மொறு மொறுனு ஸ்நாக்ஸாக சாப்பிட நினைத்தால் ருசியான பாகற்காய் வடை இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

காலை உணவில் இட்லி, தோசை, பொங்கலுடன் மெது வடை எவ்வளவு முக்கியமோ அதே போல் மாலை நேரத்தில் டீ அல்லது காபியுடன் மசால் வடை சாப்பிடுவது பலருக்கும் இருக்கும் பழக்கம். குறிப்பாக அலுவலகத்தில் வேலை செய்பவர்கள், பள்ளி விட்டு வீட்டுக்கு வரும் குழந்தைகள் பலருக்கும் மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். அதுவும் சூடான டீ அல்லது காபியுடன் வடை, பஜ்ஜி, போண்டா, முறுக்கு போன்ற தின்பண்டங்களை அதிகம் வைத்து ருசிப்பார்கள்.

-விளம்பரம்-

பொதுவாக வடை என்றால் உளுந்துவடை, அல்லது கடலை பருப்பு வடை மட்டுமே செய்வார்கள்..! ஆனால் நாம் இன்று பார்க்க இருப்பது பாகற்காய் வடை. பாகற்காய் பலருக்கும் பிடிக்காத காயாக கருதப்படக் கூடிய ஒன்று. பாகற்காய் என்றாலே பெரும்பாலும் முகம் சுழிப்பவர்கள் தான் அதிகம். ஆனால் பாகற்காயில் மருத்துவ பலன்கள் அதிகம் உள்ளது. ஆனால் பாகற்காயின் உடலுக்கு தேவையான பல்வேறு நன்மைகள் ஒளிந்து இருக்கிறது. உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பாகற்காயை சமையலில் சேர்ப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைக்கிறது.

- Advertisement -

உடலில் சர்க்கரையின் அளவை சமன் செய்கிறது. அதுமட்டுமன்றி, சிறுநீரகப்பை, கல்லீரலை சுத்தம் செய்து ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும். குடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. இந்த பாகற்காயின் கசப்பு சுவையின் காரணமாக பலரும் இந்த காயை ஒதுக்கி வைத்து விடுவர். குறிப்பாக குழந்தைகள் பாகற்காயை அறவே தொட மாட்டார்கள். ஆனால் ஒரு முறை பாகற்காயை இப்படி வடை செய்து சாப்பிட்டு பாருங்கள் அதன் பிறகு யாரும் பாகற்காயை ஒதுக்க மாட்டார்கள். பாகற்காய் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.

Print
No ratings yet

பாகற்காய் வடை | Pavakkai Vadai Recipe In Tamil‌

காலை உணவில் இட்லி, தோசை, பொங்கலுடன் மெது வடை எவ்வளவு முக்கியமோ அதே போல் மாலை நேரத்தில் டீ அல்லது காபியுடன் மசால் வடை சாப்பிடுவது பலருக்கும் இருக்கும் பழக்கம். குறிப்பாக அலுவலகத்தில் வேலை செய்பவர்கள், பள்ளி விட்டு வீட்டுக்கு வரும் குழந்தைகள் பலருக்கும் மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். அதுவும் சூடான டீ அல்லது காபியுடன் வடை, பஜ்ஜி, போண்டா, முறுக்கு போன்ற தின்பண்டங்களை அதிகம் வைத்து ருசிப்பார்கள். பொதுவாக வடை என்றால் உளுந்துவடை, அல்லது கடலை பருப்பு வடை மட்டுமே செய்வார்கள்..! ஆனால் நாம் இன்று பார்க்க இருப்பது பாகற்காய் வடை. பாகற்காய் பலருக்கும் பிடிக்காத காயாக கருதப்படக் கூடிய ஒன்று. பாகற்காய் என்றாலே பெரும்பாலும் முகம் சுழிப்பவர்கள் தான் அதிகம். ஆனால் பாகற்காயில் மருத்துவ பலன்கள் அதிகம் உள்ளது. ஒரு முறை பாகற்காயை இப்படி வடை செய்து சாப்பிட்டு பாருங்கள் அதன் பிறகு யாரும் பாகற்காயை ஒதுக்க மாட்டார்கள். பாகற்காய் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: evening, snacks
Cuisine: Indian, TAMIL
Keyword: pavakkai vadai
Yield: 4 People
Calories: 42kcal

Equipment

 • 1 மிக்ஸி
 • 1 பவுள்
 • 1 வாணலி

தேவையான பொருட்கள்

 • 1 கப் பச்சரிசி
 • 1 பெரிய பாகற்காய்
 • 1 பெரிய வெங்காயம்
 • 1 கொத்து கறிவேப்பிலை
 • 1 டீஸ்பூன் சீரகத்தூள்
 • 2 பச்சை மிளகாய்
 • 1 வர ‌மிளகாய்
 • 1/2 மூடி தேங்காய்
 • உப்பு தேவையான அளவு
 • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

 • முதலில் பச்சரிசியை கழுவி தண்ணீர் சேர்த்து 1 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
 • பின் ஊற வைத்த அரிசியை தண்ணீரை வடித்து மிக்ஸியில் சேர்த்து அதனுடன் காய்ந்த மிளகாய், தேங்காய் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
 • பாகற்காய், பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
 • பின்னர் நாம் அரைத்து வைத்துள்ள அரிசியில் சீரகத்தூள், உப்பு, கறிவேப்பிலை, நறுக்கி வைத்துள்ள பொருட்களை சேர்த்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
 • அதன்பிறகு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிதளவு மாவு எடுத்து வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
 • அவ்வளவுதான் 10 நிமிடங்களில் சுவையான மற்றும் ஆரோக்கியமான பாகற்காய் வடை தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 42kcal | Carbohydrates: 5.4g | Protein: 5g | Fat: 1.2g | Sodium: 5mg | Potassium: 8mg | Fiber: 2.8g | Vitamin A: 9IU | Vitamin C: 130mg | Calcium: 2mg

இதனையும் படியுங்கள் : மொறு மொறுனு முருங்கைக்கீரை மசால் வடை இப்படி செஞ்சி பாருங்கள்! காலை டிபனுக்கு பக்காவாக இருக்கும்!