வீட்டிலயே ஸ்வீட் செய்ய நினைத்தால் சுலபமாக பிஸ்தா பர்பி இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்! வாயில் வைத்தவுடன் கரையும்!

- Advertisement -

டிரை ஃப்ரூட்ஸ் ஆன பாதாம் பிஸ்தா முந்திரி கருப்பு திராட்சை அத்திப்பழம் பேரிச்சம்பழம் அனைத்துமே உடலுக்கு மிக மிக நல்லது. ஒரு சிலர் தினமும் அதனை சாப்பிடுவார்கள் ஆனால் சிலருக்கு அதை அப்படியே சாப்பிட பிடிக்காது. அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள் அதனை வேறு விதமாக செய்து சாப்பிடுவது வழக்கம். அந்த வகையில் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான பிஸ்தா பருப்புகளை வைத்து பிஸ்தா பர்பி எப்படி வீட்டிலேயே செய்வது என்று பார்க்கலாம்.

-விளம்பரம்-

தனியாக இந்த டிரைப்ரட்ஸ் களை சாப்பிடுவதைவிட இந்த மாதிரி ஏதாவது ஒரு இனிப்பாக செய்து சாப்பிட்டால் சுவையாகவும் இருக்கும் அதை நேரத்தில் ஆரோக்கியமாகவும் இருக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு மிக மிகப் பிடித்த ஒரு இனிப்பு ஸ்னாக்ஸ் ஆக இந்த பர்பி இருக்கும். பெரும்பாலும் இந்த மாதிரியான பார்பிகளை நாம் கடைகளில் தான் வாங்கி சாப்பிட்டிருப்போம் ஆனால் இப்பொழுது ஆரோக்கியமான முறையில் அவற்றை செய்கிறார்களா என்பதில் பலருக்கும் சந்தேகம் எழுகிறது.

- Advertisement -

அவர்களெல்லாம் முடிந்த அளவிற்கு அனைத்தையும் வீட்டிலேயே செய்து அவர்களது குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். அதே மாதிரி இந்த பிஸ்தா பற்றிய நாம் கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான முறையில் இருக்கும் அதே சமயத்தில் உடலுக்கும் பலவிதமான நன்மைகள் கிடைக்கும். அப்படியான ஒரு சுவையான பிஸ்தா பர்பி எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.

Print
No ratings yet

பிஸ்தா பர்பி | Pista Burfi Recipe In Tamil

டிரை ஃப்ரூட்ஸ் களை சாப்பிடுவதை விட இந்த மாதிரி ஏதாவதுஒரு இனிப்பாக செய்து சாப்பிட்டால் சுவையாகவும் இருக்கும் அதை நேரத்தில் ஆரோக்கியமாகவும்இருக்கும். குறிப்பாக குழந்தைகளுக்கு மிக மிகப் பிடித்த ஒரு இனிப்பு ஸ்னாக்ஸ் ஆக இந்தபர்பி இருக்கும். பெரும்பாலும் இந்த மாதிரியான பார்பிகளை நாம் கடைகளில் தான் வாங்கிசாப்பிட்டிருப்போம் ஆனால் இப்பொழுது ஆரோக்கியமான முறையில் அவற்றை செய்கிறார்களா என்பதில்பலருக்கும் சந்தேகம் எழுகிறது.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: sweets
Cuisine: tamil nadu
Keyword: Pista Burfi
Yield: 4
Calories: 263kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் பிஸ்தா பருப்பு
  • 3 சர்க்கரை
  • நெய் தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் ஏலக்காய்தூள்

செய்முறை

  • முதலில் ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் பிஸ்தா பருப்புகளை போட்டு நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவேண்டும்.
  • பிறகு அதனை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி விடுவதாக அரைத்து எடுத்துக் கொள்ளவேண்டும்.
  •  
    ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு கம்பி பதம் வரும் வரை அதனை நன்றாக கொதிக்க வைக்கவேண்டும்.அரைத்து வைத்துள்ள பிஸ்தா பருப்பை சர்க்கரை கரைசலில் போட்டு நன்றாக கிளற வேண்டும்.
  • பிஸ்தா கலவைகெட்டியான பதம் வந்த பிறகு ஏலக்காய் தூள் போட்டு கிளற வேண்டும். பிஸ்தா கலவையை கிளரு கிளற சிறிதளவு நெய் ஊற்றி கலந்து கொண்டே இருக்க வேண்டும்.
  • இப்பொழுது ஒரு தட்டில் சிறிதளவு நெய்யை தடவி அந்த பிஸ்தா கலவை நன்றாக கெட்டியானவுடன் அந்த தட்டில்எடுத்துக் கொட்டி சமமாக பரப்ப வேண்டும்.
  • சிறிது நேரத்திற்கு அதை அப்படியே வைத்து விட வேண்டும் ஆரிய பிறகு அதனை உங்களுக்கு தேவையான வடிவத்திற்குவெட்டி எடுத்து கொண்டால் சுவையான பிஸ்தா பர்பி தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 263kcal | Carbohydrates: 6.1g | Protein: 31g | Fat: 12g | Cholesterol: 135mg | Sodium: 132mg | Potassium: 428mg