காய்கறி சேர்க்காமல் , வெங்காயத்தை மட்டுமே வைத்து ருசியான கார குழம்பு இப்படி செய்து பாருங்கள்! இதன் ருசியே தனி ருசி தான்!

- Advertisement -

சாம்பார், காரக்குழம்பு, குருமா இவை அனைத்திலுமே ஏதாவது காய்கறிகளை சேர்த்து செய்யும் பொழுது தான் மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் என்றாவது ஒருநாள் இவ்வாறு வெங்காய காரக் குழம்பு சேருது பாருங்கள். வைப்பதற்கு வீட்டில் காய்கறிகள் இல்லை என்றால், சற்றும் யோசிக்காமல் இந்த வெங்காய காரக் குழம்பை வைத்து விடுங்கள். வீட்டில் இருக்கும் எளிமையான பொருட்களை வைத்தே சட்டென, மிகவும் ருசியான வெங்காய காரக் குழம்பை செய்து விட முடியும்.

-விளம்பரம்-

ஒவ்வொரு வீட்டிலும் மதியவேளை வந்தவுடன் வீட்டில் உள்ள அனைவரும் கேட்கும் ஒரே கேள்வி இன்று என்ன குழம்பு. ஆனால் இந்த குழம்பு வகைகள் எவ்வளவு சுவையாக சமைத்துக் கொடுத்தாலும் வீட்டில் உள்ளவர்களுக்கு அவை சலிப்பாக தான் தோன்றும். ஏனென்றால் தினமும் ஒவ்வொரு நாளும் இதே குழம்புகளை தான் மாறி மாறி செய்து கொடுக்கின்றனர்.வெங்காய காரக் குழம்பை சுட சுட சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிடும் பொழுது நாவில் எச்சில் ஊறும் சுவையில் அவ்வளவு அற்புதமாக இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -
Print
3.34 from 3 votes

வெங்காய காரக் குழம்பு | Onion Kaara Kulambu In Tamil

வீட்டிலும் மதியவேளை வந்தவுடன் வீட்டில் உள்ள அனைவரும் கேட்கும் ஒரே கேள்வி இன்று என்ன குழம்பு. ஆனால் இந்த குழம்பு வகைகள் எவ்வளவு சுவையாக சமைத்துக் கொடுத்தாலும் வீட்டில் உள்ளவர்களுக்கு அவை சலிப்பாகதான் தோன்றும். ஏனென்றால் தினமும் ஒவ்வொரு நாளும் இதே குழம்புகளை தான் மாறி மாறி செய்து கொடுக்கின்றனர்.வெங்காய காரக் குழம்பை சுட சுட சாதத்துடன் சேர்த்துப் பிசைந்து சாப்பிடும் பொழுது நாவில் எச்சில் ஊறும் சுவையில் அவ்வளவு அற்புதமாக இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Onion Kaara kulambu
Yield: 4
Calories: 99.93kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 10 சின்ன வெங்காயம்
  • 1 காய்ந்த மிளகாய்
  • 4 டீஸ்பூன் சாம்பார் பொடி
  • 1 புளி எலுமிச்சம் பழ அளவு
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் வெந்தயம்
  • 1/2 டீஸ்பூன் கடலைப்பருப்பு
  • கறிவேப்பிலை சிறிதளவு
  • 100 மில்லி எண்ணெய்
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும். புளியை 500 மில்லி தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, வெந்தயம், வெங்காயம், கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் சாம்பார் பொடி போட்டு வறுக்கவும்.
     
  • அடுத்து அதில் புளிக் கரைசலை விட்டு. உப்பு சேர்த்துக் கொதிக்க விட்டு. திக்கான பதம் வந்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
     
  • அருமையான வெங்காய காரக்குழம்பு ரெடி         

Nutrition

Serving: 500g | Calories: 99.93kcal | Carbohydrates: 13.91g | Protein: 3.49g | Sodium: 54.88mg | Potassium: 77.95mg | Fiber: 1.27g | Calcium: 24.71mg | Iron: 0.21mg

இதையும் படியுங்கள் : கேரளா ஸ்பெஷல் இஞ்சி புளி சிக்கன் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க! இவ்வளவு டேஸ்ட்டான்னு நீங்களே ஆச்சரியப்படுவீங்க!