பால் கடம்பு சாப்பிடணும் போல இருக்கா அப்போ இந்த மாதிரி ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!!

- Advertisement -

பால் எல்லார் வீட்லயும் டெய்லியும் இருக்கக்கூடிய ஒன்னு அந்த பால்ல தான் அந்த நாள் ஸ்டார்ட் ஆகும். இந்த பால் வச்சு நம்ம செய்யக்கூடிய நிறைய ஸ்வீட்ஸ் இருக்கு அதுல நிறைய பேருக்கு பால்கோவா ரொம்ப பிடிக்கும். ரசகுல்லா பால் அல்வா அப்படின்னு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான பால் ஸ்வீட் ரொம்ப பிடிக்கும் அந்த வகையில் ரோட்டோரங்கள்ல வச்சு விற்கக்கூடிய ஒரு சூப்பரான பால் கடம்பு இப்ப பாக்க போறோம்.

-விளம்பரம்-

இந்த பால் கடந்து செய்தது ரொம்பவே ஈசி நம்ம கடைகளில் வாங்கி சாப்பிடுற அளவுக்கு அதே மாதிரியான டேஸ்ட் வீட்ல செய்தாலும் கிடைக்கும். குழந்தைகளுக்கு இந்த பால் கடம்பு செஞ்சு கொடுத்தா ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. ரோட்டோரங்கள்ல குழந்தைகளுக்கு இந்த ஸ்வீட் வாங்கி கொடுக்க பயமா இருந்தா அப்போ இந்த ஸ்வீட்டை உங்க வீட்டிலேயே சட்டுனு செஞ்சு கொடுத்துடலாம். மாலை நேரங்கள்ல உங்க குழந்தைகளுக்கு இந்த ஸ்வீட் கொடுத்தா அடம் பிடிக்காமல் டியூஷன் போவாங்க அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் சூப்பரா இருக்கும்.

- Advertisement -

ரொம்ப கம்மியான பொருட்களை வைத்து செய்யக்கூடிய இந்த ஸ்வீட் எல்லாராலயும் விரும்பி சாப்பிடப்படும். எப்பவும் ஒரே மாதிரியா எண்ணெயில் வறுத்தது பொரிச்சது என்ன செஞ்சு கொடுக்காம ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு கொடுத்து பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க உங்க வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தால் கூட அவங்களுக்கு நீங்க இந்த பால் கடம்பு செஞ்சு கொடுக்கலாம். அவங்களும் உங்களை கண்டிப்பா பாராட்டிட்டு தான் போவாங்க அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். இப்ப வாங்க இந்த அட்டகாசமான பால் கடம்பு எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

Print
4 from 1 vote

பால் கடம்பு | Paal Kadambu Recipe In Tamil

பால் எல்லார் வீட்லயும் டெய்லியும் இருக்கக்கூடிய ஒன்னு அந்த பால்ல தான் அந்த நாள் ஸ்டார்ட் ஆகும். இந்த பால் வச்சு நம்ம செய்யக்கூடிய நிறைய ஸ்வீட்ஸ் இருக்கு அதுல நிறைய பேருக்கு பால்கோவா ரொம்ப பிடிக்கும். ரசகுல்லா பால் அல்வா அப்படின்னு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான பால் ஸ்வீட் ரொம்ப பிடிக்கும் அந்த வகையில் ரோட்டோரங்கள்ல வச்சு விற்கக்கூடிய ஒரு சூப்பரான பால் கடம்பு இப்ப பாக்க போறோம். ரொம்ப கம்மியான பொருட்களை வைத்து செய்யக்கூடிய இந்த ஸ்வீட் எல்லாராலயும் விரும்பி சாப்பிடப்படும். எப்பவும் ஒரே மாதிரியா எண்ணெயில் வறுத்தது பொரிச்சது என்ன செஞ்சு கொடுக்காம ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு கொடுத்து பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.
Prep Time1 minute
Active Time5 minutes
Course: deserts
Cuisine: tamil nadu
Keyword: paal kadambu
Yield: 3
Calories: 28kcal

Equipment

  • 1 பால் பாத்திரம்

தேவையான பொருட்கள்

  • 1/2 லிட்டர் பால்
  • 5 டீஸ்பூன் பால் பவுடர்
  • 2 ஏலக்காய்
  • 1 டேபிள்ஸ்பூன் அகர் அகர்
  • 1/2 கப் சர்க்கரை

செய்முறை

  • முதலில் ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் பால் சேர்த்து நன்றாக காய்ச்சவும்.
  • பிறகு அதில் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து விடவும். ஏலக்காயை நன்றாக பொடி செய்து சேர்த்துக் கொள்ளவும்
  • பால் பவுடரையும் சேர்த்து நன்றாக கிளறி பிறகு அகர் அகர் சேர்த்து அகர் அகர் கரையும் வரை நன்றாக கலந்து விடவும்
     
  • இப்போது ஒரு பாத்திரத்தில் இந்த கலவையை ஊற்றி நன்றாக ஆரிய பிறகு இரண்டு மணி நேரம் பிரிட்ஜில் வைத்து எடுத்தால் சுவையான பால் கடம்பு தயார்

Nutrition

Serving: 100g | Calories: 28kcal | Carbohydrates: 3.3g | Protein: 3.1g | Sodium: 35mg | Potassium: 213mg | Fiber: 1g

இதையும் படியுங்கள் : இந்த சம்மரில் அவசியம் சுவையான டிராகன் ப்ரூட் மில்க் ஷேக் இப்படி செய்து பாருங்க!