யம்மியான ஓரியோ பிஸ்கெட் மில்க் ஷேக் இப்படி வீட்டிலயே செய்து அசத்துங்கள்!

- Advertisement -

ஓரியோ பிஸ்கட் எல்லாருக்கும் பிடிக்கும். ஓரியோ பிஸ்கெட்டுகளை பால்லில் நனைத்து சாப்பிடும்போது அது ஒரு தனி சுவைய கொடுக்கும். அப்படிப்பட்ட ஓரியோ பிஸ்கட்ல ரொம்ப சுலபமா ஒரு மில்க் ஷேக் பண்ணி சாப்பிட போறோம். எப்படி ஓரியோ மில்க் ஷேக்க  பண்றதுன்னு நாம் தெரிஞ்சுக்க போறோம். இந்த மில்க் ஷேக் குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும். மில்க் ஷேக்குகளை கடைகளில் போய் வாங்கி கொடுப்பதை விட மில்க் ஷேக்க நம்ம வீட்டில் செய்து கொடுக்கும்  போது குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். நமக்கும் குழந்தைகள் சாப்பிடுவது மனதிற்கு நிறைவை கொடுக்கும்.

-விளம்பரம்-

குழந்தைகளுக்குமே அம்மா நமக்காக மில்க் ஷேக் செய்து கொடுத்திருக்காங்க இதை பத்தி அவங்க வெளியில சொல்றதுக்கு ரொம்ப சந்தோஷப்படுவாங்க. எனக்கு எங்க அம்மா மில்க் ஷேக் செய்து கொடுத்தாங்க தெரியுமா அப்படின்னு உங்கள பத்தி அவங்க பிரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் ரொம்ப பெருமையா பேசுவாங்க. குழந்தைகளுக்கு பிடிச்ச விஷயம் கொடுக்கும் போது அவங்களோட சந்தோசம் இரண்டு மடங்காகும். அவங்களுக்கு நம்ம மேல இருக்கிற ஆசையும் அன்பு இன்னும் அதிகமாகிக் கொண்டே இருக்கும். இந்த ஓரியோ மில்க்ஷேக்ல நம்ம ரொம்ப  ஈஸியா செய்யப்போறோம். இதுல கொஞ்சம் கூட அதிகமாக எதுவுமே சேர்க்க போறது கிடையாது.

- Advertisement -

சர்க்கரை கூட சேர்க்க போறதே கிடையாது.இதுல ஓரிய பிஸ்கட்ல இருக்குற இனிப்பு சுவையே போதுமான அளவா இருக்கும் . இதுல நாம வந்து வெறும் பாலையும்  பிஸ்கட் மட்டுமே வச்சு செய்ய போறோம். நமக்கு எப்போதும் பால்ல பிஸ்கட் எடுத்து சாப்பிடுற பழக்கம் இருந்துச்சுன்னா நாம் அதே மாதிரி சாப்பிடறது விட இந்த மாதிரி மில்க் ஷேக் மாதிரி பண்ணி சாப்பிட்டும் போது  இன்னும் ரொம்ப  சந்தோஷத்தையும் சுவையும் நமக்கு கொடுக்கும். எப்போதும் பண்ற விஷயத்தை வேற மாதிரி பண்ணி சாப்பிட போறோம். எப்படி செய்யலாம்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

Print
5 from 1 vote

ஓரியோ பிஸ்கெட் மில்க் ஷேக் | Oreo biscuit Milk Shake

ஓரியோபிஸ்கெட் மில்க் ஷேக், குழந்தைகளுக்குமே அம்மா நமக்காக மில்க் ஷேக் செய்து கொடுத்திருக்காங்க இதை பத்தி அவங்க வெளியில சொல்றதுக்கு ரொம்ப சந்தோஷப்படுவாங்க. எனக்கு எங்க அம்மா மில்க் ஷேக் செய்து கொடுத்தாங்க தெரியுமா அப்படின்னு உங்கள பத்தி அவங்க பிரெண்ட்ஸ் கிட்ட எல்லாம் ரொம்ப பெருமையா பேசுவாங்க. இந்த மாதிரி மில்க் ஷேக் மாதிரி பண்ணி சாப்பிட்டும் போது  இன்னும் ரொம்ப  சந்தோஷத்தையும் சுவையும் நமக்கு கொடுக்கும். எப்போதும் பண்ற விஷயத்தை வேற மாதிரி பண்ணி சாப்பிட போறோம். எப்படி செய்யலாம்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Drinks
Cuisine: tamil nadu
Keyword: Oreo Biscuit Milk Shake
Yield: 4
Calories: 371kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 2 பாக்கெட் ஓரியோ பிஸ்கட்
  • 1 கப் பால்
  • 1 டெய்ரி மில்க் சாக்லேட்
  • 1 கப் ஐஸ் கட்டிகள்

செய்முறை

  • முதலில் ஓரியோ பாக்கெட்டில் இருந்து பிஸ்கட் எடுத்துக்கொண்டு அவர்களை இரண்டு நான்கு துண்டுகளாக உடைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒன்றிரண்டாக பொடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  •  பிறகு ஒன்றிரண்டாக பொடித்து வைத்துள்ள ஓரியோ பிஸ்கட்டுகளில் இருந்து 2 ஸ்பூன் எடுத்து வைத்த கொள்ள வேண்டும். மிக்ஸி ஜாரில் மீதமுள்ள பொடித்த ஓரியோ பிஸ்கட்டுகளில்  காய்ச்சி ஆற வைத்த ஒரு கப் பாலை சேர்த்து அரைக்கவும்.
  • பின் அதனோடு டெய்ரி மில்க் சாக்லேட்டை சிறு துண்டுகளாக உடைத்து சேர்த்து  மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.  
  • பின் மிக்ஸி ஜாரில்  ஐஸ்கட்டிகளை சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்.
  • பிறகு ஜூஸ் கிளாஸ் ஓரியோ பிஸ்கட் மில்க் ஷேக் ஊற்றி அதன் மேல் ஒன்றிரண்டாக பொடித்து வைத்துள்ள ஓரியோ பிஸ்கட் துகள்களை போட்டு ஒரு ஓரியோ பிஸ்கட்டை விளிம்பில் நிற்கும்படி வைத்து சுவைத்தால் சுவையான ஓரியோ மில்க் ஷேக் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 371kcal | Carbohydrates: 94g | Protein: 2.2g | Fat: 7.1g | Sugar: 2g