கொசுக்கள் இல்லாத நாடு எது தெரியாமா ?ஏன் அங்கு கொசு இல்லை ?

- Advertisement -

இப்போது நம் தமிழகத்தில் பருவ மழை காலம் ஆரம்பிக்க போகிறது இந்த நேரத்தில் இந்த கொசுக்களின் தொல்லை சற்று அதிகமாகவே இருக்கும். நாம் என்னதான் கொசுக்களை ஒழிப்பதற்கு கொசுபத்தி, கொசுமருந்து என புதிது புதிதாக மருந்து பொருட்கள் வாங்கிக் கொண்டு வந்து வைத்தாலும். நாம் வைக்கும் மருந்தையும் தாண்டி நம் கண்முன்னே வீட்டுக்குள் உலாவிக் கொண்டுதான் இருக்கும். நம் உடம்பிலிருந்து இரத்தத்தை எடுத்துக் கொண்டு போனால் பரவாயில்லை அதை விட கொடுமையான மலேரியா, டெங்கு, சிக்கன் குனியா போன்ற கொடுமையான காய்ச்சல்களை உருவாக்கி விட்டு சென்று விடுகின்றனர் இத நாள் உயிரிழப்பு கூட ஏற்படும் அபாயம் உள்ளது. நாம் இந்த கொரோனா வருவதற்கு முன்பாக டெங்கு உடன் எவ்வளவு போராடி வந்தோம் என்பது உங்களுக்கு நன்றாக நினைவில் இருக்கும் நினைக்கிறேன். ஆனால் சற்று சிந்தித்துப் பாருங்களேன் கொசுக்களே இல்லாத இடத்தில் வாழ்தால் எப்படி இருக்கும் என்று எந்த தொந்தரவும் இருக்காது சொல்லப்போனால் அப்படி ஒரு இடம் இருக்கிறது.

கொசு இல்லாத ஐஸ்லாந்து

கொசுக்களே இல்லாத நாடு வடக்கு அட்லாண்டிக்கில் பகுதியில் உள்ள ஐஸ்லாந்து நாட்டில் தான் கொசுக்களே கிடையாது என்று கூறுகின்றனர். அங்கு மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் எந்த ஒரு உயிரினமும் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இங்கு இருக்கும் இன்னொரு சிறப்பு என்னவென்றால் இந்த நாட்டில் பாம்பு கூட கிடையாதாம். ஏன்னென்றால் இங்கு கொசுக்கள், பாம்புகள் போன்ற ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஊர்வன உயிரினங்கள் வாழ்வதற்கான ஏற்ற சூழ்நிலை நிலவுவது இல்லை. கொசுக்களால் ஐஸ்லாந்து நாட்டில் உள்ள கடும் குளிரை கொசுவால் தாக்குப் பிடிக்க முடியாது. எனவே இது போன்ற உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை இங்கு நிலவே இல்லை.

- Advertisement -

ஏன் கொசு வாழமுடியவில்லை

கொசுக்கள் அங்கு இல்லாததற்கு முக்கியமான காரணம் ஐஸ்லாந்தில் பெருமான்மையான காலம் நாடே உறைந்து போய் தான் இருக்கும். ஒரு வருடத்தில் மூன்று முறை ஐஸ்லாந்தை உறைந்து போய் காட்சியளிக்கும் இப்படி இருக்கும் பட்சத்தில் கொசுக்கள் கடும் குளிரையும் தாங்கிக் கொண்டு உயிர் வாழும் என்று எடுத்துக் கொண்டாலும் கொசுக்கள் இனப்பெருக்கப் செய்வதற்கு தங்களது முட்டைகளை தண்ணீரில் வைக்கும். ஆனால் ஐஸ்லாந்தில் ஒரு வருடத்தில் மூன்று முறை கடும் குளிராய் ஐஸ்லாந்து உரைந்து போய் காய்ச்சல் இருப்பதால் அங்கு இருக்கும் தண்ணீர்களும், ஏரிகளும், குளங்கள் என அனைத்துமே உறைந்த நிலையில் இருக்கும் இதனால் கொசுக்கள் இனப்பெருக்கத்திற்கு ஒரு முட்டு கட்டையாக உள்ளதால் கொசுக்கள் பூச்சிகள் என இந்த உயிரினமும் வாழ முடியாமல் போகிறது.

-விளம்பரம்-

விரைவில் கொசு நண்பர் வரலாம்

ஆனால் ஐஸ்லாந்து நாட்டில் என்னதான் கொசுக்கள் தொல்லைகள் என ஒன்றுமே இல்லை என அங்கு சென்று வரும் சுற்றுலா பயணிகள் கூறி வந்தாலும். உலகில் மாறிவரும் பருவநிலை மாற்றங்களால் விரைவில் கொசுக்கள் அங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் இப்போது ஐஸ்லாந்தில் பூச்சி வகைகளை இல்லாமல் இருந்தது. ஆனால் பருவநிலை மாற்றங்களாள் புதிய வகைகளான பூச்சி வகைகள் உருவாகின்றன எனவும் ஆகையால் விரைவில் நமது கொசு நண்பனும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here