இட்லி அப்படின்னு சொன்னாலே உலகத்துல பெஸ்ட் உணவு இட்லி அப்படிங்கிறது எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம். ஈஸியா செரிமானமாக கூடியது மட்டும் இல்லாமல் எல்லா விதமான நபர்களும் சாப்பிடக்கூடிய ஒரு உணவு இட்லி தான். எந்த ஒரு நோய் இருக்குது உடல் ரொம்ப முடியாமல் இருக்கு அப்படின்னு யாராக இருந்தாலும் அவர்கள் சாப்பிடக்கூடிய உணவு பொருள் இட்லி. அப்படி அரிசி மாவு உளுந்து சேர்த்து செய்யற இந்த இட்லியை இல்லாம புதுசா பாசிப்பருப்பை பயன்படுத்தி ஒரு சூப்பரான மசாலா இட்லி பண்ண போறோம்.
இந்த சுவையான பாசிப்பருப்பு இட்லி மாவு அரைச்சுட்டீங்கன்னா அதை வைத்து நீங்கள் இட்லி, தோசை, பணியாரம் என்ன வேணாலும் உங்களுக்கு புடிச்சது செய்துக்கலாம். இந்த பாசிப்பருப்பு இட்லி ரொம்ப ப்ரோட்டீன் அதிகமா இருக்கும். இதுவும் நம்ம இட்லி மாவு அரைக்கிற அதே மாதிரி தான் பண்ண போறோம். இருந்தாலும் இதுல வெறும் பாசிப்பருப்பை மட்டும் யூஸ் பண்ணி கொஞ்சம் வெஜிடபிள்ஸ் எல்லாம் சேர்த்து ரொம்ப சுவையா ஒரு ஆரோக்கியமான ஒரு இட்லி செய்து கொடுக்கப் போறோம்.
இந்த இட்லி எல்லாருக்கும் ரொம்பவே புடிக்கும். குழந்தைகள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. இதுல நம்ம கேரட், கொத்தமல்லி எல்லாம் சேர்க்கப்போறதுனால மஞ்சள் கலரு பச்சை கலரு, ரெட் கலரு ஒரு மாதிரி கலர்ஃபுல்லான இட்லியா இருக்க போகுது. அதனால குழந்தைகள் இன்னும் வேணும் அப்படின்னு கேட்டு சாப்பிட போறாங்க. கலர் மட்டும் இல்ல இதோட சுவையும் ரொம்பவே நல்லா இருக்கும் ஆரோக்கியமானதும் கூட. சரி வாங்க இந்த சுவையான பாசிப்பருப்பு இட்லி எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
பாசிபருப்பு இட்லி | Pasiparuppu Idli in Tamil
Equipment
- 1 இட்லி பாத்திரம்
- 2 பெரிய பவுள்
- 1 கரண்டி
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 2 கப் பாசிப்பருப்பு
- 1/2 கப் அவல்
- 1/2 ஸ்பூன் வெந்தயம்
- 2 பச்சைமிளகாய்
- 1 துண்டு இஞ்சி
- 1/4 கப் கேரட்
- 1/4 கப் கொத்தமல்லி
- 1/4 ஸ்பூன் பெருங்காயதூள்
- தேவையான அளவு உப்பு
செய்முறை
- முதலில் பாசிப்பருப்பை கழுவி விட்டு ஆறிலிருந்து எட்டு மணி நேரம் வரை நன்றாக நீரில் ஊற வைக்க வேண்டும்.
- பாசிப்பருப்பு எட்டு மணி நேரம் ஊறிய பிறகு அதில் ஒரு 15 நிமிடம் ஊற வைத்த அவலை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு பாசிப்பருப்பை மிக்ஸி ஜாரில் போட்டு அத்துடன் பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து கொள்ள வேண்டும். சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- இதை ஒரு நான்கு மணி நேரம் வைத்து புளிக்க வைத்து இட்லி ஊற்றலாம். அப்படி இல்லை என்றால் இனோ ஒரு பாக்கெட் சேர்த்து அதில் கலந்து விட்டு பின்பு அதில் இட்லி ஊற்றிக் கொள்ளலாம்.
- பிறகு அரைத்து எடுத்து வைத்துள்ள பாசிப்பருப்பு மாவில் உப்பு, பெருங்காயத்தூள், கேரட், கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
- பிறகு இட்லி தட்டில் இந்த மாவை இட்லிகளாக ஊற்றி ஆவியில் வைத்து வேக வைத்து எடுத்தால் சுவையான பாசிப்பருப்பு இட்லி தயார்.