பன்னீர் மசாலா பாக்கெட் லாலிபாப், வித்தியாசமான உணவுகள் கடைகளில் சாப்பிட வேண்டும் என்று இல்லை! வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்!!!

- Advertisement -

பன்னீர் உணவுகள் அப்படின்னா எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும்.. பன்னீர் உணவுகளை  பன்னீர் கிரேவி, பன்னீர்  65 ,பன்னீர்  மஞ்சூரியன் நிறைய பன்னீர் உணவுகள்  இருக்கு. பன்னீர் சைவ உணவுகளின் முட்டை  அப்படின்னு சொல்லலாம். அந்த அளவுக்கு சைவ உணவுகளில்  முட்டையோட இடத்தை பன்னீர் நிரப்பி கொண்டு உள்ளது. அப்படி பன்னீர் உடலுக்கு நிறைய நல்ல விஷயங்களை கொடுக்குது. பன்னீர்ல இருக்குற கால்சியம், புரதம் மேலும் நிறைய ஊட்டச்சத்துக்கள் இந்த பன்னீரில் நிறைஞ்சிருக்கு.

-விளம்பரம்-

பன்னீர் உணவை உணவில் எடுத்துக் கொள்ளும்போது அது உடலுக்கு ரொம்பவே நல்ல சக்தியை கொடுக்குது. பன்னீர் வெறும் சுவை மட்டும் கொடுக்கிறது இல்ல உடலுக்கு நல்ல பல ஊட்டச்சத்துக்களும் கொடுக்கக்கூடிய ஒரு பொருளா இருக்கு. அப்படியே இந்த பன்னீர்ல நாம இப்ப என்ன பண்ண போறோம் அப்படின்னா பன்னீர் மசாலா பாக்கெட் லாலிபப் செய்து சாப்பிட போறோம். இந்த பன்னீர் மசாலா பாக்கெட் லாலிபாப் எப்படி சுவையா செய்து கொடுக்கும் பொழுது குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும். 

- Advertisement -

நார்மலா ஐஸ்கிரீம் என்றால் ரொம்பவே எல்லாருக்கும் பிடிக்கும் அதே ஐஸ்கிரீம் வடிவத்தில் நம்ம கார உணவுகள் செய்து கொடுக்கும் போது வித்தியாசம் இருக்கு அப்படின்னு சொல்லிட்டு குழந்தைகள் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. இந்த உணவு பெரியவர்களுக்கும் ரொம்பவே பிடித்தமான ஒரு உணவாக இருக்கும். இது பன்னீர்ல செய்வதுனால ரொம்பவே ஆரோக்கியமான ஒரு உணவாகவும் இருக்கும். சரி வாங்க இந்த பன்னீர் மசாலா பாக்கெட்லாலிபாப் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

Print
5 from 1 vote

பன்னீர் மசாலா லாலிபாப் | Paneer Masala Lollypop Recipe In Tamil

பன்னீர் மசாலா பாக்கெட் லாலிபாப் எப்படி சுவையா செய்து கொடுக்கும் பொழுது குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும். நார்மலா ஐஸ்கிரீம் என்றால் ரொம்பவே எல்லாருக்கும் பிடிக்கும் அதே ஐஸ்கிரீம் வடிவத்தில் நம்ம கார உணவுகள் செய்து கொடுக்கும் போது வித்தியாசம் இருக்கு அப்படின்னு சொல்லிட்டு குழந்தைகள் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. இந்த உணவு பெரியவர்களுக்கும் ரொம்பவே பிடித்தமான ஒரு உணவாக இருக்கும். இது பன்னீர்ல செய்வதுனால ரொம்பவே ஆரோக்கியமான ஒரு உணவாகவும் இருக்கும். சரி வாங்க இந்த பன்னீர் மசாலா பாக்கெட்லாலிபாப் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: starters
Cuisine: tamil nadu
Keyword: Paneer Masala Lollypop
Yield: 4
Calories: 318kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் பன்னீர்
  • 1 வெங்காயம்
  • 1 பச்சைமிளகாய்
  • 1 தக்காளி
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 5 பிரட்
  • 2 ஸ்பூன் மைதா மாவு
  • 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 கப் பிரட் தூள்
  • 1 ஸ்பூன் கடுகு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை

  • முதலில் பன்னீரை எடுத்து நன்றாக பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.பொன் நிறமாக வெங்காயம் வதங்கிய பிறகு அதில்  இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
  •  பிறகு அதில் பொடியாக  பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.பின் மிளகாய் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு ஒரு ஐந்து நிமிடம் மூடி போட்டு வேக வைக்கவும்.
  • பின் கொத்தமல்லி தழை தூவி கிளறினால் பன்னீர் மசாலா ரெடி. தயார் செய்து வைத்துள்ள மசாலாவை தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.பின் பிரட்டுகளை எடுத்துக்கொண்டு பிரட்டின் மூன்று புறம் உள்ள ஓரங்களை கட் செய்து கொள்ள வேண்டும்.
  • பிறகு பிரட்டை சப்பாத்தி உருட்டும் உருட்டையை வைத்து தேய்த்துக் கொள்ள வேண்டும். மெதுவாக தேய்த்தாலே லேசாகிவிடும் இப்படி அனைத்து பிரட்டுகளையும் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு தயார் செய்து வைத்துள்ள பன்னீர் மசாலாவை பிரட் நடுவில் வைத்து ஐஸ் குச்சிகளை வைக்க வேண்டும்.மைதா மாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பசை போல கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • மைதா மாவு பேஸ்டில் பிரட்டு ஓரங்களில் தடவி அவைகளை நன்றாக செவ்வக வடிவில் மூடி விட வேண்டும்.இப்படி மூடி வைத்துள்ள பிரட்டுகளை மைதா மாவில் பிரட்டி பின்பு பொடித்து வைத்துள்ள பிரட் தூள்களில் பிரட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தது அதில் பிரட்டி வைத்துள்ள மாசாலாவை உள்ளே வைத்த பிரட்டுகளை எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான மொறுமொறு வென்ற பாக்கெட் பன்னீர் மசாலா லாலிபாப்  தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 318kcal | Carbohydrates: 30.7g | Protein: 30.7g | Fat: 6g | Saturated Fat: 0.6g | Trans Fat: 61g | Vitamin C: 61mg

இதையும் படியுங்கள் : இஞ்சி பன்னீர் ஃப்ரை இனி எளிமையாக வீட்டிலயே செய்யலாம்! ருசியான மாலை நேர ஸ்நாக்ஸ் ரெடி!