- Prep
- 10 min
- Cook
- 10 min
- Serves
- 4
- Cuisine
- tamil nadu
- Course
- Breakfast, dinner
இட்லி, தோசைக்கு பதிலாக கோதுமை மாவு இருந்தா கொஞ்ச நேரத்தில் அருமையான சிக்கன் கைமா ரொட்டி தயார் செஞ்சுடலாம். இதற்கு தொட்டுக்க கூட நாம் எதையும் தேட வேண்டிய அவசியமே இல்லை! சூப்பரான சுவையில் சமோசா போலவே இருக்கக்கூடிய இந்த வித்தியாசமான சிக்கன் கைமா ரொட்டி எளிதாக வீட்டில் தயாரித்திடலாம்.சிக்கன் கைமா வைத்து வித்தியாசமான முறையில், வித்தியாசமான சுவையில் ஒரு சிக்கன் கைமா ரொட்டி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
அசைவ பிரியர்களுக்கு இந்த சிக்கன் கைமா ரொட்டி மிகமிகப் பிடிக்கும். மசாலா பொருட்களை சேர்த்து , செய்யக்கூடிய இந்த சிக்கன் கைமா ரொட்டி வழக்கமாக செய்யப்படும் இட்லி, தோசை, சப்பாத்தி, விட அதீத ருசியாக இருக்கும்
பல பேர் வீடுகளில் இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற ஒரே மாதிரி யான உணவு தான் செய்வார்கள்.ஆனால் அதை கொஞ்சம் வித்தியாசமான முறையில், கோதுமை மாவு சேர்த்து சிக்கன் கைமா ரொட்டி எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்
Ingredients
Method
சிக்கனை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெட்டி வைத்த சிக்கனுடன்,சிறிது உப்பு சேர்த்து ஆவியில் வேக வைக்க வேண்டும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அதனுடன் கரம் மசாலா, மிளகாய் தூள், வேக வைத்த சிக்கன், தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்து கிளறி இறக்கவும்.
பின்பு கலவை ஆறியதும் ,அதனுடன் கோதுமை மாவு, உப்பு சேர்த்து நன்கு பிசையவும்,
பிசைந்த மாவை எழுமிச்சை யளவு உருண்டைகளாக எடுத்து, சிறிது மொத்தமாக தேய்த்து, தோசைக்கல்லில் இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
சுவையான சிக்கன் கைமா ரொட்டி தயார்






