ரசம் சாதம், சாம்பார் சாதமுடன் சாப்பிட ருசியான கிராமத்து பருப்பு துவையல் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!

- Advertisement -

எல்லா வகையான கலவை சாதத்திற்கும் ரொம்பவும் சூப்பரான காம்பினேஷனாக இருக்கக்கூடிய இந்த பருப்பு துவையல் செய்வதும் ரொம்பவும் எளிதாக இருக்கும். தேங்காய் எல்லாம் போட்டு செய்வதால், இதன் ருசி அபரிமிதமாக இருக்கும். பத்து நிமிடத்தில் செய்யும் சூப்பரான ஒரு பருப்பு துவையல் ரெசிபி தான் இது. நாம்  செய்யக்கூடிய பருப்பு சாம்பார் விட இதன் சுவை முற்றிலும் வித்தியாசமானது. வீட்டில் இருக்கும் மசாலா பொருட்களை வைத்தே இந்த சுவையான சூப்பரான பருப்பு துவையல் எளிதாக செய்யலாம்.

-விளம்பரம்-

 கலவை சாதம் மட்டும் அல்லாமல் டிபன் வகைகளுக்கும், சூடான சாதத்திற்கும் தொட்டுக் கொள்ள அவ்வளவு அருமையாக இருக்கும், இந்த பருப்பு துவையல் எப்படி எளிதாக செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.பெரும்பாலும் பருப்பு  வைத்து சாம்பார் , கூட்டுத் தான் செய்வார்கள் ஒருமுறை இப்படி செய்து பாருங்கள்… வாங்க ரெசிபியை பார்க்கலாம்.

- Advertisement -
Print
3 from 3 votes

பருப்பு துவையல் | Paruppu Thuvayal Recipe In Tamil

எல்லா வகையான கலவை சாதத்திற்கும் ரொம்பவும் சூப்பரான காம்பினேஷனாக இருக்கக்கூடிய இந்த பருப்பு துவையல்செய்வதும் ரொம்பவும் எளிதாக இருக்கும். தேங்காய் எல்லாம் போட்டு செய்வதால், இதன் ருசிஅபரிமிதமாக இருக்கும். பத்து நிமிடத்தில் செய்யும் சூப்பரான ஒரு பருப்பு துவையல் ரெசிபிதான் இது. நாம்  செய்யக்கூடிய பருப்பு சாம்பார்விட இதன் சுவை முற்றிலும் வித்தியாசமானது. வீட்டில் இருக்கும் மசாலா பொருட்களை வைத்தேஇந்த சுவையான சூப்பரான பருப்பு துவையல் எளிதாக செய்யலாம்.
வாங்க ரெசிபியைபார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time5 minutes
Course: chutney, Side Dish
Cuisine: tamilnadu
Keyword: Paruppu Thuvayal
Yield: 4

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1/2 கப் துவரம்பருப்பு
  • 2 டீஸ்பூன் தேங்காய்
  • 1  சிவப்பு மிளகாய்
  • 5 மிளகு
  • 1 பல் பூண்டு
  • 3 கறிவேப்பிலை
  • உப்பு சுவைக்கேற்ப

செய்முறை

  • ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெயை சூடாக்கி, பருப்பு, தேங்காய், சிவப்பு மிளகாய், மிளகு, கறிவேப்பிலைமற்றும் பூண்டு ஆகியவற்றை வறுக்கவும்.
  • பருப்பு பொன்னிறமாக மாறும் வரை இதை வறுக்கவும். பருப்பை கருக்கிவிட கூடாது. ஸ்டோவை  அணைத்து, ஒரு தட்டுக்கு மாற்றவும், அதை குளிரவிடவும்.
  • கலவை ஆறியதும் உப்பு சேர்த்து மிகக் குறைந்த தண்ணீரைப் பயன்படுத்தி கொரகொரப்பாக அரைக்கவும். சூடான சாதம், நல்லெண்ணெய் உடன் பரிமாறவும்

Nutrition

Serving: 400g | Carbohydrates: 76g | Protein: 10g | Fat: 1g | Sodium: 4mg | Potassium: 107mg | Fiber: 2.7g