Home காலை உணவு வீட்ல இட்லி தோசைக்கு மாவு இல்லனா இந்த மாதிரி ஒரு தடவை பருப்பு அடை செஞ்சு...

வீட்ல இட்லி தோசைக்கு மாவு இல்லனா இந்த மாதிரி ஒரு தடவை பருப்பு அடை செஞ்சு பாருங்க!

trapioca

பொதுவா நம்ம வீட்ல என்ன இருக்கோ இல்லையோ இட்லி தோசை மாவு கண்டிப்பா இருக்கும். என்னதான்  இட்லி தோசை பூரி பொங்கல் சப்பாத்தி அப்படின்னு நிறைய  டிபன் வகைகள் இருந்தாலும் எல்லார் வீட்டிலேயும் டெய்லியும் இட்லி தோசை தான் இருக்கும். வீட்ல ஒரு வாரத்துக்கு தேவையான இட்லி தோசை மாவு அரைச்சு வச்சுக்கிட்டா வீட்ல வேலை பாக்குற தாய்மார்களுக்கு அது ரொம்பவே ஈசியா இருக்கும்.

-விளம்பரம்-

எல்லாருமே தோசை இட்லி தான் விரும்பவும் செய்வாங்க ஏன்னா அதுதான் ரொம்ப ஈஸியா செரிமானம் ஆகும். ஆனா ஒரு சில நேரங்களில் இட்லி தோசை மாவு தீர்ந்து போய் இருக்கும் அந்த மாதிரி நேரத்துல ஏதாவது டிபன் செய்யணும் அப்படின்னா இந்த பாரம்பரியமான பருப்பு அடைய டிபன் செஞ்சு கொடுக்கலாம். இந்த பருப்பு அடை சாப்பிடுவதற்கு ரொம்ப ருசியா இருக்கும். நிறைய பெரிய வெங்காயம் போட்டு செய்ததால் சாப்பிடுவதற்கு அப்பப்ப க்ரன்சி ஆவும் வாசனையாகவும் ரொம்ப டேஸ்டா இருக்கும்.

இந்த பருப்பு அடைக்கு மாவை புளிக்க வைக்கணும் அப்படின்ற அவசியம் கிடையாது. மாவு அரைச்சு உடனே நம்ம பருப்பு அடை செய்யலாம். டக்குனு முடிவு பண்ணி மதியம் அரிசி ஊற வச்சா நைட் இந்த டிபன் ரெடியாகிவிடும். இதுல நம்ம சேக்குற ஒரு சில பொருட்கள் நம்ம செரிமானத்துக்கு உதவியா இருக்கும். ரொம்ப பெரிய டேஸ்ட்டா அட்டகாசமா இருக்கக்கூடிய இந்த பாரம்பரியமான பருப்பு அடை எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்

trapioca
Print
2.50 from 2 votes

பருப்பு அடை | Paruppu Adai Recipe In Tamil

எல்லாருமேதோசை இட்லி தான் விரும்பவும் செய்வாங்க ஏன்னா அதுதான் ரொம்ப ஈஸியா செரிமானம் ஆகும். ஆனா ஒரு சில நேரங்களில் இட்லி தோசை மாவு தீர்ந்து போய் இருக்கும் அந்த மாதிரி நேரத்துல ஏதாவது டிபன் செய்யணும் அப்படின்னா இந்த பாரம்பரியமான பருப்பு அடைய டிபன் செஞ்சு கொடுக்கலாம். இந்த பருப்பு அடை சாப்பிடுவதற்கு ரொம்ப ருசியா இருக்கும். நிறைய பெரிய வெங்காயம் போட்டு செய்ததால் சாப்பிடுவதற்கு அப்பப்ப க்ரன்சி ஆவும் வாசனையாகவும் ரொம்ப டேஸ்டா இருக்கும்.
Prep Time6 hours
Active Time20 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Paruppu Adai
Yield: 4
Calories: 232kcal

Equipment

  • 1 தோசை கல்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 கப் பச்சரிசி
  • 1 கப் கடலை பருப்பு
  • 1 துண்டு இஞ்சி
  • 4 பல் பூண்டு
  • 3 காய்ந்த மிளகாய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 3 சின்ன வெங்காயம்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 பச்சைமிளகாய்
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  • 1 கொத்து கறிவேப்பிலை

செய்முறை

  • ஒரு கப் பச்சரிசி மற்றும் ஒரு கப் கடலை பருப்பை நான்கு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
  • பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் ஊற வைத்துள்ள அரிசிமற்றும் பருப்பை சேர்த்து அதனுடன் இஞ்சி பூண்டு சீரகம் சோம்பு சின்ன வெங்காயம் மஞ்சள் தூள் காய்ந்த மிளகாய் உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  •  
    அரைத்த மாவுடன் நறுக்கிய பெரிய வெங்காயம் கொத்தமல்லி இலைகள் கருவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
  • இப்பொழுது ஒரு தோசை கல்லில் கலந்து வைத்துள்ள மாவை தோசை மாதிரி ஊற்றி எடுத்தால் சுவையான பருப்பு அடை தயார்

Nutrition

Serving: 2nos | Calories: 232kcal | Carbohydrates: 256g | Cholesterol: 1mg | Potassium: 3.2mg | Vitamin A: 13IU

இதையும் படியுங்கள் : காலை டிபனுடன் சாப்பிட சூப்பரான கம்பு மெது வடை இப்படி செய்து பாருங்க எவ்வளவு செய்தாலும் காலியாகும்!