- Advertisement -
இதுவரைக்கும் நாம டேஸ்ட் பண்ணாத ஒரு பக்கோடா ரெசிபியை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய வேர்க்கடலை உருளைக்கிழங்கை சேர்த்து தான் இந்த பக்கோடாவை தயார் செய்யப் போகின்றோம். இது உடலுக்கு மிக மிக ஆரோக்கியமானது. வேர்க்கடலை உடலுக்கு ஆரோக்கியமான மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களாக கருதப்படுகின்றன. கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக இருந்தாலும், தாவர புரதங்கள் நிறைந்திருப்பதால், எந்தவொரு உணவு முறையையும் பின்பற்றுபவர்களுக்கும் வேர்க்கடலை புரதத்தின் சிறந்த ஆதாரமாக அமைகிறது.
-விளம்பரம்-
வேர்க்கடலை பக்கோடா, நாவிற்கு மிக மிக சுவை தரக் கூடியது. ரெசிபி யை மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்கோங்க. வேர்க்கடலை பக்கோடாஅட்டகாசமான சுவையில் வித்தியாசமான சுவையில் ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி . நிச்சயமாக ஈவ்னிங் டீ டைம்ல ட்ரை பண்ணி பாருங்க.
- Advertisement -
வேர்க்கடலை பக்கோடா | Peanut Pakoda Recipe In Tamil
நாம டேஸ்ட் பண்ணாத ஒரு பக்கோடா ரெசிபியை தான்இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியவேர்க்கடலை உருளைக்கிழங்கை சேர்த்து தான் இந்த பக்கோடாவை தயார் செய்யப் போகின்றோம்.இது உடலுக்கு மிக மிக ஆரோக்கியமானது. வேர்க்கடலை உடலுக்கு ஆரோக்கியமான மற்றும் அத்தியாவசியஊட்டச்சத்துக்களாக கருதப்படுகின்றன. கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக இருந்தாலும், தாவரபுரதங்கள் நிறைந்திருப்பதால், எந்தவொரு உணவு முறையையும் பின்பற்றுபவர்களுக்கும் வேர்க்கடலைபுரதத்தின் சிறந்த ஆதாரமாக அமைகிறது.
Yield: 4
Calories: 63kcal
Equipment
- 1 கடாய்
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- 1 உருளைக்கிழங்கு
- 1/4 கப் வேர்க்கடலை
- 6 பூண்டு பல்
- சிறிய துண்டு இஞ்சி
- 3 பச்சை மிளகாய்
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 வெங்காயம்
- கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கிய
- 1 ஸ்பூன் கஸ்தூரி மேத்தி
- 4 டேபிள் ஸ்பூன் புளித்த தயிர்
- உப்பு தேவையான அளவு
- அரிசி மாவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் ஒரு பெரிய சைஸ் உருளைக்கிழங்கை தண்ணீரில் போட்டு வேகவைத்து தோலுரித்து, இந்த உருளைக்கிழங்கை துருவிக் கொள்ள வேண்டும். வேக வைத்துதுருவிய உருளைக்கிழங்கு தயாராக அப்படியே இருக்கட்டும். அடுத்தபடியாக 1/4 கப் அளவு வேர்க்கடலையை,கடாயில் போட்டு வறுத்து ஆறவிட்டு எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். வேர்கடலை மொறுமொறுபோடு இருக்க வேண்டும்.
- இதுவும் அப்படியே இருக்கட்டும். இப்போது போண்டாசெய்ய மசாலா அரவையை அரைக்க போகின்றோம். பூண்டு பல் தோல் உரித்தது – 6, இஞ்சி – சிறியதுண்டு, பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது – 3 அல்லது 4, சீரகம் – 1 ஸ்பூன், வறுத்தவேர்கடலை இந்த எல்லாப் பொருட்களையும் மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக தண்ணீர் ஊற்றாமல்அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- இப்போது போண்டாவிற்கு மாவு பிசைய போகின்றோம். அரைத்த இந்த மசாலா பொருட்களை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டுக் கொள்ளுங்கள். இந்தமசாலா பொருட்களோடு பொடியாக நறுக்கிய மீடியம் சைஸ் வெங்காயம் – 1, பொடியாக நறுக்கியகொத்தமல்லி தழைகள், கஸ்தூரி மேத்தி – 1 ஸ்பூன், புளித்த தயிர் – 4 டேபிள் ஸ்பூன், ஏற்கனவேவேகவைத்து துருவி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு, தேவையான அளவு உப்பு இந்த பொருட்களைசேர்த்து முதலில் நன்றாக உங்கள் கையைப் போட்டு பிசைந்து கொள்ள வேண்டும்.
- தண்ணீர் எதுவும் ஊற்ற வேண்டாம். தயிரில் இருக்கும் ஈரப்பதம் போதும். தயிரில் இருக்கும் ஈரப்பதத்தோடு இந்த மாவை பிசைந்து, இந்த மாவுடன்இறுதியாக 1 கப், அளவு அரிசி மாவை போட்டு மீண்டும் ஒருமுறை பிசைய தொடங்க வேண்டும்.
- தேவையான அளவு தண்ணீரை தெளித்து இந்த மாவை பிசைந்துகொள்ளுங்கள். மாவு மசால் வடை மாவு பதத்திற்கு வர வேண்டும். (அரிசி மாவு சேர்த்து இருப்பதால்இந்த போண்டா கிரிஸ்பியாக கிடைக்கும்.)தயார் செய்த இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாகஉருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கலாம்.
- நன்றாக காய்ந்த எண்ணெயை மிதமான தீயில் வைத்துவிட்டு, இந்த பக்கோடா களைப் போட்டு பொரித்து எடுத்து சுவைத்துப் பாருங்கள்.
Nutrition
Serving: 100g | Calories: 63kcal | Carbohydrates: 91g | Protein: 149g | Fat: 1g | Potassium: 132mg | Calcium: 21mg