ஆசைப்பட்டு கொஞ்சம் அதிகமா சாப்பிட்டா நமக்கு வர ஒரே பிரச்சனை இந்த செரிமான பிரச்சனை தான். அந்த மாதிரி செரிமான பிரச்சனைகள் ஏதாவது விருப்பப்பட்டு சாப்பிட்டதுக்கு அப்புறம் வந்துருச்சுன்னா இந்த மாதிரி மிளகு சீரகம் வச்சு ஒரு சாப்பாடு செய்து சாப்பிட்டீங்கன்னா எல்லா பிரச்சனையும் சரியா போயிடும்.
அப்படியே உங்களோட செரிமான மண்டலத்தை சரி பண்றதுக்கும் சளி பிரச்சனைகளை சரி பண்றதுக்கும் இந்த மிளகு சாதம் ரொம்பவே ஹெல்ப் பண்ணும். மிளகில் அவ்வளவு ஆன்டி ஆக்சிடென்ட் இருக்கு. அது உடலுக்கு ரொம்பவே நல்ல நன்மை தரும். சாதாரணமாகவே மிளகு சேர்த்து உணவு எடுத்துக்கும் பொழுது உடலுக்கு அது ரொம்ப நல்ல பலன்களை நிறையவே கொடுக்கும்.
மிளகு செரிமான மண்டலத்தை பலப்படுத்துகிறது. சளி தொல்லைகளில் இருந்து தடுக்குது. தினமும் 1\2 ஸ்பூன் மிளகுதூளை பால்ல சேர்த்து சாப்பிடும் பொழுது அது உடம்புக்கு ரொம்ப நல்ல பலனை கொடுக்கும். அப்படிப்பட்ட மிளகை கொஞ்சமாக ரசத்துல சேர்த்து சாப்பிடும்போது அது நமக்கு நிறைய நன்மைகள் கொடுப்பதினால் மிளகு வச்சு சாதம் செய்து சாப்பிடும்போது அது உடலுக்கு இன்னும் எத்தனை நன்மைகளை கொடுக்கும். சரி வாங்க அப்படியே மிளகு சாதம் எப்படி செய்து சாப்பிடுவது அப்படின்னு பார்க்கலாம்.
மிளகு சாதம் | Pepper Rice Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் சாதம்
- 1 ஸ்பூன் மிளகு தூள்
- 1/2 ஸ்பூன் சீரகதூள்
- 3 காய்ந்த மிளகாய்
- 2 வெங்காயம்
- 1 தக்காளி
- 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- 1/2 ஸ்பூன் தனியா தூள்
- 1 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 கைப்பிடி புதினா
- 1 கைப்பிடி கொத்தமல்லி
- உப்பு தேவையான அளவு
- நெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து நெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை , காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
- காய்ந்த மிளகாய் வதக்கி எடுத்து ஆறவைத்து பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். ஒன்றிரண்டாக அரைத்து இருந்தாலும் பரவாயில்லை எடுத்துக் கொள்ளலாம்.
- பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும். பொடியாக நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
- வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்றாக குழைய வதக்கிக் கொள்ளவும்.தக்காளி குழைய வதக்கி வெந்த பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
- பிறகு அதில் புதினா, கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும்.
- பிறகு அரைத்து வைத்துள்ள காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை கலவவை மசாலாக்களோடு மிளகுதூள் , சீரகதூள் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.
- பின்பு கிளறி வைத்துள்ள மிளகு மசாலாவில் சாதம் சேர்த்து கிளறி பரிமாறினால் சுவையான செரிமானத்தை சரி செய்யக்கூடிய மிளகு சாதம் தயார்.
Nutrition
இதையும் படியுங்கள் : காலை டிபனுக்கு தக்காளி அவல் உப்புமா இப்படி செஞ்சி பாருங்க! அப்புறம் அடிக்கடி செய்வீங்க!