நம் வீட்டில் உள்ள பாத்திரங்களில் தொடர்ந்து சமைக்கும் பட்சத்தில் பாத்திரத்தின் அடியில் கரிபுடிச்சி விடும் அதை கழுவினாலும் அவ்வளவாக போகாது பழைய பாத்திரம் போல் இருக்கும். அதனால் இன்று ஈசியாக பாத்திரம் பளபளன்னு மின்னுவது போல் எப்படி கழுவலாம் என்பதை பார்ப்போம்.
நம்ப வீட்டில் இட்லி தோசைக்கு வைத்திருக்கும் அரைத்த மாவு காலியானதும் பாத்திரத்தின் சைடில் கொஞ்சம் கொஞ்சமாக மாவு ஓடிட்டு இருக்கும் இந்த மாவை வேஸ்ட் பண்ணாம அதை வைத்து தான் நாம் கரிந்த பாத்திரத்தை சுத்தபடுத்த பயன்படுத்த போகிறோம்.
நம் வீட்டில் காப்பர் பாத்திரம் நிறைய இருக்கும் டம்ளர், ஜக், அடிபாட்டம் பாத்திரம் இது போன்று எதுவாக இருந்தாலும் அந்த பாத்திரத்தில் மாவை எடுத்து அந்த பாத்திரத்தின் அடியில் தேய்த்து விடவும். முக்கியமாக இந்த மாவு புளித்த மாவாக இருக்க வேண்டும். எல்லா பக்கமும் தேய்த்தும் 15 நிமிடம் அல்லது 20 நிமிடங்கள நன்கு காயவிடவும்.
நன்றாக காய்ந்த பிறகு அந்த மாவு பச்சை நிறத்தில் மாறியிருக்கும். அப்பொழுது பாத்திரம் கழுவும் நாரை வைத்து நன்றாக தேய்த்து கழுவி கொள்ளுங்கள். பின் பாத்திரம் நன்கு கழுவியதும் அந்த பாத்திரம் நல்ல பளிச்சுனு பளபளன்னு புதுசு மாறி இருக்கும். ஒருமுறை இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்கள் நல்ல பலன் கொடுக்கும்.