நமக்கு பின்னர் வரும் தலைமுறைகளும் நம் பெயரை நினைவில் கொள்ளும் அளவிற்கு சொத்து சுகங்களை சேர்த்து வைத்து நமக்கு பெருமை சேர்க்ககூடிய விஷயம் மேலும் நாம் வாழ்ந்து முடித்த பின்பும் நம் சந்ததிகள் நாம் கட்டிய வீட்டில் வாழ்வதே நமக்கு பெருமை சேர்க்ககூடிய விஷயம். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் நேற்று நம்முடைய அப்பா சம்பாதித்த வீட்டையை இன்று நம்மால் பாதுகாக்க முடியாத நிலையில் நாம் உள்ளோம். அப்படி இருக்கும்போது நமக்கு பின் வரும் தலைமுறைக்கு நம்முடைய சொத்து சுகம் அழியாமல், நம்முடைய குடும்பம் செல்வ செழிப்போடு நிம்மதியாக வாழ்வதற்கு நாமும் நம் வீட்டில் இருப்பவர்களும் சம்பாதிக்கும் பணத்தை எந்த முறையில் கையாள வேண்டும் என்பதை பற்றிதான் இன்று இந்த செய்தி தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
எப்படி நாம் பணத்தை நிலையாக வைப்பது
நாம் கஷ்டபட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை பராமரிப்பது என்பது அவ்வளவு பெரிய கஷ்டமான விஷயம் கிடையாது. நாம் சம்பாதித்த பணத்தை உங்கள் கையில் வாங்கும் போது அதை எப்படி வாங்க வேண்டும் வாங்கிய பணத்தை பணப்பெட்டியில் வைக்கும்போது எப்படி வைக்க வேண்டும் என்று இந்த சிறிய மூன்று விஷயங்களை பற்றி நாம் தெரிந்து கொண்டாலே போதும் நாம் சம்பாதித்த பணத்தை மிக சுலபமாக நாம் தக்க வைத்து கொள்ளலாம் மேலும் நம் தலைமுறை செல்வச்செழிப்புடன் வாழ்வதற்கு நாம் சேர்த்து வைத்த செல்வங்கள் உதவியாக இருக்கும். இப்போது அந்த மூன்று விஷயங்கள் என்ன என்பது பற்றி நாம் பார்க்கலாம்.
முதலில் கடைபிடிக்க வேண்டியது
முதல் விஷயமாக நீங்கள் கடைப்பிடிக்க வேண்டியது உங்களுடைய கைகளில் யார் எவ்வளவு பணத்தை கொடுத்தாலும் அதை நீங்கள் வாங்கும் போது, பணத்தை உங்கள் கையில் பெற்றுக்கொண்ட பின் பெற்றுக் கொண்ட பணத்தை உங்களுடைய இரண்டு கண்களிலும் ஒற்றி வணங்கி கொள்ள வேண்டும்.
இரண்டாவது கடைபிடிக்க வேண்டியது
இரண்டாவதாக நீங்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயம் கையில் வாங்கிய பணத்தை பர்ஸ், பீரோ, கல்லாப்பெட்டியல் வைக்கும் போது ஏன் வங்கி கணக்கில் பணம் போடும் போது கூட ‘லாபம் வசி வசி’ என்ற வார்த்தையை ஒரு முறை சொல்லிவிட்டு அந்தப் பணத்தை பத்திரப்படுத்த வேண்டும். இந்த வார்த்தையை நாம் உச்சரிப்பதால் நாம் கையாளும் பணம் நம்மிடம் நிலையாக இருக்கும்.
மூன்றாவதாக கடைபிடிக்க வேண்டியது
மூன்றாவதாக நாம் கடைபிடிக்க வேண்டிய விஷயம் நாம் பணம் வைக்கும் இடம் எப்பொழுதும் நல்ல நறுமனம் நிறைந்த இடமாக அது இருக்கவேண்டும். நாம் பணம் வைக்கும இடத்தில் துளியும் துர்நாற்றம் இடமே இருக்கக் கூடாது. ஆகையால் துர்நாற்றம் வராமல் தடுப்பதற்கு நாம் பணம் வைக்கும் இடத்தில் ஏதாவது ஒரு நறுமணம் நிறைந்த பொருளை அந்த இடத்தில் வைப்பது நல்லது. உதரணமாக ஜவ்வாது, கிராம்பு, பட்டை, பச்சைக் கற்பூரம், ஏலக்காய் இதில் உங்கள் வீட்டில் இருக்கும் ஏதாவது ஒரு பொருளை பணம் வைக்கும் இடத்தில் வைப்பது உங்கள் பணம் நிலையாக இருக்கும் மேலும் நாம் பணம் வைக்கும் இடத்தில் சுத்தமாக பணம் இல்லாமல் துடைத்து எடுக்க கூடாது. ஒன்று இரண்டு நாணயங்களையாவது மிச்சம் வைப்பது மிகவும் நல்லது. இது போன்ற சின்ன விஷயங்களை நீங்கள் கடைப்பிடிப்பது மூலம் தலைமுறை தலைமுறையாக உங்கள் சந்ததியினர் செல்வ செழிப்புடன் வாழ்வார்கள்.