குக் வித் கோமாளியில் சிவாங்கி செய்த ருசியான ஓரியோ பிரவுனி இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

பண்டிகை என்றாலே பலரது நினைவிற்கு வருவது கேக்காகத் தான் இருக்கும். கேக்கில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் ப்ரௌனி. பிரவுனி என்றாலே உலகம் முழுவதும் தனி மவுசு தான். இந்த பிரவுனிகள் வயது வித்தியாசம் பாராமல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது நாவிலும் எச்சில் ஊறிவிடும். ஏனென்றால் இந்த பிரவுனிகள் நாக்கில் வைத்ததும் கரைந்துவிடும் அளவிற்கு மிருதுவாகவும் மென்மையாகவும் மிகவும் சுவையாகவும் இருக்கும்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் தேங்காய் கேக் இப்படி வீட்டிலே செய்து பாருங்க!

- Advertisement -

இதுவரை நீங்கள் ப்ரௌனியை கடைகளில் தான் வாங்கி சுவைத்திருப்பீர்கள். என்ன தான் இது உங்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருந்தாலும், கடைகளில் வாங்கி சாப்பிடும் போது, அளவாகவே சாப்பிட முடியும். ஆனால் அதையே வீட்டில் உங்களுக்கு தேவையான அளவு செய்தால், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் அல்லவா? எனவே இந்த தொகுப்பில் பிரவுனி வீட்டில் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Print
No ratings yet

ஓரியோ பிரவுனி | Oreo Brownie Recipe in Tamil

பண்டிகை என்றாலே பலரது நினைவிற்கு வருவது கேக்காகத் தான் இருக்கும். கேக்கில் பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் ப்ரௌனி. பிரவுனி என்றாலே உலகம் முழுவதும் தனி மவுசு தான். இந்த பிரவுனிகள் வயது வித்தியாசம் பாராமல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது நாவிலும் எச்சில் ஊறிவிடும். ஏனென்றால் இந்த பிரவுனிகள் நாக்கில் வைத்ததும் கரைந்துவிடும் அளவிற்கு மிருதுவாகவும் மென்மையாகவும் மிகவும் சுவையாகவும் இருக்கும். இவை சதுர, செவ்வக மற்றும் வட்ட வடிவிலும் செய்யப்படுகின்றன.
Prep Time15 minutes
Active Time30 minutes
Total Time45 minutes
Course: Dessert
Cuisine: American
Keyword: brownie
Yield: 5 People
Calories: 122kcal

Equipment

  • 1 ஓவன்
  • 1 பவுள்
  • 1 இட்லி பாத்திரம்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 5 ஓரியோ பிஸ்கட்
  • 1/4 கப் பால்
  • 1 முட்டை
  • 1/4 சிட்டிகை உப்பு                             
  • 25 கிராம் வெண்ணெய்
  • 50 கிராம் டார்க் சாக்லெட்
  • 1/4 கப் சர்க்கரை
  • 1/4 கப் கோகோ
  • 1/2 கப் மைதா மாவு

செய்முறை

  • முதலில் ஓரியோ பிஸ்கட்டை எடுத்து மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் ஒரு பவுளில் முட்டை, பால் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்.
  • பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும் அதன் மேல் ஒரு அகன்ற பாத்திரம் வைத்து அதில் நறுக்கிய சாக்லெட் மற்றும் வெண்ணெய் சேர்க்கவும்.
  • வெண்ணெய் மற்றும் சாக்லேட் நன்கு உருக வைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் சாக்லேட் மற்றும் வெண்ணெய் கலவையை ஊற்றவும். அதில் மைதா மாவு, கோகோ பவுடர், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின் அந்த கலவையில் நாம் அடித்து வைத்துள்ள முட்டையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின்னர் அதில் பொடித்து வைத்துள்ள ஓரியோ குக்கீகளைச் சேர்த்து மாவை நன்கு கலக்கவும்.
  • பின் ஒரு நெய் தடவிய பாத்திரத்தை எடுத்து அதில் நாம் கலந்து வைத்துள்ள மாவை ஊற்றவும்.
  • பின்னர் அதனை 170°C வெப்பநிலையில் ஓவனில் வைத்து 25 நிமிடங்கள் வரை வேகவைத்து எடுக்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான ஓரியோ பிரவுனி தயார். தயாரான பிரவுனி மேலே சிறிதளவு பிஸ்கட் துண்டுகளை தூவி பரிமாறவும்.

Nutrition

Serving: 700g | Calories: 122kcal | Carbohydrates: 11.5g | Protein: 2g | Fat: 8.5g | Saturated Fat: 1.4g | Sodium: 65mg | Potassium: 229mg | Fiber: 2.3g | Sugar: 2.1g