பெண்கள் அவசியம் இதை தெரிந்து கொள்ள வேண்டிய 5 பூஜை அறை குறிப்புகள்!

- Advertisement -

நாம் வாடகை வீட்டல் இருந்தாலும் சொந்த வீடாக இருந்தாலும் வீட்டில் நாம் அதிக முக்கியதுவம் கொடுப்பது பூஜை அறையும், சமையல் அறையும் தான் இந்த இரண்டு அறையில் அதிக நேரம் செலவிடுவது என்றால் அந்த வீட்டு பெண்கள் தான். ஆகையால் இன்று பூஜை அறை சம்பந்தமாக பெண்களுக்கு சில குறிப்புகளை நாம் இன்று இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள் இந்த குறிப்புகள் எல்லாம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

-விளம்பரம்-

அந்த 5 விஷயங்கள்

பூஜை செய்யும் பொழுது தெய்வதிற்கு நாம் வெற்றிலையும் பாக்கும் வைத்து பூஜை செய்வோம். அப்படி வைக்கும் வெற்றிலை இரட்டை படையில் இருக்க வேண்டும். அதனுடைய காம்பு பகுதி மற்றும் நுனிபகுதி சேதமாகமல் சரியாக இருக்க வேண்டும். வெற்றிலையை சாமிக்கு வைக்கும் போது காம்புபகுதி சாமியின் வலது புறமும், நுனிப்பகுதி இடது புறமுமாக இருக்குமாறு வையுங்கள்.

- Advertisement -

பூஜை அறையில் விளக்குகள் ஏற்றுவது குறித்து சிலருக்கு சந்தேகம் இருக்கலாம் விளக்குகள் பூஜை அறையில் எத்தனை வேண்டுமானாலும் ஏற்றலாம் ஆனால் கண்டிப்பாம ஒரு மண்ணால் செய்யபட்ட அகல் விளக்கு ஏற்ற வேண்டும். முதலில் இந்த அகல் விளக்கை ஏற்றிய பிறகு தான் மீத விளக்கை ஏற்ற வேண்டும். இப்படி நாம் விளக்கு ஏற்றுவதால் வீட்டில் நல்லதே நடக்கும்.

நாம் தீபம் ஏற்றிய அகல் விளக்கில் ஊதுபத்தி, கம்ப்யூட்டர் சாம்பராணி, மற்றும் கற்பூரம் இவற்றை நாம் அந்த நெருப்பில் பற்ற வைத்து கொள்ளலாம். ஆனால் காமாட்சி விளக்கு, கஜலட்சுமி விளக்கு இதில் ஒருபோதும் செய்ய கூடாது

நாம் கோவிலில் அர்ச்சனை செய்து பூசாரியிடம் நாம் தேங்காய் உடைத்து வாங்கும் போது மூன்று கண் உள்ள தேங்காய் பகுதியை வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். மூன்று கண் உள்ள பகுதியை வீட்டிற்கு கொண்டுவந்தால் தான் முழுபலனும் நமக்கு கிடைக்கும்.

-விளம்பரம்-

தெய்வத்திற்கு தேங்காய் உடைத்து வைக்கும் போது மூன்று கண் உள்ள பகுதியை சாமியின் வலது புறமும், தேங்காயின் இன்னொரு பகுதியை சாமியின் இலது புறமும் வைத்து கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here