இன்றைய காலகட்டத்தில் நாள் முழுவதும் கடினமாக உழைத்து விட்டு வருபவர்கள் இரவு நேரங்களில் நன்றாக சாப்பிட வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். அப்படி சாப்பிடும் உணவுகள் பெரும்பாலும் ஃபாஸ்ட் ஃபுட் ஆகத்தான் இருக்கிறது. அப்படி நாம் இரவு நேரங்களில் இந்த உணவுகளை சாப்பிடும் பொழுது நம் உடம்பிற்கு அது ஆரோக்கியமானதாக இருக்காது. அதன் மூலம் நமக்கு பலவிதமான நோய்களும் கூட வரக்கூடும். சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு ஒரு சில உணவுகளை நாம் சாப்பிடுவதால் அது எளிதில் செரிமானம் அடையாது. அதனால் நம் தூக்கம் கெட்டுப் போக கூடும். என்னதான் நாம் கடுமையாக உழைத்து வந்திருந்தாலும் இந்த உணவுகளை சாப்பிடுவதால் நமக்கு ஒழுங்கான தூக்கம் கூட இருக்காது. எனவே சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு இரவு நேரங்களில் நாம் சாப்பிடக்கூடாத சில உணவுகளை பற்றி பார்க்கலாம்.
டீ மற்றும் காபி
பொதுவாக அனைவரும் டீ மற்றும் காப்பியை விரும்பி குடிப்பார்கள். இந்த டீ காபியை பெரும்பாலும் நாம் குடிப்பதை தவிர்க்க வேண்டும் ஏனென்றால் இதில் உள்ள கஃபைன் என்ற வேதிப்பொருள் நம் உடம்பிற்கு தீங்கு விளைவிக்க கூடியது. இந்த டீ காஃபி எனர்ஜி பானங்கள் எனவே இரவு நேரங்களில் நாம் குடிப்பதால் தூக்கம் வராமல் நள்ளிரவு வரையில் விழித்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
புளிப்பான உணவுகள்
தக்காளி வினிகர் மற்றும் சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு எலுமிச்சை போன்றவைகளை இரவு நேரங்களில் சாப்பிடக் கூடாது. அப்படி இந்த உணவுகளை சாப்பிட்டால் நெஞ்செரிச்சல் ஏற்படக்கூடும் இதனால் செரிமான பிரச்சனை ஏற்பட்டு இரவில் தூக்கம் வராமலும் போகலாம் ஒரு சிலருக்கு இவைகளை சாப்பிடுவதால் சளி இருமலும் வரக்கூடும்.
மது
இன்றைய சூழ்நிலையில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. பெரும்பாலும் மது அருந்துபவர்கள் இரவிலேயே அருந்துகிறார்கள் அப்படி இரவில் மது அருந்துவதால் உடலுக்கு பல விதமான தீமைகள் உண்டாகும். இதனால் மறுநாள் முழுவதும் ஒரு விதமான அமைதியின்மையும் மயக்கமான சூழ்நிலையும் நிலவும். எனவே முற்றிலுமாக மது அருந்துவதை குறைக்க வேண்டும்.
கொழுப்பு நிறைந்த உணவுகள்
கொழுப்பு நிறைந்த உணவுகளான கிரீம் சாஸ் மயோனைஸ் வறுத்த சிக்கன் போன்றவற்றை இரவு நேரங்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அப்படி இரவு நேரங்களில் சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும் மேலும் செரிமான பிரச்சினையால் தூக்கமின்மையும் ஏற்படும். பொதுவாக சூர்யா அஸ்தமனத்திற்கு பிறகு சாப்பிடுவதையே தவிர்க்க வேண்டும் அதிலும் இந்த மாதிரியான கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் நம் உடலுக்கு ஆரோக்கியம் பெற்றதாக இருக்கும் எனவே இரவு நேரங்களில் இந்த கொழுப்பு நிறைந்த பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்பட்ட உணவுகளான கொழுப்பு நிறைந்த உணவுகள் துரித உணவுகள் குளிர்பானங்கள் எண்ணெயில் பொரித்த தின்பண்டங்கள் போன்றவற்றை இரவு நேரங்களில் சாப்பிடக்கூடாது. இரவு நேரங்களில் இதனை நாம் சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் ஏற்பட்டு மந்தமாகவே இருக்கும் எனவே இரவு நேரங்களில் இந்த உணவுகளை நாம் தவிர்க்க வேண்டும்.
காரமான உணவுகள்
இரவு நேரங்களில் மிகவும் காரமான உணவுகளான கார குழம்பு ஊறுகாய் பிரியாணி காரமான சால்னா போன்றவற்றை சாப்பிடக்கூடாது. இந்த உணவுகள் நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். காரமான உணவுகளை பொதுவாக நாம் அதிகமாக எடுத்துக் கொண்டால் உடல் சூடு அதிகரிக்கும் அதிலும் இரவு நேரங்களில் எடுத்துக் கொண்டால் நம் உடம்பிற்கு தேவையில்லாத பிரச்சினைகளை உண்டாக்கும். செரிமான பிரச்சினை ஏற்பட்டு இரவில் தூக்கமின்மையும் ஏற்படும். இரவு நேரங்களில் இந்த காரமான உணவு பொருட்களை தவிர்ப்பது மிகவும் நல்லது.