மதிய உணவுக்கு ஏற்ற பசலைக்கீரை முட்டை பொரியல் இப்படி செய்து பாருங்க! அசத்தலான சுவையில் இருக்கும்!

- Advertisement -

எப்போதும் ஒரே போன்று முட்டைப் பொரியல் செய்து சுவைத்து போர் அடித்துவிட்டதா? அப்படியெனில் சற்று வித்தியாசமாக பசலைக்கீரையைப் பயன்படுத்தி முட்டைப் பொரியல் செய்து சுவையுங்கள். முட்டை உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது பல நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது.

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : அடிக்கிற வெயிலுக்கு உடல் சூட்டை தணிக்கும் வெந்தயக் கீரை பருப்பு சப்ஜி இப்படி செய்து பாருங்கள்!

- Advertisement -

அதை பசலை கீரையுடன் சேர்த்து சமைக்கும்போது நிச்சயம் வித்தியாசமான சுவையில் இருக்கும். மேலும் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். சரி, இப்போது பசலைக்கீரை முட்டை பொரியலை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

Print
No ratings yet

பசலைக்கீரை முட்டை பொரியல்| Palak Egg scramble in Tamil

எப்போதும் ஒரே போன்று முட்டைப் பொரியல் செய்து சுவைத்து போர் அடித்துவிட்டதா? அப்படியெனில் சற்று வித்தியாசமாக பசலைக்கீரையைப் பயன்படுத்தி முட்டைப் பொரியல் செய்து சுவையுங்கள். முட்டை உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது பல நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது. அதை பசலை கீரையுடன் சேர்த்து சமைக்கும்போது நிச்சயம் வித்தியாசமான சுவையில் இருக்கும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: Palak Egg Scramble, பசலக்கீரை
Yield: 4 people
Calories: 250kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 கப் பசலைக்கீரை நறுக்கியது
  • 4 முட்டை
  • 3 டேபிள் ஸ்பூன் மெஸரெல்லா சீஸ்
  • 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில்
  • உப்பு தேவையானஅளவு
  • மிளகுத் தூள் தேவையானஅளவு

செய்முறை

  • முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பசலைக்கீரையைப் போட்டு நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்
  • பின்அதில் சீஸை சேர்த்து பிரட்டி விட வேண்டும்.
  • பின்புமுட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து கிளறி, உப்பு மற்றும் மிளகுத் தூள் தூவி பிரட்டி இறக்கினால், பசலைக்கீரை முட்டை பொரியல் ரெடி!!!

Nutrition

Serving: 100g | Calories: 250kcal | Carbohydrates: 43g | Protein: 20g | Fat: 65.5g | Cholesterol: 300mg