காலை டிபனுக்கு பக்காவான கம்பு உருளைக்கிழங்கு ரொட்டி இப்படி செஞ்சி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

- Advertisement -

கம்பு உருளைக்கிழங்கு ரொட்டி என்பது கம்பு மற்றும் உருளைக்கிழங்கு சேர்த்து செய்யப்பட்ட ஆரோக்கியமான சுவையான முழு ரொட்டி ஆகும். இந்த கம்பு உருளைக்கிழங்கு ரொட்டி சுவை மற்றும் ஊட்டச்சத்துடன் நிரம்பியுள்ளது. அதோடு அவை சாதாரண பராத்தாவிற்கு ஒரு சிறந்த ஆரோக்கியமான பக்க உணவாகும். இந்த கம்பு உருளைக்கிழங்கு ரொட்டி செய்முறையை சில நிமிடங்களில் செய்து விடலாம் . கம்பு உருளைக்கிழங்கு ரொட்டி, தயிர், ஊறுகாய் மற்றும் கறிகளுடன் பரிமாறவும்!

-விளம்பரம்-

உடலுக்கு ஆரோக்கியம் தரும் ரெசிபியை மிக மிக சுலபமான முறையில் செய்து கொடுக்க வேண்டும். அதே சமயம் அந்த ரெசிபி சுவையானதாகவும் இருக்க வேண்டும், குழந்தைகள் விருப்பமாக சாப்பிடும் பொருளாகவும் இருக்க வேண்டும். அப்படி ஒரு சூப்பரான  கம்பு உருளைக்கிழங்கு  ரொட்டி தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம்.  

- Advertisement -

ஆரோக்கியம் தரக்கூடிய கம்பு தனியாக செய்து கொடுத்தால், கூழ்வைத்துக் கொடுத்தால் குழந்தைகள் நிச்சயம் சாப்பிட மாட்டார்கள். இப்படி சிறுதானியதுடன் உருளைக்கிழங்கு சேர்த்து செய்து லஞ்சுக்கு பாக்ஸில் போட்டு கொடுத்தால், விரும்பி சாப்பிடுவார்கள். நீங்கள் வெளியூர் செல்வதாக இருந்தால் இந்த கம்பு உருளைக்கிழங்கு ரொட்டி எடுத்து வைத்து சாப்பிடலாம். இதற்கு தொட்டுக்கொள்ள ஊறுகாய், தயிரில் காராபூந்தி சேர்த்து பச்சடி இருந்தாலும் போதும்.வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Print
4 from 2 votes

கம்பு உருளைக்கிழங்கு ரொட்டி | Pearl Millet Potato Roti

ஆரோக்கியம் தரக்கூடியகம்பு தனியாக செய்து கொடுத்தால், கூழ்வைத்துக் கொடுத்தால் குழந்தைகள் நிச்சயம் சாப்பிடமாட்டார்கள். இப்படி சிறுதானியதுடன் உருளைக்கிழங்கு சேர்த்து செய்து லஞ்சுக்கு பாக்ஸில்போட்டு கொடுத்தால், விரும்பி சாப்பிடுவார்கள். நீங்கள் வெளியூர் செல்வதாக இருந்தால்இந்த கம்பு உருளைக்கிழங்கு ரொட்டி எடுத்து வைத்து சாப்பிடலாம். இதற்கு தொட்டுக்கொள்ளஊறுகாய், தயிரில் காராபூந்தி சேர்த்து பச்சடி இருந்தாலும் போதும்.வாங்க இதை எப்படிசெய்வது என்று பார்ப்போம்.
Prep Time5 minutes
Active Time9 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Pearl Millet Potato Roti
Yield: 4
Calories: 91kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 கப் கம்பு மாவு
  • 200 கிராம் உருளைக்கிழங்கு
  • 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 1 வெங்காயம்
  • 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • கொத்தமல்லி சிறிதளவு
  • எண்ணெய், உப்பு தேவைக்கு

செய்முறை

  •  
    முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து நன்றாக மசித்துகொள்ளவும் பின் கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்
  • ஒரு கப் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து கொள்ளுங்கள்
  • ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு, வெங்காயம், எலுமிச்சைசாறு,மசித்த உருளைக்கிழங்கு, மிளகாய் தூள், உப்பு, கொத்தமல்லி போட்டு கொள்ளவும்.
  • அதனுடன் கொதிக்க வைத்த தண்ணீரை சிறிது சிறிதாகஊற்றி நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  • நன்கு பிசைந்த மாவில் சிறிது எடுத்து உருண்டைகளாக பிடியுங்கள்.
  • பின்னர் வாழை இலையில் சிறிது எண்ணெய் தடவிஅதில் மாவு உருண்டையை வைத்து ரொட்டியாக தட்டி, சூடான தோசை கல்லில் சிறிது எண்ணெய் விட்டுஇரண்டு பக்கமும் வேகவைத்து எடுத்து சுவைக்கவும்.

Nutrition

Serving: 2g | Calories: 91kcal | Carbohydrates: 19g | Protein: 7.6g | Sodium: 84mg | Potassium: 198mg | Fiber: 4g | Iron: 0.1mg

இதையும் படியுங்கள் : மசாலா வாசனையுடன் ருசியான சிக்கன் கைமா ரொட்டி! ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!