வெள்ளத்தில் அடித்து வந்த வித்தியாசமான மீன்!

- Advertisement -

நாம் என்னதான் அறிவியல் ரீதியாக பல முன்னேற்றங்களை அடைந்திருந்தாலும் சில சமயங்களில் நம்மளையே ஆச்சரியப்படுத்தும் இந்த இயற்கை. அப்படி நம்மளை ஆச்சரியப்படுத்தும் வகையில் தீடீர் தீடீர்ரென்று புதுவிதமான உயிரினங்களை நமது கண்களில் காட்டி நீங்கள் அறிந்து கொண்டது கடுகு அளவு தான் நீங்கள் அறியாதது கடல்லளவு உள்றது என்ற பிரமிப்பில் நம்மளை ஆழ்த்துகிறது. இந்த இயற்கையின் வழியில் அவ்வப்போது சில நிகழ்வுகள் நடக்கும் பொழுது இயற்கையின் மறைவில் வாழ்ந்து கொண்டு இருக்கும் சில உயிரினங்கள் வெளி வருகின்றனர். அந்த வகையில் ஒரு வித்தியாசமான மீன் ஒன்று கண்டுபிடிக்க பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

அப்படியே மறக்காம எங்க YouTube சேனலையும் Subscribe பண்ணிருங்க.

- Advertisement -

Youtube Sub

வெள்ளத்தில் வந்த வித்தியாசமான மீன்

இந்நிலையில் ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் பகுதிகளை சுற்றி கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணத்தினால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நகரத்தில் வீடுகள் இருக்கும் சில பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் வெள்ளப்பெருக்கு காரணமாக வெள்ளதில் வித்தியாசமான மீன் ஒன்று அடித்து வரப்பட்டு உள்ளது. அந்த மீனை அங்கிருந்து ஒரு குடும்பத்தினர் பிடித்து ஒரு பாத்திரத்தில் வைத்திருந்தனர். இதை அந்த பகுதியை சேர்ந்த ஒரு நபர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார் வித்தியாசமான ஒரு மீனை பார்த்த மக்கள் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வைரல் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பேய் மீன்

அந்த வெள்ளத்தில் அடைத்து வரப்பட்ட மீன் காபி நிறமாகவும் மற்றும் கருப்பு நிறத்துடன் உடல் முழுவதும் புள்ளிகள் காணப்பட்டு அந்த மீனின் வாய் பகுதியில் கூர்மையான மக்கள் வரிசையாக காணப்பட்டனர். இந்த மீன் பற்றிய தகவலை சேகரிக்கும் போது தான் தெரிந்தது அந்த பகுதியில் இந்த மீனை பேய் மீன் என்று அழைப்பார்களாம். நீளமான துடுப்புகளுடன் மற்றும் கோரமாண முகம் அமைப்புடன் காணப்படும் இந்த பேய்மீன் அந்தப் பக்கம் இருக்கும் கால்வாயில் வெள்ளை நீருடன் அடித்து வரப்பட்டது.

-விளம்பரம்-

பேய் மீன் வலையில் வந்தால் கெட்ட சகுனம்

இந்த மீன் அப்பகுதிகளில் தற்சமயம் பெரிதாக காணப்படுவது இல்லை என்றாலும் சில சமயங்களில் பார்க்கலாம் என்றும் சொல்கிறார்கள். ஆனால் இதை பேய் மீன் என்று அழைப்பதற்கு ஒரு காரணமும் உண்டு. இந்த பேய் மீன் மீனவர்களின் வலையில் சிக்கினால் அவர்களுக்கு கெட்ட சகுனம் ஆரம்பித்து விடும் என்ற நம்பிக்கை அங்குள்ள மக்களிடையே பரவலாக காணப்படுகிறது. அதன் காரணமாகவே இந்த மீனை பேய் மீன் என்று அழைக்கிறார்களாம். மேலும் கனமழை பெய்கிறதால் பேய் மீன் கால்வாய்களை விட்டு வெளியில் வந்திருக்கலாம் என அங்குள்ள மீனவர்கள் கூறுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here