- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
வெந்தயக் கீரையை நம் வீட்டிலேயே எளிமையாக வளர்த்து விடலாம். கைப்பிடி அளவிற்கு வெந்தயத்தை எடுத்து மண்ணில் ஊன்றி வைத்தால் போதும்! ஒரே வாரத்தில் வெந்தயக்கீரை சூப்பராக முளைத்துவிடும். கொளுத்தும் வெயிலில் கீரை வகைகளை சேர்த்துக்கொள்வது உடம்புக்கு ரொம்ப நல்லது. குறிப்பா வெந்தயக்கீரை குளிர்ச்சியை தரக்கூடியது என்பதால் அடிக்கடி உணவில் சேர்ப்பது நல்லது. ஒரேமாதிரி சமைக்காமல் இந்த மாதிரி வித்தியாசமாக பருப்பு சப்ஜி செய்து சாப்பிடலாமே….! வாருங்கள் இதனை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Ingredients
Method
கடலைப்பருப்பைமஞ்சள்தூள் சேர்த்து, குழையாமல் வேகவையுங்கள். கீரையை சுத்தம் செய்யுங்கள். பூண்டு, வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்குங்கள்.
எண்ணெயைக்காய வைத்து கடுகு, சீரகம் தாளித்து பூண்டு சேருங்கள். பூண்டு வதங்கியதும் வெங்காயத்தையும் சேர்த்து வதக்குங்கள். அத்துடன் கீரை, மிளகாய்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, பருப்பை சேருங்கள்.
சிறுதீயில் நன்கு வதக்கி எடுக்கும்பொழுது எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து கிளறி இறக்குங்கள். தண்ணியாக இல்லாமல் சிறிது கெட்டியாக இருப்பதுதான், ஸ்பெஷல். சுவையான வெந்தயக்கீரைபருப்பு சப்ஜி தயார்






