும். நெஞ்சு சளி முற்றிய நபர்கள் இந்த மருந்தை பயன்படுத்துவது எந்த விதத்திலும் பலன் அளிக்காது. சிறிதளவு மிளகு எடுத்துக் கொண்டு அந்த மிளகை எடுத்து தூள் செய்து கொள்ளுங்கள் பின் ஒரு டம்ளரில் சுத்தமான பசும்பாலை எடுத்துக்கொண்டு சிறிதளவு மிளகுத்தூள், மஞ்சள் தூள் ஆகிவற்றை சேர்த்து நன்றாக காய்ச்சி கொள்ளுங்கள். பின்பு இந்த பாலை வடிகட்டி தேவையான அளவு நாட்டுச்சக்கரை அல்லது கருப்பட்டி சேர்த்து சூடாக இருக்கும்போது குடியுங்கள் இவ்வாறு மூன்று அல்லது நான்கு நாட்கள் குடித்து வந்தால் ஆரம்ப நிலையில் இருக்கும் நெஞ்சு சளி குணமாகிவிடும்.
வெற்றிலை பற்று
முதலில் மணலினால் செய்த ஒரு அகல் விளக்கை எடுத்துக் கொண்டு அதில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி வாழை நாரில் செய்த திரியைகொண்டு விளக்கேற்றிக் கொள்ளுங்கள். பிறகு வெற்றிலையில் நல்லெண்ணெய் தடவி அதனை அந்த விளக்கின் தீயில் காண்பிக்க வேண்டும் உங்களுக்கு எவ்வளவு சூடு தாங்குமோ அந்த அளவுக்கு சூடும் படும்வாறு தீயில் வெற்றிலையை காண்பித்துக் கொள்ளுங்கள். பிறகு விளக்கில் காட்டிய வெற்றிலையை கொண்டு நெஞ்சில் பற்று போட வேண்டும் இவ்வாறு செய்வதினால் கூட நெஞ்சு சளி மற்றும் சாதாரண சளி பிரச்சனைகளும் சரியாகி விடும்.
வெறும் வயிற்றில் புதினா, மிளகு சாப்பிடுங்கள்
புதினா இலை மற்றும் மிளகு இவை இரண்டையும் காலையில் எந்திரித்தவுடன் வெறும் வயிற்றில் தினசரி சாப்பிட்டு வந்தால் சளி இருமல் மற்றும் நுரையீரல் பிரச்சனைகள் சரியாக வரும். நெஞ்சு சளி வராமலும் தடுக்க முடியும். மேலும் நெஞ்சு சளி பிரச்சனை இருப்பவர்கள் நெல்லிக்காய் சாறு எடுத்து அவற்றில் சிறிது மிளகு சேர்த்தும். பின் அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர நெஞ்சு சளி பிரச்சனை மற்றும் சளி பிரச்சனை உடனடியாக சரியாகிவிடும். முக்கியமாக இரவு நேரங்கள் மற்றும் மழைக்காலங்கள் நெல்லிக்காய் பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள்.