சூப்பரான ஸ்நாக்ஸ் சாப்பிட நினைத்தால் பன்னீர் சீஸ் பால்ஸ் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!

- Advertisement -

குழந்தைகள் முதல் பெரியவர்கள் பன்னீர் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அப்படி எல்லாருக்கும் பிடித்த பன்னீரில், மொறுமொறுனு பொட்டெட்டோ சீஸ் பால்ஸ் செய்து சாப்ப்பிட்டால் எவ்வளோ சுவையாக இருக்கும். பன்னீர் சீஸ் பால்ஸ் எப்படி எளிதாக நம் வீட்டிலேயே செய்யலாம் என்பதை பார்க்கலாம். மாலைப்பொழுதுகளை கடைகளில் கிடைக்கும் சமோசா, பஜ்ஜி, போண்டாவோடுதான் பெரும்பாலும் கடக்க வேண்டியிருக்கிறது. இவை தவிர்த்து கொஞ்சம் வித்தியாசமான சுவையில் கொறிக்க என்ன செய்யலாம்? என‌ யோசிப்பவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும். உங்கள் வீட்டில் விஷேசம் என்றால், யோசிக்கவே வேண்டாம், இந்த பன்னீர் சீஸ் பால்ஸ் செய்து அசத்துங்கள்.

-விளம்பரம்-

இவை சுவையுடன் ஆரோக்கியத்தையும் கொடுக்கக்கூடியவை. வெளிப்புறத்தில் நன்றாக மொறு, மொறு வென்று இருக்கும். உள்புறத்தில் சீஸின் சுவையுடன் சீஸியாகவும், சிக்கனுடன் சேர்ந்து ஒரு சிறந்த சுவையை உங்களுக்கு வழங்கும். உங்கள் வீட்டு நிகழ்ச்சிகளில் இது இடம்பெறும்போது அந்நிகழ்ச்சிகளும் அழகாகும். இதை ஸ்டாட்டராக எடுத்துக்கொள்ளலாம். பன்னீர் கலவையுடன், உள்ளே ஒரு சிறிய சீஸ் துண்டை வைத்துவிட்டீர்கள் என்றால், நீங்கள் அதை கடிக்கும்போது சீஸின் சுவை மற்றும் ஒட்டிக்கொள்ளும் தன்மையும் சேர்ந்து உங்களுக்கு வித்யாசமான உணர்வைக் கொடுக்கும்.

- Advertisement -

பன்னீர் வைத்து நாம் ஈவினிங் ஸ்நாக்ஸ் நிறைய செய்து கொடுப்போம். ஆனால் பன்னீர் சீஸ் பால்ஸ் அற்புதமான ஒரு சுவையில் செய்திருக்க மாட்டோம். அதைத்தான் நாம் என்று எப்படி செய்வது என்று பார்க்கப் போகிறோம். சீஸ் மற்றும் பன்னீர் வைத்து செய்யக்கூடிய இந்த ஒரு ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் சாப்பிடக்கூடிய அருமையான ஒரு ஸ்நாக்ஸ் ஆக இருக்கும். இவற்றை தயாரித்து நீங்கள் பிரிட்ஜில் வைத்துக்கொள்ளலாம். உங்கள் விருந்தினர்கள் வரும்போது அவர்களுக்கு எடுத்து பொறித்துக்கொடுக்கலாம். சுடசுட சீஸ் சுவையுடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். இதற்கு உங்கள் விருப்பத்திற்கு எதில் வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம்.

Print
No ratings yet

பன்னீர் சீஸ் பால்ஸ் | Paneer Cheese Balls Recipe In Tamil

குழந்தைகள் முதல் பெரியவர்கள் பன்னீர் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அப்படி எல்லாருக்கும் பிடித்த பன்னீரில், மொறுமொறுனு பொட்டெட்டோ சீஸ் பால்ஸ் செய்து சாப்ப்பிட்டால் எவ்வளோ சுவையாக இருக்கும். பன்னீர் சீஸ் பால்ஸ் எப்படி எளிதாக நம் வீட்டிலேயே செய்யலாம் என்பதை பார்க்கலாம். மாலைப்பொழுதுகளை கடைகளில் கிடைக்கும் சமோசா, பஜ்ஜி, போண்டாவோடுதான் பெரும்பாலும் கடக்க வேண்டியிருக்கிறது. இவை தவிர்த்து கொஞ்சம் வித்தியாசமான சுவையில் கொறிக்க என்ன செய்யலாம்? என‌ யோசிப்பவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும். உங்கள் வீட்டில் விஷேசம் என்றால், யோசிக்கவே வேண்டாம், இந்த பன்னீர் சீஸ் பால்ஸ் செய்து அசத்துங்கள். இவை சுவையுடன் ஆரோக்கியத்தையும் கொடுக்கக்கூடியவை. வெளிப்புறத்தில் நன்றாக மொறு, மொறு வென்று இருக்கும். உள்புறத்தில் சீஸின் சுவையுடன் சீஸியாகவும், சிக்கனுடன் சேர்ந்து ஒரு சிறந்த சுவையை உங்களுக்கு வழங்கும்.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: evening, snacks
Cuisine: Indian
Keyword: Paneer Cheese Balls
Yield: 4 People
Calories: 321kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 வாணலி
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 200 கி பன்னீர்
  • 1 பெரிய வெங்காயம்
  • 3 பச்சை மிளகாய்
  • 1 டேபிள் ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி
  • 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு
  • உப்பு                              தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • சீஸ் துண்டுகள் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் பன்னீரை துருவி வைத்துக் கொள்ளவும் பின் அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு, சோள மாவு, மிளகாய்த்தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  • பின் ஒரு பவுளில் சோள மாவு எடுத்து அதனை சிறிதளவு தண்ணீர் விட்டு கலந்து கொள்ளவும்.
  • பின் சிறிதளவு பன்னீர் கலவையை கையில் எடுத்து உருட்டி அதன் நடுவில் சீஸ் துண்டை வைத்து நன்கு உருட்டிக் கொள்ளவும்.
  • பின் உருட்டிய கலவையை கரைத்து வைத்திருக்கும் சோளமாவில் புரட்டி எடுத்து பின் பிரெட் தூளில் பிரட்டி எடுத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, இந்த பன்னீர் உருண்டைகளை ஒவ்வொன்றாக போட்டு எண்ணையில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான மற்றும் வித்தியாசமான பன்னீர் சீஸ் பால்ஸ் தயார். அதனை தக்காளி சாஸ் அல்லது சில்லி சாஸூடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 400g | Calories: 321kcal | Carbohydrates: 3.6g | Protein: 25g | Fat: 2.5g | Saturated Fat: 1.6g | Sodium: 18mg | Potassium: 71mg | Fiber: 1.4g | Vitamin A: 505IU | Vitamin C: 25mg | Calcium: 407mg | Iron: 20mg

இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் பன்னீர் நூடுல்ஸ் இப்படி ஒரு முறை செய்து பாருங்க! இரவு டிபனுக்கு பக்காவாக இருக்கும்!